டாடாவின் 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி இ-கார்களை வாங்கும் ப்ளு ஸ்மார்ட்!! டெல்லியில் அதிகரிக்கும் இவி-களின் எண்ணிக்கை!

ப்ளுஸ்மார்ட் மொபைலிட்டி நிறுவனத்திற்கு மொத்தம் 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி எலக்ட்ரிக் செடான் கார்களை டெலிவிரி செய்யவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

டாடாவின் 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி இ-கார்களை வாங்கும் ப்ளு ஸ்மார்ட்!! டெல்லியில் அதிகரிக்கும் இவி-களின் எண்ணிக்கை!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தலைநகர் டெல்லியில் இருந்துதான் விரிவடைந்து வருகிறது. இதனால் தான் டெல்லியில் பயன்படுததப்படும் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை மேலும் விரிவுப்படுத்தும் விதமாக ப்ளு ஸ்மார்ட் மொபைலிட்டி நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

டாடாவின் 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி இ-கார்களை வாங்கும் ப்ளு ஸ்மார்ட்!! டெல்லியில் அதிகரிக்கும் இவி-களின் எண்ணிக்கை!

டெல்லியை சேர்ந்த பிரபலமான கேப் நிறுவனமான ப்ளு ஸ்மார்ட் உடனான கூட்டணியின்படி, இந்த நிறுவனத்திற்கு 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி எலக்ட்ரிக் செடான் கார்களை டாடா நிறுவனம் வழங்கவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் எக்ஸ்.பிரெஸ்-டி எலக்ட்ரிக் செடான் காரை சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது.

டாடாவின் 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி இ-கார்களை வாங்கும் ப்ளு ஸ்மார்ட்!! டெல்லியில் அதிகரிக்கும் இவி-களின் எண்ணிக்கை!

எக்ஸ்.பிரெஸ்-டி ஆனது கமர்ஷியல் பயன்பாட்டிற்கான டாடாவின் எலக்ட்ரிக் வாகனமாகும். முந்தைய தலைமுறை டிகோர் செடானின் தோற்றத்தில் இருந்து எக்ஸ்.பிரெஸ்-டி இவி மாடல் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுவே புதிய தலைமுறை டிகோர் இவி தனிப்பயன்பாட்டு வாகனமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாடாவின் 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி இ-கார்களை வாங்கும் ப்ளு ஸ்மார்ட்!! டெல்லியில் அதிகரிக்கும் இவி-களின் எண்ணிக்கை!

எக்ஸ்.பிரெஸ்-டி எலக்ட்ரிக் காரில் இரு பேட்டரி தேர்வுகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் ஒன்றான 16.5 kWh பேட்டரி தொகுப்பு சிங்கிள் சார்ஜில் அதிகப்பட்சமாக 165 கிமீ ரேஞ்சை (ARAI-ஆல் சோதனையின் மூலம் சான்றளிக்கப்பட்டது) வழங்குகிறது. அதுவே பெரிய அளவிலான பேட்டரி தேர்வான 21.5 kWh மூலம் 213கிமீ தொலைவிற்கு காரை இயக்கி செல்ல முடியுமாம்.

டாடாவின் 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி இ-கார்களை வாங்கும் ப்ளு ஸ்மார்ட்!! டெல்லியில் அதிகரிக்கும் இவி-களின் எண்ணிக்கை!

இவற்றுடன் சிங்கிள்-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. விரைவு சார்ஜரின் மூலம் எக்ஸ்.பிரெஸ்-டி மாடலின் 16.5 kWh பேட்டரியை வெறும் 90 நிமிடங்களில் 0-வில் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிடலாம். அதுவே பெரிய அளவிலான பேட்டரி தொகுப்பிற்கு 110 நிமிடங்கள் வரையில் தேவைப்படும். இவற்றை வழக்கமான 15 ஆம்பியர் ப்ளக் பாயிண்ட் சார்ஜரின் மூலமாகவும் சார்ஜ் ஏற்றலாம்.

டாடாவின் 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி இ-கார்களை வாங்கும் ப்ளு ஸ்மார்ட்!! டெல்லியில் அதிகரிக்கும் இவி-களின் எண்ணிக்கை!

ப்ளு ஸ்மார்ட் மொபைலிட்டி நிறுவனமானது ஏற்கனவே கூறியதுபோல், ஓர் கார் கேப் நிறுவனமாகும். இதில் என்ன சிறப்பு உள்ளது என கேட்டால், ப்ளு ஸ்மார்ட் தனது வணிகத்திற்கு முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனங்களையே பயன்படுத்துகிறது. இதுவரை டெல்லியில் ஏறக்குறைய 7 லட்ச ரைட்களை மேற்கொண்டுள்ள இந்த கேப் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களில் சுமார் 22 மில்லியன் கிமீ தொலைவை பூர்த்தி செய்துள்ளது.

டாடாவின் 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி இ-கார்களை வாங்கும் ப்ளு ஸ்மார்ட்!! டெல்லியில் அதிகரிக்கும் இவி-களின் எண்ணிக்கை!

பழைய டாடா டிகோர் எலக்ட்ரிக் செடான் கார்களை ஏற்கனவே தனது வணிகத்தில் பயன்படுத்தி வரும் ப்ளு ஸ்மார்ட், புதியதாக வாங்கப்பட்டுள்ள 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி கார்களின் மூலம் தனது கார்கள் படையை விரிவுப்படுத்தி கொள்ளவுள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்கள் (கமர்ஷியல்) பிரிவின் முதன்மை அதிகாரி ரமேஷ் துரைராஜன் கருத்து தெரிவிக்கையில், எக்ஸ்.பிரெஸ்-டி இவி உடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கமர்ஷியல் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக எலக்ட்ரிக் செடான்களை உருவாக்கியுள்ளது.

டாடாவின் 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி இ-கார்களை வாங்கும் ப்ளு ஸ்மார்ட்!! டெல்லியில் அதிகரிக்கும் இவி-களின் எண்ணிக்கை!

ப்ளு ஸ்மார்ட் மொபைலிட்டி உடன் கூட்டணி சேர்ந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் டெல்லி-என்சிஆர் பகுதியில் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு நன்றி கூறிக்கொள்கிறோம். சாலையில் 10,000 இவி-கள் என்ற முக்கிய மைல்கல்லை நாங்கள் சமீபத்தில் கடந்துள்ளோம்.

டாடாவின் 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி இ-கார்களை வாங்கும் ப்ளு ஸ்மார்ட்!! டெல்லியில் அதிகரிக்கும் இவி-களின் எண்ணிக்கை!

இது எங்களின் புதுமையான எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பிற்கு சான்றாகும். இந்த பாராட்டுகள் இவி-களை பிரதான வாகனங்களாக மாற்றுவதற்கான எங்கள் சாலை வரைப்படத்தை மேலும் வலுப்படுத்துகின்றன என்றார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எக்ஸ்.பிரஸ்-டி எலக்ட்ரிக் காரினை ரூ.9.54 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது.

டாடாவின் 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி இ-கார்களை வாங்கும் ப்ளு ஸ்மார்ட்!! டெல்லியில் அதிகரிக்கும் இவி-களின் எண்ணிக்கை!

ஏற்கனவே கூறியதுதான், முந்தைய தலைமுறை டிகோரின் அடிப்படையில் இந்த எலக்ட்ரிக் செடான் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டிற்கும் இடையே சில வித்தியாசங்களை காணலாம். குறிப்பாக பெயிண்ட்டில், எலக்ட்ரிக் கார் என்பதை வெளிக்காட்டும் விதமாக உடற்புறத்தில் ஆங்காங்கே நீல நிற தொடுதல்கள் வழங்கப்படுகின்றன. இந்த டாடா எலக்ட்ரிக் செடான் கார் எக்ஸ்.எம், எக்ஸ்.இசட், எக்ஸ்.எம்+ மற்றும் எக்ஸ்.இசட்+ என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டாடாவின் 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி இ-கார்களை வாங்கும் ப்ளு ஸ்மார்ட்!! டெல்லியில் அதிகரிக்கும் இவி-களின் எண்ணிக்கை!

இதில் முதல் இரு வேரியண்ட்களில் அளவில் சிறிய 16.5 kWh பேட்டரி தொகுப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. எக்ஸ்.பிரெஸ்-டி காரினை தனி நபர்களால் வாங்க முடியாது. இந்த எலக்ட்ரிக் காரினை அதிக எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கோ அல்லது குழுமத்திற்கு விற்பனை செய்வதற்காக டாடா அறிமுகப்படுத்தியுள்ளது. தனிநபர் வாங்குவதற்கு தான் டிகோர் இவி உள்ளதே.

Most Read Articles
English summary
Tata Motors and BluSmart Mobility partner to expand the All-Electric Fleet in Delhi-NCR.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X