2021 டிகோர் இவி ஜிப்ட்ரான் காரை வெளியீடு செய்தது டாடா மோட்டார்ஸ்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இவி காரை இன்று (ஆகஸ்ட் 18) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் செடான் காரின் ரேஞ்ச், சிறப்பம்சங்கள், வசதிகள் உள்ளிட்டவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 டிகோர் இவி ஜிப்ட்ரான் காரை வெளியீடு செய்தது டாடா மோட்டார்ஸ்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இந்த டாடா டிகோர் இவி கார் மிக முக்கிய சிறப்பம்சமாக, பிராண்டின் ஜிப்ட்ரான் அதி-வோல்டேஜ் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் டிகோர் இவி-ஐ வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

2021 டிகோர் இவி ஜிப்ட்ரான் காரை வெளியீடு செய்தது டாடா மோட்டார்ஸ்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

ஆனால் இப்போதில் இருந்து இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை ரூ.21,000 என்ற டோக்கன் தொகையுடன் நாடு முழுவதும் உள்ள டாடா டீலர்ஷிப் மையங்களில் மேற்கொள்ளலாம். ஜிப்ட்ரான் தொழிற்நுட்பத்தை முதன்முறையாக நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் டாடா நிறுவனம் வழங்கியது.

2021 டிகோர் இவி ஜிப்ட்ரான் காரை வெளியீடு செய்தது டாடா மோட்டார்ஸ்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

அதனை தொடர்ந்து இந்த தொழிற்நுட்பத்தை பெறும் இரண்டாவது டாடா காராக டிகோர் இவி விளங்குகிறது. இதனால் இந்த எலக்ட்ரிக் காம்பெக்ட் செடானில் மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச் மற்றும் விரைவு சார்ஜிங் தொழிற்நுட்பத்தை பெற முடியும்.

2021 டிகோர் இவி ஜிப்ட்ரான் காரை வெளியீடு செய்தது டாடா மோட்டார்ஸ்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

சார்ஜிங் விஷயத்தில் மட்டுமில்லாமல், ஜிப்ட்ரான் பவர்ட்ரெயினால் 2021 டிகோர் இவி-யின் மற்ற அம்சங்களும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு உள்ளன.

 • எலக்ட்ரிக் மோட்டார்: 55 கிலோவாட்ஸ்
 • பேட்டரி தொகுப்பு: 26kWh
 • பேட்டரி வகை: லித்தியம்-இரும்பு
 • 2021 டிகோர் இவி ஜிப்ட்ரான் காரை வெளியீடு செய்தது டாடா மோட்டார்ஸ்!! அறிமுகம் எப்போது தெரியுமா?
  • அதிகப்பட்ச டார்க்: 170 என்எம்
  • முடுக்கம் (ஆக்ஸலரேஷன்): 5.7 வினாடிகள்
  • ரேஞ்ச்: 250கிமீ (எதிர்பார்க்கப்படுகிறது)
  • விரைவான சார்ஜிங் நேரம்: 1 மணிநேரத்தில் 0%- 80%
  • நார்மல் சார்ஜிங் நேரம்: 8.5 மணிநேரத்தில் 0%- 100%
  • 2021 டிகோர் இவி ஜிப்ட்ரான் காரை வெளியீடு செய்தது டாடா மோட்டார்ஸ்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

   தோற்றம்:

   புதிய டிகோர் இவி ஜிப்ட்ரான் காரின் உட்புற மற்றும் வெளிப்பக்க தோற்றத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. வெளிப்பக்க டிசைன் மாற்றங்களை இந்த எலக்ட்ரிக் செடான் கார் அதன் எக்ஸ்.பிரெஸ்-டி மாடலில் இருந்து பெற்றுவரும் என தெரிகிறது.

   2021 டிகோர் இவி ஜிப்ட்ரான் காரை வெளியீடு செய்தது டாடா மோட்டார்ஸ்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

   இந்த வகையில்,

   • புதிய ஹெட்லேம்ப்கள்
   • 3-அம்பு டிசைன் உடன் புதிய முன்பக்க க்ரில்
   • ரீடிசைனில் டெயில்லேம்ப்கள்
   • வண்ண நிறங்களில் ஹைலைட்கள்
   • புதிய அலாய் சக்கரங்கள்
   • உள்ளிட்டவற்றை டிகோர் இவி ஜிப்ட்ரான் காரில் டாடா நிறுவனம் வழங்கவுள்ளது.

    2021 டிகோர் இவி ஜிப்ட்ரான் காரை வெளியீடு செய்தது டாடா மோட்டார்ஸ்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

    உட்புறம் & தொழிற்நுட்பம்

    உட்புற கேபினில் புதிய டிகோர் இவி கார் இருக்கைகள், டேஸ்போர்டு மற்றும் கதவு பேனல்கள் உள்ளிட்டவற்றில் பளிச்சிடும் தையல்களுடன் புதிய உள்ளமைவில் வழங்கப்பட உள்ளது. இதனால் நிச்சயம் வெளிப்பக்க தோற்றத்திற்கு ஏற்ற உட்புற கேபினை டிகோர் இவி-யில் எதிர்பார்க்கலாம்.

    2021 டிகோர் இவி ஜிப்ட்ரான் காரை வெளியீடு செய்தது டாடா மோட்டார்ஸ்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

    இவை தவிர்த்து டாடா டிகோர் காம்பெக்ட் செடானில் வழக்கமாக வழங்கப்படும் கீழுள்ள அம்சங்களே டிகோர் இவி ஜிப்ட்ரானில் வழங்கப்பட உள்ளன. அவையாவன,

    • தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
    • துணை-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்
    • க்ளைமேட் கண்ட்ரோல்
    • ஐ.ஆர்.ஏ இணைப்பு தொழிற்நுட்பம்
    • 30க்கும் மேற்பட்ட இணைப்பு வசதிகள்
    • மொபைல் சார்ஜிங் துளைகள்
    • பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி
    • கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம்
    • க்ரூஸ் கண்ட்ரோல்
    • 316-லிட்டர் கொள்ளளவில் பின்பக்க பூட் ஸ்பேஸ்
    • 2021 டிகோர் இவி ஜிப்ட்ரான் காரை வெளியீடு செய்தது டாடா மோட்டார்ஸ்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

     பாதுகாப்பு வசதிகள்

     பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் டாடா கார்கள் எப்போதும் முன்னிலையில் இருக்கும் என்பது நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். புதிய டிகோர் இவி-யும் அவ்வாறு தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான எரிபொருள் டிகோர் காரில் வழங்கப்படும் அத்தனை பாதுகாப்பு அம்சங்களும் அதன் எலக்ட்ரிக் வெர்சனிலும் வழங்கப்பட்டுள்ளன.

     இதில்,

     • இரட்டை முன்பக்க காற்றுப்பைகள்
     • இபிடியுடன் ஏபிஎஸ்
     • ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
     • ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை கொக்கி
     • சீட் பெல்ட் அணியாததை நினைவுப்படுத்தும் வசதி
     • உள்ளிட்டவை அடங்குகின்றன.

      2021 டிகோர் இவி ஜிப்ட்ரான் காரை வெளியீடு செய்தது டாடா மோட்டார்ஸ்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

      புதிய டிகோர் இவி எலக்ட்ரிக் செடானில் ஐபி67 சான்றளிக்கப்பட்ட பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தைரியமாக இந்த எலக்ட்ரிக் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 8-வருட/ 1,60,000 கிமீ பேட்டரி உத்தரவாதத்தை வழங்கவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

      ஜிப்ட்ரான் தொழிற்நுட்பம் இந்த எலக்ட்ரிக் காம்பெக்ட் செடான் காரின் செயல்திறனை மேம்படுத்தும் என்பது உறுதி. இதனால் இந்த டாடா டிகோர் மாடலில் பிரீமியம் தரத்திலான பயண அனுபவத்தை பெற முடியும். அறிமுகத்திற்கு பிறகு, இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மலிவான எலக்ட்ரிக் நான்கு-சக்கர வாகனமாக டிகோர் இவி ஜிப்ட்ரான் விளங்கவுள்ளது. ஏனெனில் இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.10 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
Tata Tigor EV Ziptron Unveiled Ahead Of India Launch On August 31.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X