அதிகமா சேல்ஸ் ஆகும் டாடா தயாரிப்பு என்ற பெருமையை பெற்ற நெக்ஸான்... இந்த ஒரு காரணத்துக்காகவே காரை வாங்கலாம்!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாடா கார் என்ற பெருமையை நெக்ஸான் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதிகமா சேல்ஸ் ஆகும் டாடா தயாரிப்பு என்ற பெருமையை பெற்ற நெக்ஸான்... இந்த ஒரு காரணத்துக்காகவே காரை வாங்கலாம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் 33,926 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்த கார்களின் எண்ணிக்கை வெறும் 23,600 மட்டுமே. இதன் மூலம் விற்பனையில் 43.8 சதவீத வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

அதிகமா சேல்ஸ் ஆகும் டாடா தயாரிப்பு என்ற பெருமையை பெற்ற நெக்ஸான்... இந்த ஒரு காரணத்துக்காகவே காரை வாங்கலாம்!

இந்திய சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாடா கார் என்ற பெருமையை நெக்ஸான் பெற்றுள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார்கள் உடன், டாடா நெக்ஸான் போட்டியிட்டு வருகிறது.

அதிகமா சேல்ஸ் ஆகும் டாடா தயாரிப்பு என்ற பெருமையை பெற்ற நெக்ஸான்... இந்த ஒரு காரணத்துக்காகவே காரை வாங்கலாம்!

கடுமையான போட்டி நிறைந்த செக்மெண்ட்டில், டாடா நெக்ஸான் அசத்தி கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் அந்த கார் பெற்றுள்ள 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்தான். இன்னும் சொல்லப்போனால் டாடா நெக்ஸான்தான் இந்த பெருமையை பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார்.

அதிகமா சேல்ஸ் ஆகும் டாடா தயாரிப்பு என்ற பெருமையை பெற்ற நெக்ஸான்... இந்த ஒரு காரணத்துக்காகவே காரை வாங்கலாம்!

நடப்பாண்டு அக்டோபர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10,096 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை வெறும் 6,888 ஆக மட்டுமே இருந்தது. இது 46.5 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் புதுவரவான டாடா பன்ச் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

அதிகமா சேல்ஸ் ஆகும் டாடா தயாரிப்பு என்ற பெருமையை பெற்ற நெக்ஸான்... இந்த ஒரு காரணத்துக்காகவே காரை வாங்கலாம்!

மைக்ரோ எஸ்யூவி ரக காரான டாடா பன்ச், கடந்த அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதல் மாதத்திலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 8,453 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா பன்ச் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுடன், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், டாடா நெக்ஸானை போல், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

அதிகமா சேல்ஸ் ஆகும் டாடா தயாரிப்பு என்ற பெருமையை பெற்ற நெக்ஸான்... இந்த ஒரு காரணத்துக்காகவே காரை வாங்கலாம்!

எனவே வரும் மாதங்களில் அதிகம் விற்பனையாகும் டாடா கார் என்ற பெருமையை பன்ச் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றன. இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. நெக்ஸான், பன்ச் கார்களை போல் அல்ட்ராஸ் காரும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

அதிகமா சேல்ஸ் ஆகும் டாடா தயாரிப்பு என்ற பெருமையை பெற்ற நெக்ஸான்... இந்த ஒரு காரணத்துக்காகவே காரை வாங்கலாம்!

இந்த பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ள கார்களுமே, பாதுகாப்பில் தலை சிறந்து விளங்குபவை. இதுவே இந்த கார்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை கடந்த அக்டோபரில் சரிவை சந்தித்திருப்பது சற்று பின்னடைவான விஷயம் ஆகும்.

அதிகமா சேல்ஸ் ஆகும் டாடா தயாரிப்பு என்ற பெருமையை பெற்ற நெக்ஸான்... இந்த ஒரு காரணத்துக்காகவே காரை வாங்கலாம்!

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 6,730 ஆக இருந்த டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 5,128 ஆக சரிந்துள்ளது. இது 23.8 சதவீத வீழ்ச்சியாகும். பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரான டாடா அல்ட்ராஸ், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.

அதிகமா சேல்ஸ் ஆகும் டாடா தயாரிப்பு என்ற பெருமையை பெற்ற நெக்ஸான்... இந்த ஒரு காரணத்துக்காகவே காரை வாங்கலாம்!

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை டாடா டியாகோ பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 6,083 ஆக இருந்த டாடா டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 4,040 ஆக குறைந்துள்ளது. இது 33.5 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் டாடா ஹாரியர் கார் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

அதிகமா சேல்ஸ் ஆகும் டாடா தயாரிப்பு என்ற பெருமையை பெற்ற நெக்ஸான்... இந்த ஒரு காரணத்துக்காகவே காரை வாங்கலாம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு அக்டோபரில் 3,097 ஹாரியர் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் வெறும் 2,398 ஆக மட்டுமே இருந்தது. இது 29 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை புதிய டாடா சஃபாரி பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு அக்டோபரில் 1,735 புதிய சஃபாரி கார்களை விற்பனை செய்துள்ளது.

அதிகமா சேல்ஸ் ஆகும் டாடா தயாரிப்பு என்ற பெருமையை பெற்ற நெக்ஸான்... இந்த ஒரு காரணத்துக்காகவே காரை வாங்கலாம்!

புதிய டாடா சஃபாரி கார் நடப்பாண்டுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ஏழாவது மற்றும் கடைசி இடத்தை டாடா டிகோர் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1,501 ஆக இருந்த டாடா டிகோர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 1,377 ஆக குறைந்துள்ளது. இது 8.2 சதவீத வீழ்ச்சியாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 4, 2021, 19:44 [IST]
English summary
Tata motors model wise sales october 2021 nexon compact suv leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+