இனி டாடா கார்களை வாங்குவது ரொம்ப சுலபம்! கோடக் மஹிந்திரா உடன் கூட்டுசேர்ந்த டாடா! சூப்பரான பிளான்கள் இருக்கு!

கார்களுக்கு சுலபமாக கடன் வழங்குவதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கோடக் மஹிந்திரா பிரைம் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனி டாடா கார்களை வாங்குவது மிக மிக சுலபம்! கோடக் மஹிந்திராவுடன் கூட்டு சேர்ந்த டாடா! சூப்பர் பிளான்களே அறிவிச்சிருக்கு!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலால் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் வாகன விற்பனை சரிவைச் சந்தித்தன. அந்தவகையில், நாட்டின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்சும், கணிசமான விற்பனை இழப்பை கொரோனா இரண்டாம் அலையின்போது சந்தித்தது.

இனி டாடா கார்களை வாங்குவது மிக மிக சுலபம்! கோடக் மஹிந்திராவுடன் கூட்டு சேர்ந்த டாடா! சூப்பர் பிளான்களே அறிவிச்சிருக்கு!

இந்நிலையில் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் பிரபல நிதி நிறுவனமான கோடக் மஹிந்திரா பிரைம் லிமிடெட்டுன் இணைந்திருக்கின்றது. இந்நிறுவனத்துடன் இணைந்து மூன்று விதமான நிதி திட்டங்களை நிறுவனம் அறிவித்துள்ளது.

இனி டாடா கார்களை வாங்குவது மிக மிக சுலபம்! கோடக் மஹிந்திராவுடன் கூட்டு சேர்ந்த டாடா! சூப்பர் பிளான்களே அறிவிச்சிருக்கு!

ரெட் கார்பெட், பிரைம் விஷ்வாஸ் மற்றும் குறைந்த இஎம்ஐ ஆகிய திட்டங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. கிராமம் மற்றும் நகர்புறம் என இரு பகுதி மக்கள்களுக்கு பயன்படும் வகையில் இத்திட்டத்தை நிறுவனங்கள் வகுத்துள்ளன. இதன் மூலம் சுய தொழில் செய்வோர், சம்பளம் பெறுவோர் மற்றும் வருமான சான்று இல்லாதவர் என பலராலும் பயன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இனி டாடா கார்களை வாங்குவது மிக மிக சுலபம்! கோடக் மஹிந்திராவுடன் கூட்டு சேர்ந்த டாடா! சூப்பர் பிளான்களே அறிவிச்சிருக்கு!

கார் விற்பனையை சூடிபிடிக்க செய்யவும், வாடிக்கையாளர்களுக்கும் எளிய கடன் திட்டத்தை வழங்கும் நோக்கிலும் டாடா மோட்டார்ஸ் சிறப்பு திட்டங்களை அறிவித்திருக்கின்றது. வருமான சான்று இல்லாதவர்களுக்குகூட கார் கடனில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, நிச்சயம் டாடா கார்களின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இனி டாடா கார்களை வாங்குவது மிக மிக சுலபம்! கோடக் மஹிந்திராவுடன் கூட்டு சேர்ந்த டாடா! சூப்பர் பிளான்களே அறிவிச்சிருக்கு!

புதிய கடன்குறித்து டாடா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான ராஜன் அம்பா கூறியதாவது, "கோடக் மஹிந்திரா பிரைம் லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டாடா கார் வாங்குவதை மேலும் சுலபமாக்கும் நோக்கில் இந்த கூட்டணி தொடங்கப்பட்டுள்ளது. இது தொந்தரவு இல்லா அனுபவத்தை வழங்கும்" என்றார்.

இனி டாடா கார்களை வாங்குவது மிக மிக சுலபம்! கோடக் மஹிந்திராவுடன் கூட்டு சேர்ந்த டாடா! சூப்பர் பிளான்களே அறிவிச்சிருக்கு!

மேலும், இரு நிறுவனங்களின் கூட்டணி குறித்து மஹிந்திரா பிரைம் லிமிடெட் நிர்வனத்தின் நிர்வாக இயக்குனர் வயோமேஷ் கபாசி கூறியதாவது, "தொற்றுநோய் அதிகரித்திருப்பதால் மக்கள் அதிகளவில் தனி காரை வாங்க தொடங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு எளிமையான மற்றும் கவர்ச்சிகரமான கார் நிதி உதவியை வழங்கும் வகையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

இனி டாடா கார்களை வாங்குவது மிக மிக சுலபம்! கோடக் மஹிந்திராவுடன் கூட்டு சேர்ந்த டாடா! சூப்பர் பிளான்களே அறிவிச்சிருக்கு!

இந்த நிதி திட்டத்தின்கீழ் புதிய கார் வாங்க விரும்புவோர் அருகில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் கார் விற்பனையாளர்களை அணுக நிறுவனம் அறிவுறுத்தியிருக்கின்றது. அங்கு இன்னும் பல்வேறு விரிவான தகவல்கள் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனி டாடா கார்களை வாங்குவது மிக மிக சுலபம்! கோடக் மஹிந்திராவுடன் கூட்டு சேர்ந்த டாடா! சூப்பர் பிளான்களே அறிவிச்சிருக்கு!

டாடா மற்றும் கோடக் நிதி நிறுவன கூட்டணி, அதளபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் டாடா கார்களின் விற்பனையை தூக்கி நிறுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்நிறுவனத்தின் டாடா சஃபாரி காருக்கு ஏற்கனவே இந்தியாவில் நல்ல வரவேற்பு கணிசமாக கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Tata Partners With Kotak Mahindra For Easy Car Finance Scheme. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X