மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட நெக்ஸான்!! தொடரும் டாடாவின் அப்கிரேட் நடவடிக்கைகள்...

நெக்ஸான் காரின் மேற்கூரை டிசைன் மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட நெக்ஸான்!! தொடரும் டாடாவின் அப்கிரேட் நடவடிக்கைகள்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரதான மாடல்களுள் ஒன்றான நெக்ஸானில் தொடர்ந்து மாற்றங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. இந்த வகையில் கடந்த மாதத்தில் நெக்ஸானின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட நெக்ஸான்!! தொடரும் டாடாவின் அப்கிரேட் நடவடிக்கைகள்...

அதாவது முன்பு இன்ஃபோடெயின்மெண்ட் திரையை கண்ட்ரோல் செய்ய வழங்கப்பட்டு வந்த பொத்தான்கள் நீக்கப்பட்டன, அவற்றிற்கு பதிலாக முழு தொடுத்திரையாக இன்ஃபோடெயின்மெண்ட் மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கு பல்வேறு விதமான கருத்துகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்து வருகின்றன.

மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட நெக்ஸான்!! தொடரும் டாடாவின் அப்கிரேட் நடவடிக்கைகள்...

அதனை தொடர்ந்து நெக்ஸானின் 5-ஸ்போக் அலாய் சக்கரங்களின் டிசைன் மாற்றப்பட்டதாக சமீபத்தில் படங்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தற்போது இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி காரின் மேற்கூரை டிசைன் மாற்றப்பட்டுள்ளது.

மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட நெக்ஸான்!! தொடரும் டாடாவின் அப்கிரேட் நடவடிக்கைகள்...

நெக்ஸானின் மேற்கூரையில் வழங்கப்படும் தண்டவாளங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் தான் அப்டேட் செய்தது. இந்த அப்டேட்டின்படி காரின் மேற்கூரை தண்டவாளங்கள் சற்று சிறியதாக்கப்பட்டன.

மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட நெக்ஸான்!! தொடரும் டாடாவின் அப்கிரேட் நடவடிக்கைகள்...

அவை தற்போது மீண்டும் 2019ல் நெக்ஸான் அறிமுகப்படுத்தப்பட்டதுபோது இருந்த மேற்கூரை தண்டவாளங்களின் இணையான நீளத்திற்கு பெரியதாக்கப்பட்டுள்ளன. பொருட்களை கட்டி வைப்பதற்கு பயன்படும் மேற்கூரை தண்டவாளங்கள் மீண்டும் காரின் A-பில்லரில் இருந்து செல்வதை டீம் பிஎச்பி செய்திதளம் மூலம் தற்போது கிடைத்துள்ள ஸ்பை படங்களில் பார்க்கலாம்.

மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட நெக்ஸான்!! தொடரும் டாடாவின் அப்கிரேட் நடவடிக்கைகள்...

இந்த மாற்றத்தை தவிர்த்து காரில் வேறெந்த மாற்றத்தையும் இந்த படங்களில் பார்க்க முடியவில்லை. இதனால் நெக்ஸானில் வழக்கமாக வழங்கப்படும் என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது. நெக்ஸானில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட நெக்ஸான்!! தொடரும் டாடாவின் அப்கிரேட் நடவடிக்கைகள்...

இதில் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 108 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இந்த என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஏஎம்டி என ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட நெக்ஸான்!! தொடரும் டாடாவின் அப்கிரேட் நடவடிக்கைகள்...

அதிகளவில் விற்பனையாகும் கார் ஒன்றின் மேற்கூரையின் தோற்றம் இரண்டு வருடத்தில் இருமுறை மாற்றப்படுவது எனக்கு தெரிந்தவரையில் இதுவே முதல்முறை என நினைக்கிறேன். தற்போது மீண்டும் பழைய மேற்கூரை தோற்றத்திற்கே டாடா நிறுவனம் வந்திருப்பதற்கு காரணம் என்னவென்று தற்போதைக்கு தெரியவில்லை.

Most Read Articles

English summary
Tata Nexon roof rail design changed again. Read In Tamil.
Story first published: Tuesday, June 8, 2021, 22:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X