பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க டாடாவின் அதிரடி... விரைவில் வருகிறது சிஎன்ஜி டியாகோ, டிகோர் கார்கள்...

டாடா நிறுவனம் அதன் பிரபல இரு கார் மாடல்கலை சிஎன்ஜி தேர்வில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க டாடாவின் அதிரடி... விரைவில் வருகிறது சிஎன்ஜி டியாகோ, டிகோர் கார்கள்...

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றது. சமீப சில காலமாக மட்டுமே இதன் விலையில் எந்தவொரு மாற்றமுமின்றி காணப்படுகின்றது. ஆனால், எங்கு இதன் விலை இன்னும் உயர்ந்து விடுமோ என்பதே மக்களின் அச்சமாக இருக்கின்றது.

பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க டாடாவின் அதிரடி... விரைவில் வருகிறது சிஎன்ஜி டியாகோ, டிகோர் கார்கள்...

இந்த மாதிரியான சூழ்நிலையில் டாடா நிறுவனம் அதன் இரு புகழ்வாய்ந்த கார் மாடல்களில் சிஎன்ஜி தேர்வை விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல், டீசல் எரிபொருள்களைக் காட்டிலும் கணிசமான குறைந்த விலையில் சிஎன்ஜி எரிபொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க டாடாவின் அதிரடி... விரைவில் வருகிறது சிஎன்ஜி டியாகோ, டிகோர் கார்கள்...

அதுமட்டுமின்றி, இவற்றால் ஏற்படும் காற்று மாசும் மிக குறைவு. ஆகையால், டாடா நிறுவனத்தின் சிஎன்ஜி கார்குறித்த அறிவிப்பு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பைத் தூண்ட தொடங்கியுள்ளது. டியாகோ மற்றும் டிகோர் எனும் இரு மாடல்களிலேயே டாடா நிறுவனம் சிஎன்ஜி தேர்வுகளைக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க டாடாவின் அதிரடி... விரைவில் வருகிறது சிஎன்ஜி டியாகோ, டிகோர் கார்கள்...

இவை இரண்டும் டாடாவின் புகழ்வாய்ந்த கார் மாடல்கள் மட்டுமல்ல நல்ல பாதுகாப்பு திறன்கள் கொண்ட வாகனங்களும்கூட. இவை பாதுகாப்பு திறன்கள்குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஐந்திற்கு 4 நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றன. இதுமட்டுமின்றி, சற்று குறைந்த விலை கார்களாகும் இவை இருக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க டாடாவின் அதிரடி... விரைவில் வருகிறது சிஎன்ஜி டியாகோ, டிகோர் கார்கள்...

எனவேதான் டாடாவின் அறிவிப்பு இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால், இந்த வாகனம் அடுத்த நிதியாண்டிலேயே (2022) விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், ஒரு சில டாடா கார் விற்பனையாளர்கள் ஏற்கனவே சிஎன்ஜி கிட் வாயிலாக, சிஎன்ஜி கார் தேர்வை நாட்டில் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க டாடாவின் அதிரடி... விரைவில் வருகிறது சிஎன்ஜி டியாகோ, டிகோர் கார்கள்...

இதனையே விரைவில் தனது ஃபேக்டரியிலேயே வைத்து பொருத்தி வழங்க டாடா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவின் தலைவர் ஷைலேஷ் சந்திரா கூறியதாவது,

பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க டாடாவின் அதிரடி... விரைவில் வருகிறது சிஎன்ஜி டியாகோ, டிகோர் கார்கள்...

"டாடா நிறுவனம் தற்போது பயணிகள் வாகன பிரிவில் மின்சாரம் மற்றும் ஐசிஇ (பெட்ரோல், டீசல்) வாகன தேர்வை வழங்கி வருகின்றது. இத்தேர்வை விரிவாக்கும் செய்யும் வகையில் விரைவில் சிஎன்ஜி வசதிக் கொண்ட கார்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன" என்றார்.

பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க டாடாவின் அதிரடி... விரைவில் வருகிறது சிஎன்ஜி டியாகோ, டிகோர் கார்கள்...

தொடர்ந்து, நுகர்வோர்களின் அணுகலை எளிதாக்கும் வகையில் குறைந்த வட்டி மற்றும் எளிய மாத தவணை போன்ற சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார். இது வாகன விற்பனையில் புதிய மாற்றத்தை மேற்கொள்ள உதவும்.

பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க டாடாவின் அதிரடி... விரைவில் வருகிறது சிஎன்ஜி டியாகோ, டிகோர் கார்கள்...

கடந்த சில மாதங்களாகவே டாடா டியாகோ, டிகோர் கார்களின் விற்பனையை பட்டைய கிளப்பும் வகையில் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் சிஎன்ஜி தேர்வை இக்காரில் டாடா கொண்டு வர இருப்பது இக்கார்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என நம்பப்படுகின்றது.

பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க டாடாவின் அதிரடி... விரைவில் வருகிறது சிஎன்ஜி டியாகோ, டிகோர் கார்கள்...

டாடா டியாகோ கார் இந்தியாவில் ரூ. 4.85 லட்சம் முதல் ரூ. 6.84 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. சிஎன்ஜி தேர்வைப் பெற இருக்கும் மற்றுமொரு மாடலான டாடா டிகோர் இந்தியாவில் ரூ. 5.49 லட்சம் முதல் ரூ. 7.63 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த விலையும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Tata Motors Soon To Launch CNG Kit Tiago & Tigor Models. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X