நெக்ஸான் & அல்ட்ராஸின் புதிய டார்க் எடிசன்களின் வருகையை உறுதிப்படுத்தியது டாடா!! அறிமுகம் எப்போது தாங்க?

தற்சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் ஹெரியர் நடுத்தர-அளவு எஸ்யூவி மாடலில் மட்டுமே டார்க் எடிசனை வழங்கி வருகிறது. ஆனால் நீண்ட நாட்களுக்கு இந்த ஒரு மாடல் விற்பனை செய்யப்பட போவதில்லை.

நெக்ஸான் & அல்ட்ராஸின் புதிய டார்க் எடிசன்களின் வருகையை உறுதிப்படுத்தியது டாடா!! அறிமுகம் எப்போது தாங்க?

ஏனெனில் விரைவில் டாடாவின் நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி மற்றும் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார்களும் டார்க் எடிசனை பெறவுள்ளன. இந்த புதிய டார்க் எடிசன்கள் ஏற்கனவே டீலர்ஷிப் மையங்களை வந்தடைய துவங்கிவிட்டாலும், இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.

நெக்ஸான் & அல்ட்ராஸின் புதிய டார்க் எடிசன்களின் வருகையை உறுதிப்படுத்தியது டாடா!! அறிமுகம் எப்போது தாங்க?

ஆனால் தற்போது நெக்ஸான் & அல்ட்ராஸின் டார்க் எடிசன்கள் தொடர்பான வீடியோ ஒன்றினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வமான ஃபேஸ்புக் & இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கார்களின் அறிமுக தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

வெறுமனே ‘மிக விரைவில்' என மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஆனால் நெக்ஸானின் எரிபொருள் மாடலுடன், அதன் எலக்ட்ரிக் மாடலும் இந்த சிறப்பு பதிப்பை பெறவுள்ளது டாடாவின் இந்த பதிவின் மூலம் உறுதியாகியுள்ளது. நெக்ஸான் & அல்ட்ராஸின் டார்க் எடிசன்கள் வருகிற ஜூலை 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

நெக்ஸான் & அல்ட்ராஸின் புதிய டார்க் எடிசன்களின் வருகையை உறுதிப்படுத்தியது டாடா!! அறிமுகம் எப்போது தாங்க?

அதேபோல் இந்த புதிய டாடா கார்களுக்கான முன்பதிவுகள் சில டீலர்ஷிப் மையங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இவற்றுடன் ஹெரியர் டார்க் எடிசனின் பெயரும் டாடாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெக்ஸான் & அல்ட்ராஸின் புதிய டார்க் எடிசன்களின் வருகையை உறுதிப்படுத்தியது டாடா!! அறிமுகம் எப்போது தாங்க?

இதனால் விற்பனையில் உள்ள ஹெரியர் டார்க் எடிசனும் சில அப்கிரேட்களை பெறலாம். ஹெரியர் டார்க் எடிசனை போல் நெக்ஸான் & அல்ட்ராஸின் டார்க் எடிசன்களும், பெயருக்கு ஏற்ப வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை அடர் கருப்பு நிறத்தில் பெற்று வரவுள்ளன.

நெக்ஸான் & அல்ட்ராஸின் புதிய டார்க் எடிசன்களின் வருகையை உறுதிப்படுத்தியது டாடா!! அறிமுகம் எப்போது தாங்க?

வெளிப்பக்கம் இந்த இரு கார்களிலும், பளபளப்பான அட்லஸ் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளது. முன்பக்கத்தில் ரேடியேட்டர் க்ரில், காற்று ஏற்பான் உள்பட முன் பம்பரின் அடிப்பகுதி கூட கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

நெக்ஸான் & அல்ட்ராஸின் புதிய டார்க் எடிசன்களின் வருகையை உறுதிப்படுத்தியது டாடா!! அறிமுகம் எப்போது தாங்க?

அதேநேரம் முன்பக்க மற்றும் பின்பக்க பேஸ் தட்டுகள், பின்பக்க பூட் மற்றும் கீழ் ஜன்னல் லைன் பகுதிகளில் க்ரே நிறத்தை எதிர்பார்க்கலாம். ஹெரியரில் வழங்கப்படுவதை போல் ‘DARK' முத்திரை இந்த புதிய கார்களில் முன் ஃபெண்டரில் வழங்கப்பட உள்ளது.

நெக்ஸான் & அல்ட்ராஸின் புதிய டார்க் எடிசன்களின் வருகையை உறுதிப்படுத்தியது டாடா!! அறிமுகம் எப்போது தாங்க?

இவற்றுடன் அலாய் சக்கரங்களும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட உள்ளன, என்றாலும் அதன் 16 இன்ச் அளவில் எந்த மாற்றமும் இருக்காது. வெளிப்புறத்தில் இருந்து கருப்பு நிற ட்ரீட்மெண்ட் நிச்சயம் இந்த புதிய கார்களின் உட்புறத்திற்கும் தொடரப்பட உள்ளன.

நெக்ஸான் & அல்ட்ராஸின் புதிய டார்க் எடிசன்களின் வருகையை உறுதிப்படுத்தியது டாடா!! அறிமுகம் எப்போது தாங்க?

பக்கவாட்டு மற்றும் மைய ஏசி துளைகள் கூடுதல் பளபளப்பான கருப்பு நிறத்தில் கொடுக்கப்படும். இவற்றுடன் கேபினிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக டேஸ்போர்டு மற்றும் கதவு ட்ரிம்கள் கன்மெட்டல் க்ரே நிறத்தை கொண்டிருக்கும்.

நெக்ஸான் & அல்ட்ராஸின் புதிய டார்க் எடிசன்களின் வருகையை உறுதிப்படுத்தியது டாடா!! அறிமுகம் எப்போது தாங்க?

லெதர் இருக்கைகள் நெக்ஸான் & அல்ட்ராஸின் டாப் வேரியண்ட்களில் இருந்து வழங்கப்படலாம். டார்க் எடிசன் மாடல்கள் நமக்கு தெரிந்தவரையில் நெக்ஸான் & அல்ட்ராஸின் டாப் எக்ஸ்.இசட்+ மற்றும் எக்ஸ்.இசட் ட்ரிம்களின் அடிப்படையில் வடிவமைக்கப்படலாம்.

Most Read Articles

English summary
Tata Nexon, Harrier, Altroz, Nexon EV Insta Account Teases Upcoming Dark Editions.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X