இனி டீசல் என்ஜின் உடன் நெக்ஸானை வாங்குவது முடியாது போல!! டாடாவின் அதிரடி நடவடிக்கை...

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸுக்கு சிறந்த விற்பனை மாடல் என்று பார்த்தால் அதில் நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி மாடலும் ஒன்று. இதனாலேயே இந்த காரில் அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்டேட்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

இனி டீசல் என்ஜின் உடன் நெக்ஸானை வாங்குவது முடியாது போல!! டாடாவின் அதிரடி நடவடிக்கை...

ஸ்போர்டியான தோற்றத்தை கொண்டுள்ளது மட்டுமில்லாமல் உலகளாவிய என்சிஏபி சோதனையில் பயணிகள் பாதுகாப்பில் முழு 5-நட்சத்திரங்களை நெக்ஸான் பெற்றுள்ளது. இந்த டாடா காருக்கு விற்பனையில் போட்டியாக ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் உள்ளன.

இனி டீசல் என்ஜின் உடன் நெக்ஸானை வாங்குவது முடியாது போல!! டாடாவின் அதிரடி நடவடிக்கை...

இந்த நிலையில் தற்போது நெக்ஸானின் 4 டீசல் ட்ரிம்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ரஷ்லேன் செய்திதளம் மூலமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டீசல் என்ஜின் உடன் நெக்ஸானை வாங்குவது வெகுவாக குறைந்துள்ளது.

இனி டீசல் என்ஜின் உடன் நெக்ஸானை வாங்குவது முடியாது போல!! டாடாவின் அதிரடி நடவடிக்கை...

இதனாலேயே நெக்ஸானின் எக்ஸ்.இ, எக்ஸ்.எம்.ஏ, எக்ஸ்.இசட் மற்றும் எக்ஸ்.இசட்.ஏ+(எஸ்) என்ற டீசல் ட்ரிம்களுக்கான முன்பதிவுகளை நிறுத்தி கொள்ள டீலர்களிடம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளதாக அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி டீசல் என்ஜின் உடன் நெக்ஸானை வாங்குவது முடியாது போல!! டாடாவின் அதிரடி நடவடிக்கை...

இதற்கு முன்னதாக, நெக்ஸானை டாடா நிறுவனம் 5-ஸ்போக் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களுடன் கடந்த மே மாதத்தில் அப்கிரேட் செய்திருந்தது. இந்த புதிய சக்கரங்கள் உண்மையில் பார்ப்பதற்கு அருமையானதாக உள்ளன. மேலும் இந்த புதிய அலாய் சக்கரங்களினால் காரின் விலை அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இனி டீசல் என்ஜின் உடன் நெக்ஸானை வாங்குவது முடியாது போல!! டாடாவின் அதிரடி நடவடிக்கை...

நெக்ஸானின் எக்ஸ்.இசட்+ வேரியண்ட்டில் 16-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் ஆரம்ப நிலை மற்றும் மத்திய வேரியண்ட்கள் இரும்பு ரிம்கள் மற்றும் சக்கர மூடிகளையே பெறுகின்றன. புதிய அலாய் சக்கர அப்கிரேட் உடன் நெக்ஸானில் வழங்கப்பட்டு வந்த டெக்டானிக் நீல நிறத்தேர்வையும் டாடா நிறுவனம் கடந்த மாதத்தில் நிறுத்தி இருந்தது.

இனி டீசல் என்ஜின் உடன் நெக்ஸானை வாங்குவது முடியாது போல!! டாடாவின் அதிரடி நடவடிக்கை...

இதனால் உமிழும் நெருப்பின் சிவப்பு, ஃபோலியேஜ் பச்சை, கல்கரி வெள்ளை, சில்வர் மற்றும் க்ரே என்ற ஐந்து விதமான நிறங்களில் மட்டுமே டாடா நெக்ஸான் கார்கள் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கின்றன. இதற்கு முன்னதாக உட்புற கேபினில் தொடுத்திரையை கண்ட்ரோல் செய்யும் பொத்தான்கள் நீக்கப்பட்டன.

இனி டீசல் என்ஜின் உடன் நெக்ஸானை வாங்குவது முடியாது போல!! டாடாவின் அதிரடி நடவடிக்கை...

அதற்கு மாற்றாக இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முழுவதுமாக தொடுதல் மூலமாக செயல்படக்கூடியதாக வழங்கப்பட்டது. இத்தகைய மாற்றங்கள் அனைத்து அப்போதைய சந்தை நிலவரப்படி எடுக்கப்படுவையாகும்.

இனி டீசல் என்ஜின் உடன் நெக்ஸானை வாங்குவது முடியாது போல!! டாடாவின் அதிரடி நடவடிக்கை...

எதிர்காலத்தில் நெக்ஸானில் குரல் கட்டுப்பாட்டு உதவி வசதியும் மாநில மொழிகளில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடல் ஆங்கிலம் மற்றும் இந்தி+ஆங்கிலம் கலந்த ஹிங்கிலிஷ் மொழிகளை மட்டுமே ஏற்கிறது.

இனி டீசல் என்ஜின் உடன் நெக்ஸானை வாங்குவது முடியாது போல!! டாடாவின் அதிரடி நடவடிக்கை...

இவற்றிற்கு அடுத்து இதே பாணியில் ப்ரோகிராம் செய்யப்பட்ட தமிழிஷ் மற்றும் பெங்காலிஷ் மொழிகள் முதலாவதாக கொண்டுவரப்பட உள்ளன. தற்சமயம் டாடா நெக்ஸான் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்ற்ம் 1.5 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

English summary
Tata-nexon-4-diesel-variants-will-discontinue-in-india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X