Just In
- 2 hrs ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 15 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் விலை மீண்டும் உயர்வு!
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது உள்ளிட்ட கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு கூடி வருகிறது. இந்த சந்தையில் தற்போது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. எஸ்யூவி எலெக்ட்ரிக் கார் என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில் கிடைப்பதே, போட்டியாளர்களை விஞ்சி, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி அதிக வரவேற்பை பெற்ற மாடலாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 2,530 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது டாடா மோட்டார் நிறுவனம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் என மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், அதாவது, நடுத்தர மற்றும் டாப் வேரியண்ட்டின் விலை ரூ.15,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பேஸ் வேரியண்ட்டின் விலை உயர்த்தப்படவில்லை.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேஸ் வேரியண்ட் ரூ.13.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும். ஆனால், ரூ.15.25 லட்சத்தில் கிடைத்து வந்த எக்ஸ்எம் வேரியண்ட் விலை ரூ.15.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் என்ற டாப் வேரியண்ட்டின் விலை ரூ.16.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 30.2kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் மின் மோட்டார் 129 பிஎஸ் பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று டாடா மோட்டார் தெரிவிக்கிறது.

இந்த காரின் பேட்டரியை டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 60 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஆகிவிடும். 3.3kW ஏசி வீட்டு சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 8 மணிநேரம் பிடிக்கும். இந்த காரில் டிரைவ் மற்றும் ஸ்போர்ட் என இரண்டு டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு 12, 24 மற்றும் 36 மாதங்களுக்கான சந்தா திட்டத்திலும் கடைக்கிறது. மேலும், எக்ஸ்இசட் ப்ளஸ் என்ற நடுத்தர வேரியண்ட் மட்டுமே சந்தா திட்டத்தில் கிடைக்கிறது. ஓரிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சந்தா திட்டத்தை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.26,000 வரை விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலை மீண்டும் ரூ.15,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு சற்றே கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.