அடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

Tata Punch காரின் அறிமுகம் அடுத்த மாதம் அரங்கேற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த தேதியில் இக்கார் அறிமுகமாக இருக்கின்றது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

அடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் வாகனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பஞ்ச் (Punch) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இதனை, மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி மற்றும் மாருதி சுசுகி இக்னிஸ் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக டாடா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

அடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

மிகவும் குறைவான விலையில் மிக அதிக சிறப்பு வசதிகள் உடன் டாடா பஞ்ச் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இந்த காரின் அறிமுகத்தை எதிர்நோக்கி ஒட்டுமொத்த இந்தியாவின் வாகனமே காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் டாடா பஞ்ச் காரின் அறிமுகம் எப்போது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி டாடா பஞ்ச் அதிகாரப்பூர் அறிமுகத்தைப் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நாளிலேயே அதிகாரப்பூர்வ புக்கிங் பணிகளும் இந்தியாவில் தொடங்கப்பட இருக்கின்றன. அதேசமயம், ஏற்கனவே டாடா டீலர்கள் சிலர் ரூ. 5 ஆயிரம் என்ற மிக மிக குறைவான முன் தொகையில் பஞ்ச் காருக்கான புக்கிங்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

டாடா பஞ்ச் கார் என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே பலர் தங்களுக்கான பஞ்ச் காரை புக் செய்து வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே எதிர்பார்ப்பாளர்களின் ஆவலைக் குறைக்கும் பொருட்டு அதன் அதிகாரப்பூர்வ அறிமுக நாள் பற்றிய தகவலை டாடா வெளியிட்டிருக்கின்றது.

அடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

டாடா நிறுவனம் அண்மையில் இப்-பஞ்ச் காரின் கேபின் (உட்புற) பகுதி எப்படி இருக்கும் என்பதைக் காட்டக் கூடிய படத்தை வெளியிட்டது. இது டேஷ்போர்டை தெளிவாகக் காட்டும் வகையில் இருந்தது. இத்துடன், ஏஎம்டி கியர் லிவர் இருப்பதையும் அப்படம் காட்டியது. ஆகையால், இது டாடா பஞ்ச் இன் உயர்நிலை வேரியண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

பஞ்ச் காரை டாடா மோட்டார்ஸ் அதன் ஆல்ஃபா (Agile Light Flexible Advanced) மற்றும் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றது. இந்த யுக்தியைப் பயன்படுத்தியே நிறுவனம் அதன் அல்ட்ராஸ் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காரையும் வடிவமைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

ஆகையால், புதிய பஞ்ச் கார் அதிக கவர்ச்சியான தோற்றம் மற்றும் சூப்பர் சிறப்பம்சங்களை தாங்கிய காராக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. இக்காரில் தயாரிப்பு நிறுவனம் அனைத்துச் சாலைகளையும் சமாளிக்கும் திறனையும் வழங்க இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் டாடா பஞ்ச் கார் ஓர் பாதையே இல்லாத மைலைப் பகுதியில் கடும் பல பரீட்சையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வெளியாகி இருந்தன.

அடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

எனவே டாடா பஞ்ச் இல் இன்னும் அட்டகாசமான அம்சங்கள் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகின்றது. மேலும், இக்கார் பாதுகாப்பு அம்சத்திலும் மிக சிறந்த வாகனமாக விளங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் நான்கு முதல் ஐந்து நட்சத்திர ரேட்டிங்கை பாதுகாப்பு தரத்தில் பெற்றிருக்கின்றன.

அடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

அந்தவகையில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா பஞ்ச் காரும் பாதுகாப்பு தரம் குறித்த ஆய்வில் நல்ல ரேட்டிங்கையே பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து, தொடுதிரை வசதி உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்சிலான டிஎஃப்டி திரை, தானியங்கி ஏசி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி, எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் வெளிப்புற கண்ணாடிகள் உள்ளிட்டவையும் பஞ்ச் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

அடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார் மாடல்களில் வழங்கி வரும் எஞ்ஜின் தேர்வையே டாடா பஞ்சிலும் வழங்க இருக்கின்றது. 1.2 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்ஜினே மேலே பார்த்த கார் மாடல்களில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

Most Read Articles

English summary
Tata punch micro suv reveal date official announced
Story first published: Thursday, September 23, 2021, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X