Just In
- 29 min ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 30 min ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 1 hr ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 1 hr ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
வளைச்சு வளைச்சு மீட்டிங்.. கடந்த ஆண்டே எச்சரிக்கை.. ஆக்சிஜனை 'கோட்டை' விட்டது யார்?
- Movies
மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Sports
‘சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய்’.. நடராஜன் விலகலில் எழுந்த சர்ச்சை.. உண்மை காரணம் என்ன?
- Education
கோவையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் ICAR நிறுவனம்!
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விழிப்புணர்வு அடைந்த இந்தியர்கள்... டாடாவின் பாதுகாப்பான கார்களுக்கு பெரும் வரவேற்பு... 422 சதவீத வளர்ச்சி!
டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் இந்திய சந்தையில் 29,655 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 422 சதவீத வளர்ச்சியாகும்! ஏனெனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 5,676 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

அதே சமயம் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போதும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 27,224 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதன்பின் வந்த மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 29,655 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வகையில் பார்த்தால், விற்பனையில் 9 சதவீத வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. கியா, மஹிந்திரா, டொயோட்டா மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பின்னால்தான் உள்ளன.

முதல் இரண்டு இடங்களில் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சஃபாரி காரை நடப்பாண்டு அறிமுகம் செய்துள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் 7 சீட்டர் வெர்ஷனான புதிய டாடா சஃபாரிக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுதவிர டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் டாடா நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ஆகிய கார்களும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன. இவை இரண்டுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் காரணமாகவே, டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. அத்துடன் டியாகோ, டிகோர் மற்றும் ஹாரியர் ஆகிய கார்களும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தகுந்த விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சமீப காலமாக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை அதிகரித்து கொண்டே வருவதற்கு இதுதான் மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்கள் பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குகின்றன.

சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் பலமுறை காப்பாற்றியுள்ளன. இதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் வலுவான கட்டுமான தரமே மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. வரும் காலங்களிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.