ஷோரூமை விட்டு வெளியேகூட போகல... அதுக்குள்ள நொருக்கிட்டாரு! உற்சாக மிகுதியால் நடந்த சோகம்!

டாடா பஞ்ச் காரை டெலிவரி எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தைச் சந்தித்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் வீடியோ பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

ஷோரூமை விட்டு வெளியேகூட போகல... அதுக்குள்ள நொருக்கிட்டாரு! உற்சாக மிகுதியால் நடந்த சோகம்!

டாடா நிறுவனத்தின் புதுமுக அறிமுகமாக பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி ரக கார் இருக்கின்றது. இந்த காரே தற்போது டெலிவரி எடுக்கும்போது விபத்தைச் சந்தித்து நொருங்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஷோரூமை விட்டு வெளியேகூட போகல... அதுக்குள்ள நொருக்கிட்டாரு! உற்சாக மிகுதியால் நடந்த சோகம்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி ரக காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிகக் குறைவான விலையில் அதிக சிறப்பு வசதிகளை வாரி வழங்கும் ஓர் தயாரிப்பாக இதனை டாடா மோட்டார்ஸ் நாட்டில் விற்பனைக்கு களமிறக்கியிருக்கின்றது.

ஷோரூமை விட்டு வெளியேகூட போகல... அதுக்குள்ள நொருக்கிட்டாரு! உற்சாக மிகுதியால் நடந்த சோகம்!

இக்காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது வாகனத்தை டெலிவரிக் கொடுக்கும் பணியில் நிறுவனம் மற்றும் விற்பனையாளர்கள் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில், புதிதாக டெலிவரி எடுக்கப்பட்ட பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி அதன் உரிமையாளரின் வீட்டைச் சென்று சேர்வதற்கு முன்னரே ஒர்க்ஷாப்பிற்கு சென்றிருக்கின்றது.

ஷோரூமை விட்டு வெளியேகூட போகல... அதுக்குள்ள நொருக்கிட்டாரு! உற்சாக மிகுதியால் நடந்த சோகம்!

ஆம், டாடா பஞ்ச் கார் டெலிவரி எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தைச் சந்தித்திருக்கின்றது. சம்பவம்குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் மூழ்க வைத்திருக்கின்றது. புதிய நபர் காரை ஓட்ட எடுத்தன் விளவைாகவே இந்த சோக நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. ஆம், அந்நபருக்கு போதியளவில் காரை இயக்குவதில் முன்னணுபவம் இல்லாத காரணத்தினாலேயே இந்த விபத்து அரங்கேறியிருக்கின்றது.

ஷோரூமை விட்டு வெளியேகூட போகல... அதுக்குள்ள நொருக்கிட்டாரு! உற்சாக மிகுதியால் நடந்த சோகம்!

காரில் அதன் புதிய உரிமையாளர் மட்டுமே அமர்ந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஷோரூம் ஊழியர் சில அறிவுறுத்தல்களை வழங்க, அவரே காரை வெளியே எடுக்க முயற்சித்திருக்கின்றனர். ஆரம்பத்திலேயே அவர் லேசாக தடுமாறுவதை நம்மால் காண முடிகின்றது. காரை டெலிவரி எடுத்த உற்சாக மிகுதியில் அந்த நபர் இருப்பதையும் வீடியோவின் வாயிலாக காண முடிகிறது.

ஷோரூமை விட்டு வெளியேகூட போகல... அதுக்குள்ள நொருக்கிட்டாரு! உற்சாக மிகுதியால் நடந்த சோகம்!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஷோரூம் முன்பிருந்த சிறிய அலங்கார தடுப்பு சுவரின்மீது அந்த கார் மோதி முகப்பு பகுதியில் பெருத்த சேதத்தைச் சந்தித்திருக்கின்றது. இந்த நிகழ்வு ஷோரூம் ஊழியர்களை மட்டுமின்றி அப்பகுதியாகச் சென்றுக் கொண்டிருந்த பாதசாரிகளையும் அதிர்ச்சியில் மூழ்க வைத்திருக்கின்றது.

ஷோரூமை விட்டு வெளியேகூட போகல... அதுக்குள்ள நொருக்கிட்டாரு! உற்சாக மிகுதியால் நடந்த சோகம்!

இந்த மோதலினால் டாடா பஞ்ச் காரின் முன்பக்க பம்பர் மற்றும் ரேடியேட்டரில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. காரை புதிதாக வாங்கி ஷோரூமின் வாசலைகூட விட்டு வெளியேறாமல் அதற்குள்ளாகவே விபத்தைச் சந்தித்திருப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகையால், விபத்தைச் சந்தித்த முதல் பஞ்ச் காராக இது மாறியிருக்கின்றது.

ஷோரூமை விட்டு வெளியேகூட போகல... அதுக்குள்ள நொருக்கிட்டாரு! உற்சாக மிகுதியால் நடந்த சோகம்!

டாடா நிறுவனத்தின் மைக்ரோ எஸ்யூவி ஓர் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட வாகனமாகும். குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் பரிசோதனையில் இக்கார் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது. இதன் விளைவாக இக்காரின் மீதான டிமாண்ட் சற்றே அதிகரித்திருக்கின்றது. ஏற்கனவே இது ஓர் விலை குறைவான மற்றும் அதிக பாதுகாப்பான கார் மாடல் என்பதால் இந்தியர்களின் பிரியமான வாகனங்களில் ஒன்றாக பஞ்ச் மாற தொடங்கியிருக்கின்றது.

ஷோரூமை விட்டு வெளியேகூட போகல... அதுக்குள்ள நொருக்கிட்டாரு! உற்சாக மிகுதியால் நடந்த சோகம்!

இக்கார் ரூ. 5.49 லட்சம் என்ற மிகக் குறைவான விலையில் இக்கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது. எந்த விதமான சாலையையும் சமாளிக்கும் திறனுடன் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. கரடு-முரடான பாதை, வளைவுகள் நிறைந்த பாதை, நீர் நிறைந்த சாலை ஆகியவற்றைகூட பஞ்ச் மிகவும் அசால்டாக சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இத்துடன், கார்னரிங் வசதிக் கொண்ட பனி மின் விளக்கு முன் பக்கத்தில், பெரிமெட்ரிக் அலாரம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, டிரைவர் மற்றும் கோ-டிரைவர் இருக்கை பயணிக்கான சீட் பெல்ட் ரிமைண்டர், பிரேக் ஸ்வே கன்ட்ரோல் மற்றும் டயர் பஞ்சர் ரிப்பேர் கிட் உள்ளிட்ட அம்சங்கள் பஞ்ச் காரில் டாடா வழங்கி வருகின்றது.

ஷோரூமை விட்டு வெளியேகூட போகல... அதுக்குள்ள நொருக்கிட்டாரு! உற்சாக மிகுதியால் நடந்த சோகம்!

டாடா பஞ்ச் ஒற்றை பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். 1.2 லிட்டர் 3சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின், இந்த தேர்வு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. இந்த மோட்டார் 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படும்.

ஷோரூமை விட்டு வெளியேகூட போகல... அதுக்குள்ள நொருக்கிட்டாரு! உற்சாக மிகுதியால் நடந்த சோகம்!

இக்காரில் டர்போ ஆப்ஷன் வழங்கப்படாதது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகையால், மிக விரைவில் இத்தேர்வு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நிறுவனம் வெளியிடவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tata punch micro suv delivery gone wrong here is video
Story first published: Saturday, October 30, 2021, 18:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X