குறைவான விலையில் வரப்போகிறது... போட்டியாளர்களை கலங்கடிக்குமா Tata Punch கார்? ரிவியூ வீடியோ!
டாடா பன்ச் கார் கடந்த அக்டோபர் 4ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த மைக்ரோ எஸ்யூவி ரக காரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த காரின் சிறப்பம்சங்களையும் கீழே உள்ள வீடியோவில் உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
பன்ச் கார் பற்றிய பெரும்பாலான தகவல்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டு விட்டது. ஆனால் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் அக்டோபர் 20ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், பன்ச் காரின் அதிகாரப்பூர்வ விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த மைக்ரோ-எஸ்யூவி ரக காரின் ஆரம்ப விலை 5.50 லட்ச ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது டாடா பன்ச் காருக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாய் செலுத்தி டாடா பன்ச் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தியா முழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் டாடா பன்ச் காரை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








