கார் விற்பனையில் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர சந்தித்த டாடா மோட்டார்ஸ்... எப்படினு தெரியுமா?

கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர சந்தித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் விற்பனையில் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர சந்தித்த டாடா மோட்டார்ஸ்... எப்படினு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 24,552 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 4,418 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 456 சதவீத வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் பதிவு செய்துள்ளது.

கார் விற்பனையில் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர சந்தித்த டாடா மோட்டார்ஸ்... எப்படினு தெரியுமா?

ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 39,530 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. எனவே நடப்பாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, மே மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை 38 சதவீதம் குறைந்துள்ளது. இவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை என்பது குறிப்பிடத்தக்கது.

கார் விற்பனையில் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர சந்தித்த டாடா மோட்டார்ஸ்... எப்படினு தெரியுமா?

இதுவே பயணிகள் வாகன பிரிவை எடுத்து கொண்டால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு மே மாதம் 15,181 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 3,152 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவன பயணிகள் வாகன விற்பனை 382 சதவீதம் உயர்ந்துள்ளது.

கார் விற்பனையில் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர சந்தித்த டாடா மோட்டார்ஸ்... எப்படினு தெரியுமா?

அதே நேரத்தில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 25,095 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. எனவே பயணிகள் வாகன விற்பனையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு மே மாதத்தில், விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கார் விற்பனையில் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர சந்தித்த டாடா மோட்டார்ஸ்... எப்படினு தெரியுமா?

தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிக பயணிகள் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது. முதல் இரண்டு இடங்களை வழக்கம் போல மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன. நடப்பாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சஃபாரி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

கார் விற்பனையில் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர சந்தித்த டாடா மோட்டார்ஸ்... எப்படினு தெரியுமா?

இது ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா ஹாரியர் எஸ்யூவியின் மூன்று வரிசை வெர்ஷன் ஆகும். முதலில் கிராவிட்டாஸ் என்ற பெயரில்தான் இந்த கார் விற்பனைக்கு வருவதாக இருந்தது. எனினும் அதன்பின் டாடா நிறுவனம் தனது தனித்துவமான மாடல்களில் ஒன்றான சஃபாரியின் பெயரை இந்த புதிய காருக்கு சூட்டி, விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

கார் விற்பனையில் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர சந்தித்த டாடா மோட்டார்ஸ்... எப்படினு தெரியுமா?

பழைய டாடா சஃபாரி எவ்வளவு பிரபலம்? என்பது நம் அனைவருக்கும் தெரியும். சஃபாரி என்ற பெயருக்காகவே இந்திய வாடிக்கையாளர்கள் பலரை, தற்போது விற்பனைக்கு வந்துள்ள புதிய மாடல் ஈர்த்துள்ளது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன், டாடா சஃபாரி போட்டியிட்டு வருகிறது.

கார் விற்பனையில் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர சந்தித்த டாடா மோட்டார்ஸ்... எப்படினு தெரியுமா?

இதுதவிர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கும், புதிய டாடா சஃபாரி விற்பனையில் சவால் அளிக்கவுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் மூன்று வரிசை இருக்கை வெர்ஷன்தான், அல்கஸார் என்ற பெயரில், இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata Motors Passenger Vehicle Sales Up By 382 Per cent In May 2021. Read in Tamil
Story first published: Tuesday, June 1, 2021, 21:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X