அதிக பாதுகாப்பு குறைவான விலையில்... டாடா பஞ்ச் காரின் விலை விபரம் வீடியோவாக... தமிழில்!

டாடா மோட்டார்ஸ் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்பார்த்ததைப் போலவே இக்காருக்கு மிகவும் குறைவான விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. ரூ. 5.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து டாடா பஞ்ச் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் உச்ச நிலை வேரியண்டின் விலை ரூ. 9.09 லட்சம் ஆகும். இந்த விலை விபரத்தையே விரிவாக வீடியோவாக இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் வீடியோவை கீழே பார்க்கலாம்.

தனது போட்டியாளர்களுக்கு விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் ஆகிய அனைத்திலும் கடும் போட்டியை வழங்கும் வகையில் டாடா பஞ்ச் உருவாகியுள்ளது. இக்காருக்கு தற்போது ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது. மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயேூவி100 ஆகிய கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி விற்பனைக்கு வந்திருக்கின்றது.

டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி

டாடா பஞ்ச் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் பரிசோதனையில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கை பெற்றிருக்கின்றது. இது பெரியவர்களுக்கான பாதுகாப்பு ரேட்டிங் ஆகும். சிறியவர்களுக்கான பாதுகாப்பில் இந்த கார் ஐந்திற்கு நான்கு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata punch manual and amt variant prices and packs details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X