நொறுங்கி போகும் டின்-கேன்களுக்கு மத்தியில் சேஃப்டியான கார்கள்! சொல்லி அடிக்கும் டாடா! வேற லெவலுக்கு போயிருச்சு

கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நொறுங்கி போகும் டின்-கேன்களுக்கு மத்தியில் சேஃப்டியான கார்கள்! சொல்லி அடிக்கும் டாடா! வேற லெவலுக்கு போயிருச்சு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான தனது கார் சேல்ஸ் ரிப்போர்ட்டை தற்போது வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 25,730 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 21,199 ஆக மட்டும்தான் இருந்தது.

நொறுங்கி போகும் டின்-கேன்களுக்கு மத்தியில் சேஃப்டியான கார்கள்! சொல்லி அடிக்கும் டாடா! வேற லெவலுக்கு போயிருச்சு

இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார் விற்பனை 21 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஐசி இன்ஜின் கார்கள்தான் முக்கியமான காரணம். கடந்த செப்டம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 24,652 ஐசி இன்ஜின் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 20,891 ஐசி இன்ஜின் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

நொறுங்கி போகும் டின்-கேன்களுக்கு மத்தியில் சேஃப்டியான கார்கள்! சொல்லி அடிக்கும் டாடா! வேற லெவலுக்கு போயிருச்சு

எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்களின் விற்பனை 18 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதேபோல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையும் சிறப்பாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 1,078 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

நொறுங்கி போகும் டின்-கேன்களுக்கு மத்தியில் சேஃப்டியான கார்கள்! சொல்லி அடிக்கும் டாடா! வேற லெவலுக்கு போயிருச்சு

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 308 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை 250 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐசி இன்ஜின் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள் என எப்படி பார்த்தாலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

நொறுங்கி போகும் டின்-கேன்களுக்கு மத்தியில் சேஃப்டியான கார்கள்! சொல்லி அடிக்கும் டாடா! வேற லெவலுக்கு போயிருச்சு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில், டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், நெக்ஸான், ஹாரியர் மற்றும் புதிய சஃபாரி உள்ளிட்ட ஐசி இன்ஜின் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகிய இரண்டு கார்களும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்துள்ளன.

நொறுங்கி போகும் டின்-கேன்களுக்கு மத்தியில் சேஃப்டியான கார்கள்! சொல்லி அடிக்கும் டாடா! வேற லெவலுக்கு போயிருச்சு

இந்தியாவில் சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை அதிகரித்து கொண்டே வருவதற்கு பாதுகாப்பு பலமாக இருப்பதுதான் முக்கியமான காரணம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் சாலை விபத்துக்களில் இருந்து பலமுறை பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளன. விபத்தில் சிக்கிய காரில் இருந்து, சிறு கீறல் கூட இல்லாமல் வெளியே நடந்து வந்தவர்கள் ஏராளம்.

நொறுங்கி போகும் டின்-கேன்களுக்கு மத்தியில் சேஃப்டியான கார்கள்! சொல்லி அடிக்கும் டாடா! வேற லெவலுக்கு போயிருச்சு

இதுகுறித்த செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பலமுறை பதிவு செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் மற்றும் நெக்ஸான் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் விற்பனை செய்து வருகிறது.

நொறுங்கி போகும் டின்-கேன்களுக்கு மத்தியில் சேஃப்டியான கார்கள்! சொல்லி அடிக்கும் டாடா! வேற லெவலுக்கு போயிருச்சு

இதில், டிகோர் எலெக்ட்ரிக் காரின் புதிய மாடல் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மறுபக்கம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற மகுடத்தை தலையில் சூடியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

நொறுங்கி போகும் டின்-கேன்களுக்கு மத்தியில் சேஃப்டியான கார்கள்! சொல்லி அடிக்கும் டாடா! வேற லெவலுக்கு போயிருச்சு

இந்த சூழலில், எதிர்வரும் பண்டிகை காலத்திலும் கார்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிக அளவிலேயே இருக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஆனால் செமி-கண்டக்டர் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் கார் உற்பத்தியில் சவாலை ஏற்படுத்தி வருகிறது. செமி-கண்டக்டர் பற்றாக்குறையால் தற்போது உலகம் முழுவதும் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நொறுங்கி போகும் டின்-கேன்களுக்கு மத்தியில் சேஃப்டியான கார்கள்! சொல்லி அடிக்கும் டாடா! வேற லெவலுக்கு போயிருச்சு

எனினும் இந்த பிரச்னையை சமாளித்து தேவையை பூர்த்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு மத்தியில் பன்ச் (Tata Punch) என்ற புத்தம் புதிய காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

நொறுங்கி போகும் டின்-கேன்களுக்கு மத்தியில் சேஃப்டியான கார்கள்! சொல்லி அடிக்கும் டாடா! வேற லெவலுக்கு போயிருச்சு

டாடா பன்ச் கார் மீது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே டாடா பன்ச் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பன்ச் கார் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் புதிய சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

Most Read Articles
English summary
Tata passenger cars september 2021 sales report
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X