இது ஒன்னு போதும் இந்த கார் விற்பனை பிச்சிக்க போகுது! புதிய Tata Punch ரொம்ப பாதுகாப்பானது! Global NCAP சான்று!
புதிய டாடா பஞ்ச் (Tata Punch) மைக்ரோ எஸ்யூவி கார் ரொம்ப பாதுகாப்பானது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவலை இந்த பதிவில் விரிவாக காணலாம், வாங்க.

எதிர்பார்த்தபடியே டாடா பஞ்ச் (Tata Punch) மைக்ரோ எஸ்யூவி அதிக பாதுகாப்பான கார் என்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை குளோபல் என்சிஏபி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் புதுமுக வாகனமாக பஞ்ச் இருக்கின்றது.

இந்த காரை நிறுவனம் அதன் அல்ட்ராஸ் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காரை தயாரித்து வரும் ஆல்ஃபா பிளாட்பாரத்தில் வைத்து தயாரித்து வருகின்றது. டாடா அல்ட்ராஸ் ஓர் அதிக பாதுகாப்பான காராகும். இது ஐந்திற்கு ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனமாகும்.

ஆகையால், டாடா பஞ்ச் காரும் அதிக பாதுகாப்பான காராக வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், குளோபல் என்சிஏபி அமைப்பு டாடா பஞ்ச் கார் பற்றிய முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு அண்மையில் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவியை மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியது.

அந்த சோதனையில் டாடா பஞ்ச் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர தர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட ஆய்விலேயே இந்த உச்சபட்ச ரேட்டிங்கை பஞ்ச் பெற்றிருக்கின்றது. அதேநேரத்தில் சிறுவர்களுக்கான பாதுகாப்பில் இந்த கார் ஐந்திற்கு நான்கு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது.

டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களே இத்தகைய நல்ல ரேட்டிங்கைப் பெற காரணமாக இருக்கின்றது. இரட்டை ஏர்பேக், ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர்கள் உள்ளிட்டவை பஞ்ச்-இல் வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன், இஎஸ்சி எனப்படும் ஸ்டாண்டர்டு எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பக்கவாட்டு தலை பகுதிக்கு அதிக பாதுகாப்பு, அனைத்து இருக்கைகளிலும் மும்முனை பெல்ட், கார்னரிங் வசதிக் கொண்ட முன் பக்க பனி மின் விளக்கு, பெரிமெட்ரிக் அலாரம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, டிரைவர் மற்றும் கோ-டிரைவர் இருக்கை பயணிக்கான சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் டாடா பஞ்சில் வழங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, முதன் முதலாக பிரேக் ஸ்வே கன்ட்ரோல் மற்றும் டயர் பஞ்சர் ரிப்பேர் கிட் உள்ளிட்டவற்றையும் டாடா இந்த காருக்கு வழங்கியிருக்கின்றது. இதுபோன்ற பன்முக வசதிகளுடனேயே டாடா பஞ்ச் வரும் அக்டோபர் 18ம் தேதி விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருக்கின்றது.

தற்போது காருக்கான புக்கிங் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. ரூ. 21 ஆயிரம் முன்தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வாயிலாக புக்கிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. டாடா பஞ்ச் அதிக பாதுகாப்பான கார் மட்டுமல்ல அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கக் கூடிய வாகனமாகவும் உருவாகியிருக்கின்றது.
இந்தியாவின் கரடு-முரடான சாலைகளைக் கருத்தில் கொண்டு அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் பள்ளம்-மேடுகளை சமாளிக்கும் திறன் உள்ளிட்டவை பஞ்ச் காருக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் கரடு-முரடான சாலைகளை (ஆஃப்-ரோடுகளை) சமாளிக்கும் வகையில் பஞ்ச் காருக்கு 187 மிமீ அளவில் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இதோ டாடா பஞ்ச் காரின் அளவு பற்றிய தகவல் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது. இதோ அப்பட்டியல்:
| Dimensions | Punch | KUV100 | Swift | Ignis | Grand i10 Nios |
| Length | 3840mm | 3700mm | 3845mm | 3700mm | 3805mm |
| Width | 1800mm | 1735mm | 1735mm | 1690mm | 1680mm |
| Height | 1635mm | 1655mm | 1530mm | 1595mm | 1520mm |
| Ground Clearance | 187mm | 170mm | 163mm | 180mm | 165mm |
| Wheelbase | 2450mm | 2385mm | 2450mm | 2435mm | 2450mm |

முன்னதாக செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் டாடா பஞ்ச், அதிக சாய்வான மற்றும் பள்ளமான சாலைகளைக்கூட அசால்டாக கடந்துவிடும் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில், டாடா பஞ்ச் அதிக பாதுகாப்பான பயணத்தையும் வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. டாடா பஞ்ச் ஒற்றை பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். 1.2 லிட்டர் 3சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின், இந்த தேர்வு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. இந்த மோட்டார் 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications








