விரைவில் வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டார்க் எடிசன் மாடல்?

தனித்துவமான வண்ணத் தேர்வுகள் மற்றும் பாகங்களுடன் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டார்க் எடிசன் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 விரைவில் வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டார்க் எடிசன் மாடல்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் எஸ்யூவியில் டார்க் எடிசன் என்ற விசேஷ மாடலை அறிமுகப்படுத்தியது. கருப்பு வண்ண உதிரிபாகங்கள் மற்றும் அலங்கார விஷயங்களுடன் இந்த டார்க் எடிசன் மாடல் சாதாரண மாடல்களில் இருந்து தனித்துவமாக இருந்ததால் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 விரைவில் வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டார்க் எடிசன் மாடல்?

இதனைத்தொடர்ந்து, தற்போது நெக்ஸான் எலெக்ட்ரிக் காரிலும் டார்க் எடிசன் மாடலை கொண்டு வர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

 விரைவில் வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டார்க் எடிசன் மாடல்?

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டார்க் எடிசன் மாடல் அட்லஸ் பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணத் தேர்வில் வரும் என்று தெரிகிறது. கருப்பு வண்ண அலாய் வீல்கள் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர்களில் விசேஷ கருப்பு வண்ண பூச்சு ஆகியவற்றின் மூலமாக இது தனித்துவமாக இருக்கும்.

 விரைவில் வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டார்க் எடிசன் மாடல்?

மேலும், உட்புறத்தில் முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதாவது, கருப்பு வண்ண டேஷ்போர்டு, இருக்கைகள், டோர் பேனல்கள் ஆகியவை கருப்பு வண்ணத்தில் இடம்பெற்றிருக்கும்.

 விரைவில் வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டார்க் எடிசன் மாடல்?

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் கருப்பு வண்ண பாகங்களுடன் வர இருக்கும் இந்த டார்க் எடிசன் மாடலில் தொழில்நுட்ப அம்சங்களில் எந்த மாறுதல்களும் இருக்காது.

 விரைவில் வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டார்க் எடிசன் மாடல்?

இந்த காரில் 30.2kWh பேட்டரித் தொகுப்பு கொடுக்கப்ப்டு இருக்கும். இதன் பேட்டரியும் மின் மோட்டாரும் இணைந்து அதிகபட்சமாக 127 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 விரைவில் வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டார்க் எடிசன் மாடல்?

அராய் நடத்திய சோதனைகளில் இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 312 கிமீ தூரம் பயணிக்கும் திறனை வழங்கும். ஆனால், நடைமுறையில் இது சற்று வேறுபடலாம்.

 விரைவில் வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் டார்க் எடிசன் மாடல்?

இந்த காரின் பேட்டரியை டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். இதனை சாதாரண சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 8 முதல் 9 மணிநேரம் ஆகும்.

Most Read Articles

English summary
According to report, Tata is expected to launch Nexon EV Dark Edition model in India soon.
Story first published: Tuesday, June 8, 2021, 12:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X