இக்னிஸ் போட்டியாளர் Tata Punch மைலேஜ் விபரம் கசிவு... இந்த மலிவு விலை கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்ச் (Punch) மைக்ரோ எஸ்யூவி ரக காரை இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் மைலேஜ் பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இக்னிஸ் போட்டியாளர் Tata Punch மைலேஜ் விபரம் கசிவு... இந்த மலிவு விலை கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது தெரியுமா?

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் டாடா மோட்டார்ஸ், அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி காரை இன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இக்காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 5.49 என்ற விலையிலும், இதன் உயர் நிலை வேரியண்ட் ரூ. 9.09 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

இக்னிஸ் போட்டியாளர் Tata Punch மைலேஜ் விபரம் கசிவு... இந்த மலிவு விலை கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது தெரியுமா?

டாடா நிறுவனம் பஞ்ச் காரை முதன் முதலில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. அப்போதே இந்த கார் பலரின் கவனத்தை ஈர்க்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, பட்ஜெட் வாகன பிரியர்களின் கவனத்தை இந்த கார் பெருமளவில் கவர்ந்து வந்தது. இந்த நிலையிலேயே இக்காருக்கான புக்கிங் பணிகளை நிறுவனம் கடந்த அக்டோபர் 4ம் தேதி இந்தியாவில் தொடங்கியது.

இக்னிஸ் போட்டியாளர் Tata Punch மைலேஜ் விபரம் கசிவு... இந்த மலிவு விலை கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது தெரியுமா?

ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் பஞ்ச் காருக்கான புக்கிங் நடை பெற்று வருகின்றது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் அனைத்தும் அதன் போட்டியாளர்களுக்கு மிகுந்த டஃப் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. மிக தெளிவாக கூற வேண்டுமானால் அனைத்திலும் மிக சிறந்த தயாரிப்பாக டாடா பஞ்ச் காட்சியளிக்கின்றது.

இக்னிஸ் போட்டியாளர் Tata Punch மைலேஜ் விபரம் கசிவு... இந்த மலிவு விலை கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது தெரியுமா?

இந்த நிலையில் பஞ்ச் காரின் மைலேஜ் விபரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தனது போட்டியாளர்களான மாருதி சுசுகி இக்னிஸ், மஹிந்திரா கேயூவி100 ஆகிய கார்களுக்கு போட்டி தரும் வகையில் கணிசமான சிறந்த மைலேஜே தரும் காராக டாடா பஞ்ச் காட்சியளிக்கின்றது.

இக்னிஸ் போட்டியாளர் Tata Punch மைலேஜ் விபரம் கசிவு... இந்த மலிவு விலை கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது தெரியுமா?

டாடா பஞ்ச் 1.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு ரெவோட்ரோன் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த எஞ்ஜின் 84 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி தேர்வில் கிடைக்கிறது.

இக்னிஸ் போட்டியாளர் Tata Punch மைலேஜ் விபரம் கசிவு... இந்த மலிவு விலை கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது தெரியுமா?

இதில், மேனுவல் எஞ்ஜின் வசதிக் கொண்ட பஞ்ச் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.97 கிமீ மைலேஜையும், ஏஎம்டி தேர்வு ஒரு லிட்டருக்கு 18.82 கிமீ மைலேஜையும் வழங்கும். இணையத்தின் வாயிலாக இந்த தகவல் கசிந்துள்ளது. டாடா பஞ்ச் ப்யூர், அட்வென்சர், அக்காம்ப்ளிஷ்ட் மற்றும் கிரியேட்டீவ் ஆகிய ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இக்னிஸ் போட்டியாளர் Tata Punch மைலேஜ் விபரம் கசிவு... இந்த மலிவு விலை கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது தெரியுமா?

இத்துடன், ஏழு விதமான நிற தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஓர்கஸ் வெள்ளை, டேடோனா கிரே, டிராபிகள் மிஸ்ட், அடாமிக் ஆரஞ்சு, மீட்டியோர் ப்ரோன்ஸே, டோர்னாடோ நீலம் மற்றும் கேலிப்ஸோ சிவப்பு ஆகிய நிற தேர்வில் டாட பஞ்ச் விற்பனைக்குக் கிடைக்கும்.

இக்னிஸ் போட்டியாளர் Tata Punch மைலேஜ் விபரம் கசிவு... இந்த மலிவு விலை கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது தெரியுமா?

இத்துடன், பன்முக சிறப்பு அம்சங்களையும் இந்த காரில் டாட வழங்குகின்றது. ஸ்பிளிட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், 16 இன்ச் அளவுள்ள இரட்டை நிற அலாய் வீல், சி பிள்ளர், எல்இடி வால் பகுதி மின் விளக்கு, ரூஃப் ரெயில், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, ஏழு இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் எஞ்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் மோட் ஆகியவை பஞ்சில் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Tata punch micro suv fuel efficiency details revealed
Story first published: Monday, October 18, 2021, 18:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X