செம கெத்து... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய டாடா நெக்ஸான்!

டாடா நெக்ஸான் எஸ்யூவி இன்று உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி இருக்கிறது. இந்த காருக்கான வரவேற்பு வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், இன்று உற்பத்தியில் புதிய சாதனையை தொட்டுள்ளது.

செம கெத்து... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய டாடா நெக்ஸான்!

இந்தியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக டாடா நெக்ஸான் மாறி இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அடக்க வகை எஸ்யூவி மாடல் டிசைன், இடவசதி, எஞ்சின் தேர்வுகள், வசதிகளில் மட்டுமின்றி, விலையும் சரியாக இருப்பதால் வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவை பெற்ற மாடலாக மாறி இருக்கிறது.

செம கெத்து... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய டாடா நெக்ஸான்!

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டிலும் இந்த கார் அதிகபட்சமான 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றதால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இதனால், இந்த காரின் விற்பனை மாதத்திற்கு மாதம் சிறப்பாக அமைந்து வருகிறது.

செம கெத்து... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய டாடா நெக்ஸான்!

கொரோனா பிரச்னையால் உற்பத்தியில் தடங்கல்கள் உள்ள நிலையில், இன்று உற்பத்தியில் டாடா நெக்ஸான் எஸ்யூவி புதிய மைல்கல்லை தொட்டு சாதித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், ரஞ்சன்கவுனில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையில் இன்று டாடா நெக்ஸான் காரின் உற்பத்தி 2 லட்சத்தை தொட்டுள்ளது.

செம கெத்து... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய டாடா நெக்ஸான்!

இரண்டு லட்சமாவது டாடா நெக்ஸான் கார் உற்பத்தி பிரிவிலிருந்து வந்ததை டாடா மோட்டார்ஸ் பெருமையுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் டாடா நெக்ஸான் எஸ்யூவி 1,50,000 என்ற உற்பத்தியை எட்டியது. ஆனால், அடுத்த 50,000 யூனிட்டுகளை 6 மாதங்களில் எட்டி இருக்கிறது.

செம கெத்து... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய டாடா நெக்ஸான்!

கொரோனா பிரச்னை இல்லையென்றால், இந்த இரண்டு லட்சமாவது உற்பத்தி சாதனையை முன்கூட்டியே தொட்டிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. கொரோனாவால் விற்பனை, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதற்கு மத்தியில் இந்த புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி உள்ளது டாடா நெக்ஸான்.

செம கெத்து... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய டாடா நெக்ஸான்!

டாடா நெக்ஸான் எஸ்யூவி தற்போது எஞ்சின், கியர்பாக்ஸ் மற்றும் வசதிகளை பொறுத்து 20 வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் 12 பெட்ரோல் வேரியண்ட்டுகள் மற்றும் 8 டீசல் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

செம கெத்து... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய டாடா நெக்ஸான்!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

செம கெத்து... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய டாடா நெக்ஸான்!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கார்னரிங் பனி விளக்குகள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை உள்ளன. ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் குறிப்பிடத்தக்கது.

செம கெத்து... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்திய டாடா நெக்ஸான்!

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி ரூ.7.19 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து டாடா நெக்ஸான் எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருந்து வருகிறது.

Most Read Articles

English summary
Tata Motors has achieved 2,00,000 production milestone for Nexon compact SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X