மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரின் விலை! Tata NexonEV-யோட விலைதான் அதிகரிச்சுருக்கு!

இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரான Tata Nexon EV இன் விலையில் சில ஆயிரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. எவ்வளவு விலையுயர்வு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரின் விலை... Tata Nexon EV-யோட விலைதான் அதிகரிச்சுருக்கு!

நாட்டின் மிகக் குறைந்த விலைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் என்ற பெறுமைக்குரிய மின்சார வாகனமாக Tata Nexon EV இருக்கின்றது. இந்த காரின் விலையையே அதன் தயாரிப்பு நிறுவனமான Tata Motors தற்போது உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலையைப் பெற்றநிலையிலும் இந்த எலெக்ட்ரிக் காரே தற்போதும் இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக இருக்கின்றது.

மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரின் விலை... Tata Nexon EV-யோட விலைதான் அதிகரிச்சுருக்கு!

Tata Motors Nexon EV எலெக்ட்ரிக் காரின் விலையை உயர்த்துவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாகவும் நிறுவனம் இதன் விலையை உயர்த்தியிருக்கின்றது. அந்தவகையில், நடப்பாண்டு மே மாதம் இதன் விலை உயர்த்தப்பட்டது. ரூ. 16 ஆயிரம் வரை எலெக்ட்ரிக் காரின் விலை உயர்த்தப்பட்டது.

மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரின் விலை... Tata Nexon EV-யோட விலைதான் அதிகரிச்சுருக்கு!

இந்த விலை உயர்வு உயர்நிலை வேரியண்டுகளான XZ+ மற்றும் XZ+ Lux ஆகியவற்றிற்கு மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலைகளே தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆம், ஏற்கனவே செய்யப்பட்டதைப் போலவே இம்முறையும் Nexon EV-யின் இவ்விரு உயர்நிலை வேரியண்டுகளின் விலையே உயர்த்தப்பட்டிருக்கின்றன.

மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரின் விலை... Tata Nexon EV-யோட விலைதான் அதிகரிச்சுருக்கு!

ஆனால், இம்முறை ரூ. 9 ஆயிரம் வரை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக ரூ. 15.56 லட்சத்திற்கு விற்கப்பட்டு வந்த XZ+ தற்போது ரூ. 15.65 லட்சமாக விலையுயர்ந்துள்ளது. இதோபோல் முன்னதாக ரூ. 16.56 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்த XZ+ Lux தேர்வின் விலை தற்போது ரூ. 16.65 லட்சமாக உயர்ந்துள்ளது.

மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரின் விலை... Tata Nexon EV-யோட விலைதான் அதிகரிச்சுருக்கு!

விலை உயர்வு குறித்த முழு விபரத்தையும் பட்டியலாகக் கீழே காணலாம்:

Variants Old Price New Price Difference
XM ₹13.99 Lakh ₹13.99 Lakh NIL
XZ+ ₹15.56 Lakh ₹15.65 Lakh ₹9,000
XZ+ LUX ₹16.56 Lakh ₹16.65 Lakh ₹9,000
XZ+ Dark ₹15.99 Lakh ₹15.99 Lakh NIL
XZ+ Lux Dark ₹16.85 Lakh ₹16.85 Lakh NIL
மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரின் விலை... Tata Nexon EV-யோட விலைதான் அதிகரிச்சுருக்கு!

இந்த விலையுயர்வான மூன்றாவது முறையாக செய்யப்படும் விலையுயர்வு என்பது குறிப்பிடத்தகுந்தது. Tata Motors Nexon EV எலெக்ட்ரிக் காரை Dark Edition எனும் சிறப்பு தேர்விலும் விற்பனைக்கு வழங்குகின்றது. இந்த வசதியை XZ+ மற்றும் XZ+ Lux ஆகிய இரு தேர்வுகளில் மட்டுமே நிறுவனம் வழங்குகின்றது. இவற்றிற்கும் வழக்கமான வேரியண்டிற்கும் இடையில் ரூ. 34 ஆயிரம் வித்தியாசமாக இருக்கின்றது.

மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரின் விலை... Tata Nexon EV-யோட விலைதான் அதிகரிச்சுருக்கு!

Nexon EV முழுமையான சார்ஜில் 312 கிமீ தூரம் வரையிலான ரேஞ்ஜை வழங்கும். அராயின் அதிகாரப்பூர்வ தகவலாகும். இக்காரில் 30.2kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், நெக்ஸான் இவி-யில் 129 பிஎஸ் மற்றும் 245 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடிய மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

மீண்டும் உயர்ந்தது இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரின் விலை... Tata Nexon EV-யோட விலைதான் அதிகரிச்சுருக்கு!

இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் உச்சபட்ச வேகத்தை வெறும் 9.58 செகண்டுகளிலேயே தொட்டுவிடும்.இந்த மின்சார காரில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஒரு மணி நேரத்திற்குள் ஏற்றிவிடலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Tata nexon ev price hiked third time in this year
Story first published: Thursday, August 26, 2021, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X