அடேங்கப்பா!! சஃபாரி காருக்கு பிரமாண்ட விளம்பர பலகையை அமைத்த டாடா... இந்தியாவிலேயே ரொம்ப பெருசாம்!

மிக பிரமாண்ட விளம்பர பதாகையை டாடா நிறுவனம் சஃபாரி காருக்காக முக்கிய நெடுஞ்சாலை ஒன்றில் வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

அடேங்கப்பா!! சஃபாரி காருக்கு பிரமாண்ட விளம்பர பலகையை அமைத்த டாடா... இந்தியாவிலேயே ரொம்ப பெருசாம்!

டாடா நிறுவனம் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் தனது புத்தம் புதிய சஃபாரி காருக்கான விளம்பர பதாகையை நாட்டில் திறந்து வைத்துள்ளது. மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையிலேயே இப்பதாகையை நிறுவனம் நிறுவியிருக்கின்றது.

அடேங்கப்பா!! சஃபாரி காருக்கு பிரமாண்ட விளம்பர பலகையை அமைத்த டாடா... இந்தியாவிலேயே ரொம்ப பெருசாம்!

சஃபாரி காரின் பக்கம் மக்களை ஈர்க்கும் நோக்கில் இந்த பதாகை நிறுவப்பட்டிருக்கின்றது. நாட்டின் மிக முக்கியமான நெடுஞ்சாலைகளில் மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையும் ஒன்றாகும். எனவேதான் இந்த சாலையை டாடா மோட்டார்ஸ் தேர்வு செய்து, அங்கு விளம்பர பதாகையை நிறுவியுள்ளது.

அடேங்கப்பா!! சஃபாரி காருக்கு பிரமாண்ட விளம்பர பலகையை அமைத்த டாடா... இந்தியாவிலேயே ரொம்ப பெருசாம்!

28,000 சதுரஅடி அளவில் இப்பதாகை நிறுவப்பட்டுள்ளது. இதுவே தற்போது இந்தியாவில் நிறுவப்பட்டிருக்கும் பிரமாண்ட (பெரிய) விளம்பர பதாகை ஆகும். ஆகையால், இணையம் தொடங்கி வாகன உலகம் வரை ஹெட்லைன் செய்தியாக இந்த சம்பவம் மாறியிருக்கின்றது.

அடேங்கப்பா!! சஃபாரி காருக்கு பிரமாண்ட விளம்பர பலகையை அமைத்த டாடா... இந்தியாவிலேயே ரொம்ப பெருசாம்!

எக்ஸ்பிரஸ் வழிப்பாதையில் அமைந்துள்ள குன்றின் மீதே இவ்விளம்பர பதாகையை டாடா நிலை நிறுத்தியுள்ளது. இது வாகன ஓட்டிகளின் பார்வை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரணத்திற்காகவே பாதையின் நடுவில் அமைந்துள்ள இந்த மலையின்மீது பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா!! சஃபாரி காருக்கு பிரமாண்ட விளம்பர பலகையை அமைத்த டாடா... இந்தியாவிலேயே ரொம்ப பெருசாம்!

இரவு நேரங்களிலும் இந்த பதாகை பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காக மின் விளக்குகள் பல நிறுவப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற விளம்பர பதாகையை நிறுவனம் பொதுவெளியில் இது முதல் முறையல்ல. முன்னதாக ஹாரியர் எஸ்யூவி காருக்காக இதேபோன்றதொரு பதாகையை நிறுவனம் நிறுவியிருந்தது. ஆனால், 27,500 சதுர அடியிலேயே வைக்கப்பட்டது. இது தற்போது வைக்கப்பட்டிருக்கும் சஃபாரியை பதாகையைவிட 2,500 சதுர அடி குறைவாகும்.

அடேங்கப்பா!! சஃபாரி காருக்கு பிரமாண்ட விளம்பர பலகையை அமைத்த டாடா... இந்தியாவிலேயே ரொம்ப பெருசாம்!

இதேபோன்று, ஜீப் நிறுவனமும் அண்மையில் அதன் காம்பஸ் காருக்காக பதாகையை இதே சாலையில் வைத்திருந்தது. 100 அடி உயரம் மற்றும் 253 அடி அகலம் என பிரமாண்ட உருவத்தில் இப்பதாகை நிறுவப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அனைத்தையும் மிரட்டும் வகையில் 225 அடி அகலம், 125 அடி நீளத்தில் சஃபாரியின் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா!! சஃபாரி காருக்கு பிரமாண்ட விளம்பர பலகையை அமைத்த டாடா... இந்தியாவிலேயே ரொம்ப பெருசாம்!

இதற்காக 265 டன் உலோகத்தை டாடா பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. டாடாவின் புதுமுக அறிமுகமாக சஃபாரி எஸ்யூவி கார் இருக்கின்றது. அரசியல்வாதிகளின் மிகவும் பிரியமான இக்காரை அடுத்த லெவல் ஸ்டைல் மற்றும் வசதிகளுடன் நிறுவனம் தற்போது களமிறக்கியிருக்கின்றது.

அடேங்கப்பா!! சஃபாரி காருக்கு பிரமாண்ட விளம்பர பலகையை அமைத்த டாடா... இந்தியாவிலேயே ரொம்ப பெருசாம்!

ஏற்கனவே இக்காருக்கு இந்தியாவில் கூரையை பிய்த்துக் கொண்டு புக்கிங் கொட்டி வருகின்றது. இதனை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையிலேயே இவ்விளம்பர பதாகையை நிறுவனம் நிறுவியிருக்கின்றது. டாடா சஃபாரி கார் ரூ. 14.69 லட்சம் தொடங்கி ரூ. 21.45 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

அடேங்கப்பா!! சஃபாரி காருக்கு பிரமாண்ட விளம்பர பலகையை அமைத்த டாடா... இந்தியாவிலேயே ரொம்ப பெருசாம்!

ஒட்டுமொத்தமாக எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டிப்ளஸ், எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட்ப்ளஸ் ஆகிய ஆறு விதமான தேர்வுகளில் டாடா சஃபாரி விற்பனைக்குக் கிடைக்கின்றது. டாடா ஹாரியர் காரில் பயன்படுத்தப்படும் 2.0 லிட்டர் கைரோடெக் டீசல் எஞ்ஜினே சஃபாரி காரிலும் பயன்படுத்தப்படுகின்றது.

அடேங்கப்பா!! சஃபாரி காருக்கு பிரமாண்ட விளம்பர பலகையை அமைத்த டாடா... இந்தியாவிலேயே ரொம்ப பெருசாம்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் என இரு விதமான வேகக்கட்டுப்பாட்டு கருவியிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
Tata Motors Revealed India’s Biggest Car Hoarding On Mumbai-Pune Expressway. Read In Tamil.
Story first published: Thursday, April 8, 2021, 17:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X