Just In
- 1 hr ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 2 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 4 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 4 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
குட் நியூஸ்.. அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. மே 1 முதல் சிறப்பு முகாம்.. தமிழக அரசு அறிவிப்பு
- Sports
அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி?
- Finance
ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போச்சு... நெக்ஸானில் தொடுத்திரை பொத்தான்கள் நீக்கம்!! அதிரடியாக புதிய வசதியை கொண்டுவந்தது டாடா...
டாடா நெக்ஸான் கார்களின் தொடுத்திரை அமைப்பில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான படத்தினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கார்களில் அவ்வப்போது கொண்டுவரப்படும் அப்கிரேட்கள் சில தரப்பு வாடிக்கையாளர்களினால் நல்ல விதமாகவும், சில தரப்பினரால் அதற்கு எதிர் மறையாகவும் பார்க்கப்படுவது வழக்கமானது தான்.

இந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவி மாடலான நெக்ஸானில் தொடுத்திரை அமைப்பில் தற்போது கொண்டுவந்துள்ள மாற்றம் சில தரப்பினரை அதிர்ச்சியில் உள்ளாக்கி உள்ளது.

அதாவது முன்பு தொடுத்திரை கட்டுப்படுத்துவதற்கு இயற்பியல் முறையில் அழுத்தக்கூடிய பொத்தான்கள் மைய ஏசி துளைகளுக்கு கீழே வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது டீம்பிஎச்பி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள படத்தில் அந்த இடத்தில் இருந்து பொத்தான்கள் நீக்கப்பட்டு, வெறுமனே ‘NEXON' முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸானில் 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அதன் எக்ஸ்இசட் வேரியண்ட்டில் இருந்து வழங்கப்படுகிறது. இதற்கு வழங்கப்பட்ட பொத்தான்கள் ஹோம், விருப்பங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்புகள் உள்ளிட்டவற்றை பெறுவதற்கும், திரையில் முன்னோக்கி, பின்னோக்கி செல்லவதற்கும் பயன்பட்டன.

இந்த பொத்தான்களுடன் இரு முனைகளிலும் வழங்கப்பட்டுவந்த சுழலும் டயல்களும் (சத்தத்தை அதிகரிக்க/ குறைக்க) தற்போது கிடைத்துள்ள படத்தில் நீக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் அனைத்தையும் இனி வரும் நெக்ஸான் கார்களில் தொடுத்திரையிலேயே பயணிகள் பெற முடியும் என தகவல்கள் கூறுகின்றன.

இதன் மூலம் நெக்ஸானின் இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை முழுவதும் டிஜிட்டல் தரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாம். ஆனால் உண்மையில் இயற்பியல் முறையிலான பொத்தான்களே மிகவும் சவுகரியமானது என்பது எங்களது கருத்து.

பார்ப்பதற்கு அவ்வளவு சிறப்பாக இல்லாவிடினும், கேபினின் மாடர்ன் அழகை சற்று குறைப்பதுபோல் இருந்தாலும் உபயோகிப்பதற்கு அவையே மிகவும் எளிமையானவை என கார் ஆர்வலர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

அதுவும் உண்மை தான், ஏனெனில் காரை இயக்கி கொண்டே, சாலையில் இருந்து பார்வையை திருப்பாமலே திரையை பொத்தான்களின் மூலம் கண்ட்ரோல் செய்வது ஈஸியாகும். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து ஒரே காரை பயன்படுத்துவோருக்கு எந்த பொத்தான் எங்கிருக்கும் என்று நன்றாகவே தெரியும்.

இதனால் தேவையான கண்ட்ரோலுக்கு தானாகவே கை அந்த பொத்தானிற்கு சென்றுவிடும். ஆனால் தொடு முறையிலான செயல்பாட்டிற்கு, ஐகான்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் ஓட்டுனர் சாலையில் இருந்து திருப்பி திரையை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

எப்படியிருந்தாலும் அப்டேட்களை விரும்பக்கூடியவர்களுக்கு டாடா நெக்ஸானில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம் பிடித்தமான ஒன்றாகவே இருக்கும். அதேநேரம் நடைமுறையை கருத்தில் கொள்பவர்கள் இந்த மாற்றத்தை அவ்வளாவாக விரும்ப மாட்டார்கள் என்பது உண்மையே.