சத்தமே இல்லாமல் டாடா கார்களில் வழங்கப்படும் புதிய வசதி... லாக்டவுண் காலத்தில் இது பேருதவியாக இருக்கும்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சத்தமே இல்லாமல் குறிப்பிட்ட ஓர் வசதியை தனது இரு பிரபல கார் மாடல்களில் வழங்க ஆரம்பித்துள்ளது. அது என்ன வசதி என்பதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

சத்தமே இல்லாமல் டாடா கார்களில் வழங்கப்படும் புதிய வசதி... லாக்டவுண் காலத்தில் இது பேருதவியாக இருக்கும்...

டாடா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார் மாடல்களும் அடங்கும். இவை இரண்டுமே நிறுவனத்தின் அதிகாப்பு வசதிகள் கொண்ட கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. பாதுகாப்பு திறனில் நான்கு நட்சத்திர ரேட்டிங்கை இக்கார் பெற்றிருக்கின்றது.

சத்தமே இல்லாமல் டாடா கார்களில் வழங்கப்படும் புதிய வசதி... லாக்டவுண் காலத்தில் இது பேருதவியாக இருக்கும்...

இத்தகைய சிறப்புமிக்க கார் மாடல்களிலேயே மிகவும் அமைதியாக சிறப்பு வசதி ஒன்றை டாடா மோட்டார்ஸ் தற்போது வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டயர் கிட்டையே நிறுவனம் இரு கார் மாடல்களிலும் வழங்க தொடங்கியுள்ளது.

சத்தமே இல்லாமல் டாடா கார்களில் வழங்கப்படும் புதிய வசதி... லாக்டவுண் காலத்தில் இது பேருதவியாக இருக்கும்...

முன்னதாக இந்த கிட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏப்ரல் 2021-க்கு பின் கிடைக்கும் டியாகோ, டிகோர் கார் மாடல்களிலேயே இந்த சிறப்பு கிட் வழங்கப்படுகின்றது. டயர் பழுதை நீக்க இந்த கிட் உதவும். இந்த டயர் பாதுகாப்பு பேக்கில், ஏர் கம்ப்ரஸ்ஸர் (air compressor) மற்றும் திரவ சீலண்ட் (liquid sealant) ஆகியவற்றை நிறுவனம் வழங்குகின்றது.

சத்தமே இல்லாமல் டாடா கார்களில் வழங்கப்படும் புதிய வசதி... லாக்டவுண் காலத்தில் இது பேருதவியாக இருக்கும்...

மிக சிறிய துளை மற்றும் பஞ்சர்களில் இருந்து காக்க இது உதவும். ஏர் கம்ப்ரஸ்ஸரை பயன்படுத்த 12 சார்ஜிங் பாயிண்ட் இருந்தாலே போதுமாம். திரவத்தை பஞ்சர் உள்ள பகுதியில் ஊற்றிய பின்னர் தேவையான காற்றை நிரப்பிக் கொள்ள இந்த கம்பரஸ்ஸர் உதவியாக இருக்கும்.

சத்தமே இல்லாமல் டாடா கார்களில் வழங்கப்படும் புதிய வசதி... லாக்டவுண் காலத்தில் இது பேருதவியாக இருக்கும்...

இந்த சிறப்பு வசதியையே மிகவும் அமைதியான வழியில் டாடா மோட்டார்ஸ் வழங்க ஆரம்பித்துள்ளது. டியாகோ ஓர் ஹேட்ச்பேக் ரக காராகும். டிகோர் சப்-காம்பேக்ட் செடான் ஆகும். இவ்விரண்டிலும் பிஎஸ்6 தரத்திலான 1.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சத்தமே இல்லாமல் டாடா கார்களில் வழங்கப்படும் புதிய வசதி... லாக்டவுண் காலத்தில் இது பேருதவியாக இருக்கும்...

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. டியாகோ மற்றும் டிகோர் இரு கார்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

சத்தமே இல்லாமல் டாடா கார்களில் வழங்கப்படும் புதிய வசதி... லாக்டவுண் காலத்தில் இது பேருதவியாக இருக்கும்...

டியாகோ காரின் ஆரம்ப நிலை மாடலின் விலை ரூ. 4.85 லட்சம் ஆகும். இதன் உயர் நிலை வேரியண்ட் ரூ. 6.84 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோன்று, டிகோர் காரானது ரூ. 5.49 லட்சம் தொடங்கி ரூ. 7.63 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சத்தமே இல்லாமல் டாடா கார்களில் வழங்கப்படும் புதிய வசதி... லாக்டவுண் காலத்தில் இது பேருதவியாக இருக்கும்...

இந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காரிலேயே எந்தவொரு கூடுதல் கட்டணும் இன்றி டயர் கிட் வழங்கப்பட்டு வருகின்றது. இது, பஞ்சர் கடைகள் இல்லாத நேரங்களில் மிகவும் பயனாக இருக்கும். குறிப்பாக, தற்போது லாக்-டவுண் அறிவிக்கப்பட்டிருப்பதால் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கும் நிலை உருவாகியுள்ளது.

Image Courtesy: TYRO STATION

இந்த மாதிரியான நேரத்தில் மெக்கானிக் ஷாப்புகள் திறந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் டாடாவின் டயர் கிட் நிச்சயம் பேருதவியாக அமையும். குறிப்பாக, நகரமல்லாத பகுதிகளிலும் இது அதிக பலனை அளிக்கும்.

Most Read Articles

English summary
Tata Motors Silently Added Tyre Mobility Kit In Tiago & Tigor Cars. Read In Tamil.
Story first published: Wednesday, May 5, 2021, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X