சில்வர் நிறத்தில் இனி டாடா நெக்ஸானை வாங்க முடியாது!! இரகசியமாக விற்பனையை நிறுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்!

டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி காரின் சில்வர் நிறத்தேர்வின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

சில்வர் நிறத்தில் இனி டாடா நெக்ஸானை வாங்க முடியாது!! இரகசியமாக விற்பனையை நிறுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறந்த விற்பனை மாடல்களுள் ஒன்றாக நெக்ஸான் விளங்குகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட் உள்ளிட்டவற்றிற்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் நெக்ஸானிற்கு டாடா நிறுவனம் மொத்தம் 6 விதமான நிறத்தேர்வுகளை வழங்கி வந்தது.

சில்வர் நிறத்தில் இனி டாடா நெக்ஸானை வாங்க முடியாது!! இரகசியமாக விற்பனையை நிறுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்!

இதில் அட்லஸ் கருப்பு, ஃபோலியேஜ் க்ரீன், கல்கரி வெள்ளை, உமிழும் நெருப்பின் சிவப்பு, ப்யூர் சில்வர் மற்றும் டேடோனா க்ரே என்பவை அடங்குகின்றன. இதில் தான் தற்போது ப்யூர் சில்வரின் விற்பனை ரகசியமாக நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது. நெக்ஸானின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டு வந்த இந்த நிறத்தேர்வின் நிறுத்தத்திற்கு இதுவரையில் டாடா நிறுவனத்தின் சார்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்பட வில்லை.

சில்வர் நிறத்தில் இனி டாடா நெக்ஸானை வாங்க முடியாது!! இரகசியமாக விற்பனையை நிறுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்!

அதேபோல் இந்த சில்வர் நிறத்திற்கு மாற்றாக வேறெந்த நிறமாவது கொண்டுவரப்பட உள்ளதா என்பதும் இன்னும் உறுதியாகவில்லை. இந்த மாற்றத்தை தவிர்த்து நெக்ஸானின் வெப்சைட்டில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி காரில் இந்த ஆண்டிற்கு போதுமான அப்டேட்களை டாடா நிறுவனம் வழங்கிவிட்டது என்று தான் நினைக்கிறேன்.

சில்வர் நிறத்தில் இனி டாடா நெக்ஸானை வாங்க முடியாது!! இரகசியமாக விற்பனையை நிறுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்!

ஏனெனில் நடப்பு 2021ஆம் முதல் பாதியில் தான் உட்புற டேஸ்போர்டில், இயற்பியல் முறையில் அழுத்தும் பொத்தான்களுக்கு மாற்றாக முழு தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டது. அதேபோல் புதிய டிசைனிலான அலாய் சக்கரங்களும் கொண்டுவரப்பட்டன. இவை எல்லாவற்றையும் விட நெக்ஸானின் விற்பனையில் பெரிதும் உதவியாக இருக்கும் அடர் கருப்பு நிற டார்க் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டது.

சில்வர் நிறத்தில் இனி டாடா நெக்ஸானை வாங்க முடியாது!! இரகசியமாக விற்பனையை நிறுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்!

அதேநேரம் தற்போது ப்யூர் சில்வர் பெயிண்ட் தேர்வின் விற்பனை நிறுத்தப்பட்டது போன்று சில மாதங்களுக்கு முன்பு டெக்டோனிக் நீல நிறத்தேர்வும் நிறுத்தி கொள்ளப்பட்டு இருந்தது. நெக்ஸானில் க்ரூஸ் கண்ட்ரோல், பின்பக்கத்திற்கும் ஏசி உடன் தானியங்கி ஏசி, சன்ரூஃப், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், ஆண்ட்ராய்டு & ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கக்கூடிய 7-இன்ச் தொடுத்திரை உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

சில்வர் நிறத்தில் இனி டாடா நெக்ஸானை வாங்க முடியாது!! இரகசியமாக விற்பனையை நிறுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்!

பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் (இஎஸ்பி) மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தைக்கான இருக்கை ஹேங்கர்ஸ் உள்ளிட்டவை இந்த டாடா கம்பெக்ட் எஸ்யூவியில் கொடுக்கப்படுகின்றன. நெக்ஸானில் இரு விதமான என்ஜின் தேர்வுகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

சில்வர் நிறத்தில் இனி டாடா நெக்ஸானை வாங்க முடியாது!! இரகசியமாக விற்பனையை நிறுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்!

இதில் ஒன்றான 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 170 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் 110 பிஎஸ் மற்றும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

சில்வர் நிறத்தில் இனி டாடா நெக்ஸானை வாங்க முடியாது!! இரகசியமாக விற்பனையை நிறுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்!

டாடா நெக்ஸானின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.28 லட்சத்தில் இருந்து ரூ.13.23 லட்சம் வரையில் உள்ளன. ஏற்கனவே கூறியதுதான் டாடா நெக்ஸானிற்கு மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கிகர், மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் உள்ளிட்டவை விற்பனையில் போட்டியாக உள்ளன.

சில்வர் நிறத்தில் இனி டாடா நெக்ஸானை வாங்க முடியாது!! இரகசியமாக விற்பனையை நிறுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்!

இருப்பினும் உலகளாவிய NCAP மோதல் சோதனையில் முழு ஐந்து நட்சத்திரங்களையும் பெற்றதால் விற்பனையில் மற்ற அனைத்து காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கும் நெக்ஸான் மிகவும் சவாலானதாக விளங்கி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 9,211 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 செப்டம்பரில் வெறும் 6,007 நெக்ஸான் கார்களே விற்கப்பட்டு இருந்தன.

சில்வர் நிறத்தில் இனி டாடா நெக்ஸானை வாங்க முடியாது!! இரகசியமாக விற்பனையை நிறுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்!

கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் மொத்தமாக 25,729 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 21.4 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் 2020 செப்டம்பரில் 21,200 கார்களையே இந்த ஆட்டோமொபைல் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட டாடா கார் நெக்ஸான் தான்.

சில்வர் நிறத்தில் இனி டாடா நெக்ஸானை வாங்க முடியாது!! இரகசியமாக விற்பனையை நிறுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்!

டாடா பிராண்டில் இருந்து கடைசியாக பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நெக்ஸானை காட்டிலும் அளவில் சிறியதாக கொண்டுவரப்பட்டுள்ள டாடா பஞ்ச்சின் டெலிவிரிகள் சமீபத்தில் நாடு முழுவதும் துவங்கின. இதன்படி முதற்கட்டமாக இந்த மைக்ரோ-எஸ்யூவி காரினை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தங்களது பஞ்ச் காரினை டெலிவிரி பெற்று வருகின்றனர்.

Most Read Articles

English summary
Tata Nexon’s Silver Colour Discontinued
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X