அட சூப்பரு... மீண்டும் விற்பனைக்கு வருகிறதா டாடா சஃபாரி?! வீடியோ மூலமாக பதிலளித்த தயாரிப்பு நிறுவனம்

இந்தியாவில் விற்பனையில் பல வருடங்களாக ஆட்சி செய்துவந்த சஃபாரி வாகனம் தொடர்பான வீடியோ ஒன்றினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் மூலம் இந்த நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அட சூப்பரு... மீண்டும் விற்பனைக்கு வருகிறதா டாடா சஃபாரி?! வீடியோ மூலமாக பதிலளித்த தயாரிப்பு நிறுவனம்

1998ல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சஃபாரி மிக விரைவாக வாடிக்கையாளர்களின் லைஃப் ஸ்டைல் எஸ்யூவி வாகனமாக உருமாறியது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக சந்தைப்படுத்தப்பட்டு வந்த சஃபாரியின் விற்பனை கடந்த 2019ல் நிறுத்தப்பட்டது.

அட சூப்பரு... மீண்டும் விற்பனைக்கு வருகிறதா டாடா சஃபாரி?! வீடியோ மூலமாக பதிலளித்த தயாரிப்பு நிறுவனம்

டாடா சஃபாரிக்கு அதன் எந்தவொரு சாலைக்குமான முரட்டுத்தனமான திறன் அடையாளமாக விளங்கியது. இதனால் ஆஃப்-ரோடு வாகன ஆர்வலர்களின் தேர்வுகளுள் ஒன்றாக தற்போதும் சஃபாரி உள்ளது.

அட சூப்பரு... மீண்டும் விற்பனைக்கு வருகிறதா டாடா சஃபாரி?! வீடியோ மூலமாக பதிலளித்த தயாரிப்பு நிறுவனம்

விற்பனையில் இருந்த 20 வருடங்களில் சஃபாரிக்கு அப்கிரேட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கி வந்தது. இதன்படி 2012ல் சஃபாரியின் புதிய எடிசனாக 2.2 லிட்டர், 16-வால்வு டிஒஎச்சி டீசல் என்ஜின் உடன் ஸ்ட்ரோம் எடிசன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

அட சூப்பரு... மீண்டும் விற்பனைக்கு வருகிறதா டாடா சஃபாரி?! வீடியோ மூலமாக பதிலளித்த தயாரிப்பு நிறுவனம்

5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் வழங்கப்பட்ட இந்த டீசல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் வேரியண்ட்களை பொறுத்து வேறுபட்டதாக இருந்தது. அதாவது விலை குறைவான வேரியண்ட்களில் 148 பிஎச்பி/ 320 என்எம் பவரை வெளிப்படுத்தும் வகையிலும், டாப் வேரியண்ட்களில் 154 பிஎச்பி/ 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த என்ஜின் வழங்கப்பட்டது.

அட சூப்பரு... மீண்டும் விற்பனைக்கு வருகிறதா டாடா சஃபாரி?! வீடியோ மூலமாக பதிலளித்த தயாரிப்பு நிறுவனம்

பல செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி, எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் என சஃபாரியில் வசதிகளிலும் எந்த குறையையும் டாடா வைக்கவில்லை.

அட சூப்பரு... மீண்டும் விற்பனைக்கு வருகிறதா டாடா சஃபாரி?! வீடியோ மூலமாக பதிலளித்த தயாரிப்பு நிறுவனம்

இத்தகைய சஃபாரி வாகனம் மீண்டும் விற்பனைக்கு வராதா என பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் சஃபாரியை தோற்றத்தில் அடிப்படையாக கொண்ட ஹெக்ஸா சஃபாரி எடிசன் கான்செப்ட் மாடல் கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

அட சூப்பரு... மீண்டும் விற்பனைக்கு வருகிறதா டாடா சஃபாரி?! வீடியோ மூலமாக பதிலளித்த தயாரிப்பு நிறுவனம்

இந்த ஹெக்ஸா வாகனம் டாடாவின் தொழிற்சாலை அருகே சில முறை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டதை பார்த்துள்ளோம். இதற்கு மத்தியில் தற்போது சஃபாரியை நினைவுக்கூறும் விதமாக ‘சஃபாரி- நாங்கள் உன்னை நினைக்கிறோம்' என்ற பெயரில் வீடியோ ஒன்று டாடாவின் யுடியூப் சேனல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது ஹெக்ஸா சஃபாரி எடிசனின் அறிமுகம் விரைவில் இருக்கலாம். இதனால் சஃபாரி பெயரை மீண்டும் இந்த 2021ல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் கொண்டுவர வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
2021 Tata Hexa Safari Launch Soon Tata Says We Miss Safari In New Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X