ஷோரூமில் காட்சிதந்த டாடா நெக்ஸான் & அல்ட்ராஸ் டார்க் எடிசன்கள்!! விரைவில் அறிமுகம்?

டாடா நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் கார்களின் டார்க் எடிசன்கள் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் வளாகத்தில் காட்சி தந்துள்ளன. இதுகுறித்த ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் தற்சமயம் வேகமாக சந்தையை விரிவுப்படுத்தி வரும் நிறுவனங்களுள் டாடா மோட்டார்ஸ் முக்கியமானதாக விளங்குகிறது. டாடாவின் சமீபத்திய அறிமுகங்களான டியாகோ, நெக்ஸான், அல்ட்ராஸ், ஹெரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்டவை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதே இதற்கு காரணமாகும்.

இதனாலேயே இந்த புதிய கார்களில் அவ்வப்போது அப்டேட்களை டாடா நிறுவனம் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. இந்த அப்டேட்கள் புதிய வேரியண்ட்களாக இருக்கலாம், புதிய ஸ்பெஷல் எடிசன்களாக இருக்கலாம், அல்லது குறைந்தப்பட்சம் புதிய வசதிகளாக இருக்கலாம்.

இந்த வகையில் அடுத்ததாக டாடா நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் கார்கள் அப்டேட்களை ஏற்கவுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2020 செப்டம்பரில் அதன் கார்களுக்காக டார்க் எடிசன்களை பதிவு செய்து கொண்டது.

ஹெரியர் டார்க் எடிசனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து கவனம் கிடைத்துள்ளதினால் நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி & அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களிலும் டார்க் எடிசன்களை கொண்டுவர டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது காடிவாடி செய்திதளம் மூலம் இந்த ஸ்பெஷல் எடிசன்களின் ஸ்பை படங்கள் கிடைத்துள்ளன.

இந்த படங்களில் நெக்ஸான் & அல்ட்ராஸ் டார்க் எடிசன்கள் இந்தியாவில் டீலர்ஷிப் ஒன்றின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் டார்க் எடிசனை பெறவுள்ளதால், டாடா டியாகோ மற்றும் டிகோர் என்ற பட்ஜெட் கார்களிலும் இந்த ஸ்பெஷல் எடிசன் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது.

ஹெரியர் டார்க்கை போன்று நெக்ஸான் & அல்ட்ராஸின் டார்க் எடிசன்களும் அடர் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. DARK முத்திரையை காரின் முன் ஃபெண்டரில் பார்க்க முடிகிறது. பின்பக்கத்தில் வழங்கப்படும் மாடலின் முத்திரையும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

வெளிபுறத்தை போல் உட்புற கேபினும் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மற்றப்படி நெக்ஸான் & அல்ட்ராஸின் பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

நெக்ஸானில் 1.5 லிட்டர் பெட்ரோல் & 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் தேர்வுகளாகவும், அல்ட்ராஸில் 1.2 லிட்டர் பெட்ரோல் / டர்போ மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் தேர்வுகளாகவும் வழங்கப்படுகின்றன. ஹெரியரில் டார்க் எடிசன் அதன் எக்ஸ்டி, எக்ஸ்இசட் ட்ரிம்களில் வழங்கப்படுகிறது.

அதேபோல் நெக்ஸான் & அல்ட்ராஸிலும் டார்க் எடிசன் அவற்றின் சில வேரியண்ட்களின் அடிப்படையில் வழங்கப்படலாம். விலைகளை பொறுத்தவரையில் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும். ஹெரியர் டார்க் எடிசனின் விலை ஸ்டாண்டர்ட் மாடலை காட்டிலும் ரூ.20 ஆயிரம் அளவில் அதிகமாக உள்ளது.

Most Read Articles
English summary
Tata Nexon Dark Edition & Altroz Dark Edition Spotted Ahead Of Launch.
Story first published: Wednesday, June 30, 2021, 12:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X