விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... குறைவான விலைதான் இதுக்கு காரணம்!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... குறைவான விலைதான் இதுக்கு காரணம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1,022 நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரே மாதத்தில் 1,000க்கும் மேற்பட்ட நெக்ஸான் கார்களை விற்பனை செய்திருப்பது இதுதான் முதல் முறை ஆகும். எனவே இந்த விற்பனை எண்ணிக்கை மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... குறைவான விலைதான் இதுக்கு காரணம்!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், 30.2 kWh லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 312 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் டாடா நெக்ஸான் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... குறைவான விலைதான் இதுக்கு காரணம்!

ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட டாடா நெக்ஸான் கார்தான், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் ஆகும். இதற்கு பிறகுதான் டாடா அல்ட்ராஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக வசப்படுத்தின.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... குறைவான விலைதான் இதுக்கு காரணம்!

எனவே பாதுகாப்பு என்றவுடன் பலரது நினைவிற்கும் முதலில் வருவது டாடா நெக்ஸான்தான். இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குகிறது. பாதுகாப்பை பொறுத்தவரை, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக்குகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... குறைவான விலைதான் இதுக்கு காரணம்!

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேஸ் மாடலின் விலை 13.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டாப் மாடலின் விலை 16.85 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... குறைவான விலைதான் இதுக்கு காரணம்!

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு தற்போதைய நிலையில் நேரடி போட்டி என எந்த எலெக்ட்ரிக் காரும் இல்லை. தற்போது விற்பனையில் இருக்கும் எம்ஜி இஸட்எஸ் மற்றும் ஹூண்டாய் கோனா ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களும், டாடா நெக்ஸானை போல், எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவைதான்.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... குறைவான விலைதான் இதுக்கு காரணம்!

எனினும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் ஒப்பிடுகையில், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களின் விலை மிகவும் அதிகம். எனவே குறைவான விலை காரணமாக, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... குறைவான விலைதான் இதுக்கு காரணம்!

எம்ஜி மோட்டார் நிறுவனம் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், சிறிய பேட்டரி பொருத்தப்பட்ட மாடலை வரும் காலங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இது நடக்கும்பட்சத்தில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டி உருவாகும்.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... குறைவான விலைதான் இதுக்கு காரணம்!

ஏனெனில் சிறிய பேட்டரி பொருத்தப்படுவதன் காரணமாக, இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலையை, எம்ஜி மோட்டார் நிறுவனத்தால் குறைக்க முடியும். அதேபோல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதுவும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக திகழும்.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... குறைவான விலைதான் இதுக்கு காரணம்!

ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வருவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முன்னணியில் சென்று கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... குறைவான விலைதான் இதுக்கு காரணம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் 2021 டிகோர் எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதற்கு அடுத்தபடியாக ஏற்கனவே விற்பனையில் உள்ள அல்ட்ராஸ் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

Most Read Articles
English summary
Tata nexon electric suv achieves a new sales milestone in india
Story first published: Monday, September 13, 2021, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X