டபுள் மீனிங்... காதலர் தினத்தை முன்னிட்டு நெக்ஸான் காருக்கு குறும்புத்தனமான விளம்பர வீடியோவை வெளியிட்ட டாடா...

காதலர் தினத்தை முன்னிட்டு, நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறும்புத்தனமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டபுள் மீனிங்... காதலர் தினத்தை முன்னிட்டு நெக்ஸான் காருக்கு குறும்புத்தனமான விளம்பர வீடியோவை வெளியிட்ட டாடா...

கார்களுக்கு சுவாரஸ்யமான விளம்பரங்களை உருவாக்குவதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை அடித்து கொள்வதற்கு ஆளே இல்லை. காதலர் தினத்தை முன்னிட்டு, நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு குறும்புத்தனமான விளம்பரம் ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள அந்த விளம்பர வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

டாடா நெக்ஸானின் இந்த புதிய விளம்பரம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்பதை கமெண்ட் பாக்ஸில் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் காம்பேக்ட் எஸ்யூவி கார் நெக்ஸான்தான். கடந்த 2017ம் ஆண்டு முதல் முறையாக நெக்ஸான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

டபுள் மீனிங்... காதலர் தினத்தை முன்னிட்டு நெக்ஸான் காருக்கு குறும்புத்தனமான விளம்பர வீடியோவை வெளியிட்ட டாடா...

மிகவும் சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டதால், சந்தைக்கு வந்த உடனேயே டாடா நெக்ஸான் 'ஹிட்' அடித்தது. விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்து உயர்த்துவதற்காக, நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் தொடர்ச்சியாக அப்டேட் செய்து வருகிறது. நெக்ஸான் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்ததை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம்.

டபுள் மீனிங்... காதலர் தினத்தை முன்னிட்டு நெக்ஸான் காருக்கு குறும்புத்தனமான விளம்பர வீடியோவை வெளியிட்ட டாடா...

இதன் பலனாக கடந்த ஜனவரி மாதம் தனது அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையை டாடா நெக்ஸான் பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 8,000க்கும் அதிகமான நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வரும் காலங்களிலும் டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி காரின் விற்பனை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள் மீனிங்... காதலர் தினத்தை முன்னிட்டு நெக்ஸான் காருக்கு குறும்புத்தனமான விளம்பர வீடியோவை வெளியிட்ட டாடா...

டாடா நெக்ஸானின் விற்பனை மிகவும் வலுவாக இருப்பதற்கு, குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து, முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை இந்த காம்பேக்ட் எஸ்யூவி பெற்றுள்ளது முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முதல் முறையாக பெற்ற 'மேட் இன் இந்தியா' கார் நெக்ஸான்தான்.

டபுள் மீனிங்... காதலர் தினத்தை முன்னிட்டு நெக்ஸான் காருக்கு குறும்புத்தனமான விளம்பர வீடியோவை வெளியிட்ட டாடா...

இதனை தொடர்ந்துதான் டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கும், மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவியும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக வசப்படுத்தின. தற்போதைய நிலையில் இந்த மூன்று 'மேட் இன் இந்தியா' கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி அமைப்பிடம் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டபுள் மீனிங்... காதலர் தினத்தை முன்னிட்டு நெக்ஸான் காருக்கு குறும்புத்தனமான விளம்பர வீடியோவை வெளியிட்ட டாடா...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஐசி இன்ஜின் உடன் மட்டுமல்லாது, நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்து வருகிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

டபுள் மீனிங்... காதலர் தினத்தை முன்னிட்டு நெக்ஸான் காருக்கு குறும்புத்தனமான விளம்பர வீடியோவை வெளியிட்ட டாடா...

தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களில் முக்கியமானதாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி உள்ளது. சவாலான விலை நிர்ணயம், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச் ஆகியவைதான் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Tata Nexon Compact SUV’s Naughty Valentine’s Day Ad Goes Viral, Watch Here. Read in Tamil
Story first published: Monday, February 15, 2021, 20:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X