நெக்ஸானின் அலாய் சக்கரங்களை மாற்றியது டாடா!! இது இன்னும் ஸ்டைலா இருக்கே...!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2017ல் நெக்ஸான் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. நெக்ஸான், டியாகோ, டிகோர், ஹெரியர் போன்ற புதிய அறிமுகங்களின் மூலம் டாடா மோட்டார்ஸின் விற்பனை கடந்த இரு வருடங்களில் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது.

நெக்ஸானின் அலாய் சக்கரங்களை மாற்றியது டாடா!! இது இன்னும் ஸ்டைலா இருக்கே...!

மேலும் இவை தான் டாடா மோட்டார்ஸை இந்தியாவின் மூன்றாவது மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக முன்னுறுத்துகின்றன. இதில் நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி காரின் பங்கு மிக முக்கியமானது என்று தான் சொல்ல வேண்டும்.

நெக்ஸானின் அலாய் சக்கரங்களை மாற்றியது டாடா!! இது இன்னும் ஸ்டைலா இருக்கே...!

இதன் காரணமாகவே நெக்ஸான் உள்பட தற்சமயம் அதிகளவில் விற்பனையாகும் கார் மாடல்களை அவ்வப்போது டாடா நிறுவனம் அப்டேட் செய்து வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு துவக்கத்தில் டியாகோ, டிகோர் மற்றும் நெக்ஸான் மாடல்கள் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்றன.

நெக்ஸானின் அலாய் சக்கரங்களை மாற்றியது டாடா!! இது இன்னும் ஸ்டைலா இருக்கே...!

இருப்பினும் நெக்ஸானை மேலும் மெருக்கேற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுவரும் டாடா மோட்டார்ஸ், சமீபத்தில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பொத்தான்களில் இருந்து தொடுத்திரையாக கொண்டுவந்தது.

நெக்ஸானின் அலாய் சக்கரங்களை மாற்றியது டாடா!! இது இன்னும் ஸ்டைலா இருக்கே...!

அதனை தொடர்ந்து தற்போது நெக்ஸானின் 16 இன்ச், V-வடிவிலான அலாய் சக்கரங்கள் எந்தவொரு அறிவிப்பும் இன்றி 5-ஸ்போக் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதாவது V-வடிவ, 16 இன்ச் அலாய் சக்கரங்களுடன் கிடைத்து வந்த நெக்ஸானின் வேரியண்ட்கள் இனி இந்த புதிய டிசைனிலான அலாய் சக்கரங்களுடன் கிடைக்கும்.

நெக்ஸானின் அலாய் சக்கரங்களை மாற்றியது டாடா!! இது இன்னும் ஸ்டைலா இருக்கே...!

இது தொடர்பான ஸ்பை படங்கள் மெஹூல் சவுகான் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன. இந்த படங்களின் மூலமாக இத்தகைய மாற்றம் நெக்ஸானில் கொண்டுவரப்பட்டிருப்பதும், இந்த கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியிருப்பதும் நமக்கு தெரிய வருகிறது. இது தவிர்த்து படத்தில் காட்சித்தரும் நெக்ஸானில் வேறெந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை.

நெக்ஸானின் அலாய் சக்கரங்களை மாற்றியது டாடா!! இது இன்னும் ஸ்டைலா இருக்கே...!

நெக்ஸானின் கேபினில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், காரை ஸ்டார்ட் செய்வதற்கு அழுத்து-பொத்தான், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

நெக்ஸானின் அலாய் சக்கரங்களை மாற்றியது டாடா!! இது இன்னும் ஸ்டைலா இருக்கே...!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவொட்ரான் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ ரெவோடார்க் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் நெக்ஸானில் வழங்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் என்ஜின் 120 பிஎஸ் மற்றும் 170 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்துகிறது.

நெக்ஸானின் அலாய் சக்கரங்களை மாற்றியது டாடா!! இது இன்னும் ஸ்டைலா இருக்கே...!

டீசல் என்ஜினின் மூலம் 110 பிஎஸ் மற்றும் 260 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் அமைப்பை பெறலாம். டாடா நெக்ஸானின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.7.20 லட்சத்தில் இருந்து ரூ.12.96 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles
English summary
Tata Nexon Gets New 16-Inch Five-Spoke Alloy Wheels In India.
Story first published: Friday, May 28, 2021, 23:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X