இந்தியர்களுக்கு மலிவு விலை மின்சார கார் நிச்சயம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி... எப்போது எதிர்பார்க்கலாம்?

டாடா நிறுவனம் விரைவில் மலிவு விலை மின்சார கார்களை விற்பனைக்குக் கொண்டு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்தியர்களுக்கு மலிவு விலை மின்சார கார் நிச்சயம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி... எப்போது எதிர்பார்க்கலாம்?

இந்தியா வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், விலை குறைந்த மற்றும் குறைந்த ரேஞ்ஜ் திறன் கொண்ட மின்சார கார்களை பிரத்யேகமாக இந்தியாவிற்காக தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியர்களுக்கு மலிவு விலை மின்சார கார் நிச்சயம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி... எப்போது எதிர்பார்க்கலாம்?

தற்போது இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் மின்சார கார்களிலேயே டாடா நிறுவனத்தின் தயாரிப்பான டாடா நெக்ஸான் இவி மாடலே மிகக் குறைந்த விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக இருக்கின்றது. இந்த நிலையில் இதைவிட கூடுதல் மலிவு விலையிலான மின்சார கார்களை விரைவில் இந்தியாவில் இந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியர்களுக்கு மலிவு விலை மின்சார கார் நிச்சயம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி... எப்போது எதிர்பார்க்கலாம்?

இந்த புதிய விலைக்குறைந்த மின்சார கார்கள் அடுத்த வருடம் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. தினசரி பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த புதிய விலைக்குறைந்த மின்சார கார்களை டாடா தயாரிக்க திட்டமிட்டிருக்கின்றது. அதாவது, குறைந்த ரேஞ்ஜ் திறன்களுடன் அவை எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியர்களுக்கு மலிவு விலை மின்சார கார் நிச்சயம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி... எப்போது எதிர்பார்க்கலாம்?

விலைக் குறைப்பு நடவடிக்கைக் காரணத்திற்காகவே இந்த குறைந்த ரேஞ்ஜ் எனும் சூத்திரத்தை டாடா கையிலெடுத்திருக்கின்றது. இதுமட்டுமின்றி அதிக பிரீமியம் வசதிகளை இக்காரில் எதிர்பார்க்க முடியாது. அதேசமயம், கணிசமான அத்தியாவசிய பிரீமியம் வசதிகளை இக்காரில் எதிர்பார்க்கலாம். அந்தவகையில், 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையிலான பிரீமியம் வசதிகளுடன் இக்கார் இருக்கும்.

இந்தியர்களுக்கு மலிவு விலை மின்சார கார் நிச்சயம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி... எப்போது எதிர்பார்க்கலாம்?

மேலும், ஒரு முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 200 கிமீ தூரம் பயணிக்கக் கூடிய திறனிலேயே இக்கார்கள் இருக்கும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தற்போது விற்பனைக்கு வழங்கி வரும் நெக்ஸான் இவி மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகும்.

இந்தியர்களுக்கு மலிவு விலை மின்சார கார் நிச்சயம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி... எப்போது எதிர்பார்க்கலாம்?

இந்த மின்சார கார் ரூ. 13.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேசமயம் இதன் அதிகபட்ச விலை ரூ. 16.25 லட்சம் ஆகும். இதன் உயர்நிலை வேரியண்ட் அதிகபட்சமாக ரூ. 16.25 லட்சத்தைக் கொண்டிருக்கின்ற வேலையிலும் இந்தியாவின் குறைந்த விலை மின்சார காராகவே காட்சியளிக்கின்றது.

இந்தியர்களுக்கு மலிவு விலை மின்சார கார் நிச்சயம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி... எப்போது எதிர்பார்க்கலாம்?

இந்தியாவில் எம்ஜி நிறுவனம் இசட்எஸ் மாடலில் அதன் மின்சாரக் காரையும், ஹூண்டாய் நிறுவனம் கோனா மாடலில் எலெக்ட்ரிக் காரையும் விற்பனைச் செய்து வருகின்றது. இதில் மிக அதிக விலைக் கொண்ட மின்சார காராக ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் இருக்கின்றது. இதன் விலை ரூ. 23.75 லட்சம் ஆகும். விலையில் இதற்கு அடுத்த இடத்தில் எம்ஜி இசட்எஸ் மின்சார கார் இருக்கின்றது.

இந்தியர்களுக்கு மலிவு விலை மின்சார கார் நிச்சயம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி... எப்போது எதிர்பார்க்கலாம்?

இதன் விலை ரூ. 20.88 லட்சம் ஆகும். இத்தகைய உச்சபட்ச விலையை இக்கார்கள் கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே மிக மலிவு விலை மின்சார கார்களாக டாடா நெக்ஸான் இவி காணப்படுகின்றது. இதைக் காட்டிலும் குறைந்த விலை மின்சார கார்களை உருவாக்கும் முயற்சியிலேயே தற்போது டாடா ஈடுபட தொடங்கியிருக்கின்றது.

இந்தியர்களுக்கு மலிவு விலை மின்சார கார் நிச்சயம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி... எப்போது எதிர்பார்க்கலாம்?

டாடா நெக்ஸான் இவி மின்சார காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி எக்கசக்க சிறப்பு வசதிகளைக் கொண்ட காராகவும் இது காட்சியளிக்கின்றது. இதுபோன்ற காரணங்களினாலயே டாடா நெக்ஸான் இவி அமோகமான விற்பனை வளர்ச்சியை இந்தியாவில் பெற்று வருகின்றது.

இந்தியர்களுக்கு மலிவு விலை மின்சார கார் நிச்சயம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி... எப்போது எதிர்பார்க்கலாம்?

இதனை உறுதிப்படுத்தும் வகையில் 2020இல் அதிகம் விற்பனையான மின்சார கார் என்ற பட்டத்தை டாடா நெக்ஸான் இவி பெற்றிருக்கின்றது. கொடிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் இக்கார் 2,529 யூனிட் வரை விற்பனையைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata Motors Planning To Launch Affordable EV's In India. Read Full Details In Tamil.
Story first published: Wednesday, January 13, 2021, 15:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X