டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி சேர்ந்தது டிபிஜி ரைஸ் க்ளைமேட்!! நிறுவனத்தின் மதிப்பு $ 9.1 பில்லியனாக உயர்வு!

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (டிஎம்எல்) மற்றும் டிபிஜி ரைஸ் க்ளைமேட் ஆகியவை இன்று ஒரு பிணைப்பு ஓப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த கூட்டணிக்கான காரணம் மற்றும் எதிர்கால திட்டங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி சேர்ந்தது டிபிஜி ரைஸ் க்ளைமேட்!! நிறுவனத்தின் மதிப்பு $ 9.1 பில்லியனாக உயர்வு!

இந்த கூட்டணியின் மூலம் டிபிஜி ரைஸ் க்ளைமேட் அதன் இணை முதலீட்டாளர் ADQ உடன் இணைந்து, புதிதாக இணைக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்யும். டாடா நிறுவனத்தில் 11%-இல் இருந்து 15% பங்குகளை பாதுகாக்க, கட்டாய மாற்றத்தக்க கருவிகளில் 9.1 பில்லியன் டாலர்கள் வரை சமபங்கு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி சேர்ந்தது டிபிஜி ரைஸ் க்ளைமேட்!! நிறுவனத்தின் மதிப்பு $ 9.1 பில்லியனாக உயர்வு!

இதற்காக டிபிஜி ரைஸ் க்ளைமேட் நிறுவனம் அதன் இணை முதலீட்டாளர்களுடன் சேர்ந்து ரூ.7,500 கோடி வரையில் முதலீடு செய்யவுள்ளது. புதிய நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து முதலீடுகளையும் திறன்களையும் மேம்படுத்துவதோடு எதிர்கால முதலீடுகளை மின்சார வாகனங்கள், பிரத்யேக பேட்டரி இவி தளங்கள், மேம்பட்ட வாகன தொழிற்நுட்பங்கள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் பேட்டரி தொழிற்நுட்பங்களில் மேற்கொள்ள ஊக்குவிக்கவுள்ளது.

டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி சேர்ந்தது டிபிஜி ரைஸ் க்ளைமேட்!! நிறுவனத்தின் மதிப்பு $ 9.1 பில்லியனாக உயர்வு!

அடுத்த 5 ஆண்டுகளில், புதிய டிபிஜி ரைஸ் க்ளைமேட் நிறுவனம், டாடா மோட்டார்ஸில் 10 இவி-களின் போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் மற்றும் டாடா பவர் லிமிடெட் உடன் இணைந்து இந்தியாவில் விரைவான இவி மாற்றத்தை எளிதாக்குவதற்காக ஒரு பரவலான சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்கவுள்ளது.

டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி சேர்ந்தது டிபிஜி ரைஸ் க்ளைமேட்!! நிறுவனத்தின் மதிப்பு $ 9.1 பில்லியனாக உயர்வு!

இதுகுறித்து டாடா மோட்டார்ஸின் தலைவர் என். சந்திரசேகரன் பேசுகையில், இந்தியாவில் சந்தை சூழலுக்கு ஏற்ப மின்சார பயணிகள் வாகனங்களை உருவாக்கும் எங்கள் பயணத்தில் டிபிஜி ரைஸ் க்ளைமேட் எங்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பை கவனத்துடன் உருவாக்கும் அதேவேளையில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் அற்புதமான தயாரிப்புகளில் நாங்கள் தொடர்ந்து முனைப்புடன் முதலீடு செய்வோம்.

டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி சேர்ந்தது டிபிஜி ரைஸ் க்ளைமேட்!! நிறுவனத்தின் மதிப்பு $ 9.1 பில்லியனாக உயர்வு!

2030-க்குள் 30% மின்சார வாகனங்கள் பயன்பாட்டு விகிதம் இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையில் முன்னணி பங்கு வகிக்க நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம் என்றார். டிபிஜி ரைஸ் க்ளைமேட்டின் மேலாண்மை பங்குதாரரும், டிபிஜியின் ஸ்தாபக பங்குதாரருமான ஜிபி கூல்டர், இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தை மின்மயமாக்குவதற்கு டாடா மோட்டார்ஸுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி சேர்ந்தது டிபிஜி ரைஸ் க்ளைமேட்!! நிறுவனத்தின் மதிப்பு $ 9.1 பில்லியனாக உயர்வு!

இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்கு மற்றும் கொள்கைகளால் ஊக்கப்படுத்தப்படும் இவி இயக்கத்திற்கான மாற்றத்தில் குறிப்பிடத்தக்க வேகம் உள்ளது. அத்துடன் பசுமையான தீர்வுகளுக்கான நுகர்வோர் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த புதிய முதலீடு, டிபிஜி ரைஸ் க்ளைமேட்டின் கார்பன் அல்லாத போக்குவரத்தில் கவனம் செலுத்துகிறது. மேலும் இந்தியாவில் டிபிஜியின் நீண்ட வரலாற்றை உருவாக்குகிறது என்றார்.

டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி சேர்ந்தது டிபிஜி ரைஸ் க்ளைமேட்!! நிறுவனத்தின் மதிப்பு $ 9.1 பில்லியனாக உயர்வு!

முதல் சுற்று மூலதன உட்செலுத்துதல் 2022 மார்ச் 22க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முழு நிதியும் 2022 இறுதிக்குள் செலுத்தப்படும். இந்த பரிவர்த்தனையில் மோர்கன் ஸ்டான்லி மற்றும் ஜேபி மோர்கன் ஆகியோர் டாடா மோட்டார்ஸின் கூட்டு நிதி ஆலோசகர்களாகவும், போஃபா செக்யூரிட்டீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் டிபிஜி ரைஸ் க்ளைமேட்டின் பிரதிநிதிகளாகவும் உள்ளனர்.

டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி சேர்ந்தது டிபிஜி ரைஸ் க்ளைமேட்!! நிறுவனத்தின் மதிப்பு $ 9.1 பில்லியனாக உயர்வு!

அதேபோல் இந்த பரிவர்த்தனைக்கான சட்ட ஆலோசகர்களாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கைதான் அண்ட் கோ-வும், டிபிஜி ரைஸ் க்ளைமேட் நிறுவனத்திற்கு ஷர்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் & கோ, கிளியரி கோட்லீப்-பும் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த பரிவர்த்தனை முன் நிபந்தனைகள் மற்றும் வழக்கமான ஒப்புதல்களுக்கு உட்பட்டது.

டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி சேர்ந்தது டிபிஜி ரைஸ் க்ளைமேட்!! நிறுவனத்தின் மதிப்பு $ 9.1 பில்லியனாக உயர்வு!

109 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான டாடா க்ரூப்பின் ஓர் அங்கமாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் 34 பில்லியனில் நிகர மதிப்பை கொண்ட நிறுவனமாகும். கார்கள், லாரிகள், பேருந்துகள் மற்றும் பிக்-அப் ட்ரக்குகளை தயாரிப்பதில் உலகளவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குவது உங்களுக்கே நன்றாக தெரியும்.

டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி சேர்ந்தது டிபிஜி ரைஸ் க்ளைமேட்!! நிறுவனத்தின் மதிப்பு $ 9.1 பில்லியனாக உயர்வு!

இந்தியா, இங்கிலாந்து, தென்கொரியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனிஷியாவில் வணிகத்திற்காக 103 துணை நிறுவனங்கள், 9 இணை நிறுவனங்கள், 4 கூட்டு நிறுவனங்கள் மற்றும் 2 கூட்டு செயல்பாடுகளின் ஆதரவில் டாடா மோட்டார்ஸ் உள்ளது. 2021 மார்ச் 31 நிலவரப்படி, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிற சிஐஎஸ் நாடுகளில் டாடா மோடடார்ஸின் வணிக மற்றும் பயணிகள் வாகனங்கள் பரவியுள்ளன.

Most Read Articles

English summary
Tata Motors to raise $1 BN in its Passenger Electric Vehicle business at a valuation of upto $9.1 BN from TPG Rise Climate.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X