டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் தொடுத்திரையில் இத்தனை வசதிகளா!! புதிய டீசர் வெளியீடு!

பண்டிகை காலம் நெருங்கி வருவதை அறிமுகத்திற்கு தயாராகிவரும் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் மாடல்கள் நமக்கு அவ்வப்போது உணர்த்தி கொண்டிருக்கின்றன. மஹிந்திரா மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் எக்ஸ்யூவி700 காரை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் தொடுத்திரையில் இத்தனை வசதிகளா!! புதிய டீசர் வெளியீடு!

இந்த வகையில் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த தயாராகிவரும் மாடல் தான் பஞ்ச். அளவில் சிறிய மைக்ரோ-எஸ்யூவி காராக உருவாக்கி இருக்கும் இதனை டாடா நிறுவனம் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் தொடுத்திரையில் இத்தனை வசதிகளா!! புதிய டீசர் வெளியீடு!

இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள தற்போதைய நிலையில், டாடா பஞ்ச் கார் தொடர்பான சில டீசர் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தை வெளிக்காட்டுவதாக உள்ளன.

டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் தொடுத்திரையில் இத்தனை வசதிகளா!! புதிய டீசர் வெளியீடு!

குறிப்பாக ஒரு வீடியோவில், இந்த மைக்ரோ எஸ்யூவி காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் நிறுவனத்தின் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளது. சுறுசுறுப்பான ஒளி நெகிழ்வான மேம்பட்ட கட்டிடக்கலை என்பதன் சுருக்கமான ஆல்ஃபா-ஆர்க்-இன் அடிப்படையில் இந்த புதிய டாடா கார் உருவாக்கப்பட்டுள்ளது.

டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் தொடுத்திரையில் இத்தனை வசதிகளா!! புதிய டீசர் வெளியீடு!

இதே ப்ளாட்ஃபாரத்தில் தான் விற்பனையில் உள்ள அல்ட்ராஸும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அல்ட்ராஸ் & ஹெரியர் கார்களை உருவாக்க பயன்படுத்த இம்பேக் 2.0 டிசைன் மொழியில் தான் புதிய பஞ்ச் மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களில் காட்டப்பட்டிருக்கும் ஹர்மன் தொடுத்திரை யூனிட் ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவிற்கு இணக்கமானது.

டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் தொடுத்திரையில் இத்தனை வசதிகளா!! புதிய டீசர் வெளியீடு!

கேபினிற்குள் டேஸ்போர்டில் ஏசி துளைகளுக்கு மேலே, எந்தவொரு சப்போர்ட்டும் இல்லாமல் பொருத்தப்பட்டிருப்பதை போல் இந்த ஹர்மன் தொடுத்திரை டாடா பஞ்ச்சில் வழங்கப்பட உள்ளது. இதனுடன் IRA இணைப்பு கார் தொழிற்நுட்பத்தையும் டாடா பஞ்ச் பெற்று வரவுள்ளது.

டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் தொடுத்திரையில் இத்தனை வசதிகளா!! புதிய டீசர் வெளியீடு!

இந்த தொழிற்நுட்பத்தின் மூலம் கிட்டத்தட்ட 27 கார்-இணைப்பு வசதியை பெறலாம். இவற்றில் காரில் உள்ள பாகங்களின் தற்போதைய நிலையை கண்டறிதல், ரிமோட் கண்ட்ரோல் உள்பட ஏகப்பட்டவை அடங்குகின்றன. IRA தொழிற்நுட்பத்தை டாடா நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் அல்ட்ராஸ் ஐ-டர்போ காரிலும் வழங்கி இருந்தது.

டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் தொடுத்திரையில் இத்தனை வசதிகளா!! புதிய டீசர் வெளியீடு!

ப்யூர், அட்வென்ச்சர், அக்கம்ப்ளிஷ்டு மற்றும் க்ரியேட்டிவ் என்கிற நான்கு விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த புதிய டாடா கார் 3,840மிமீ நீளத்திலும், 1,800மிமீ அகலத்திலும், 1,635மிமீ உயரத்திலும் மற்றும் 2,450மிமீ நீள வீல்பேஸ் உடனும் வழங்கப்பட உள்ளது.

டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் தொடுத்திரையில் இத்தனை வசதிகளா!! புதிய டீசர் வெளியீடு!

பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி 366 லிட்டர்கள் கொள்ளவில் இருக்கும் என டாடா கூறியுள்ளது. 366 லிட்டர்கள் என்பது டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரை காட்டிலும் 21 லிட்டர்கள் அதிகமாகும். டாடா பஞ்ச் காரின் டாப் வேரியண்ட்டில் 16-இன்ச்சில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட உள்ளன.

டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் தொடுத்திரையில் இத்தனை வசதிகளா!! புதிய டீசர் வெளியீடு!

இயக்க ஆற்றலை வழங்க, டிகோர், டியாகோ மற்றும் அல்ட்ராஸில் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர், 3-சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் டாடா பஞ்ச் மாடலிலும் பொருத்தப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 85 பிஎச்பி மற்றும் 3,300 ஆர்பிஎம்-இல் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் தொடுத்திரையில் இத்தனை வசதிகளா!! புதிய டீசர் வெளியீடு!

இதில் பஞ்ச் காரின் ஏஎம்டி வெர்சனில், காம்பெக்ட் எஸ்யூவி பிரிவிலேயே முதல்முறையாக 'டிராக்‌ஷன் ப்ரோ' மோட் கொடுக்கப்பட உள்ளது. சகதியில் வாகனம் மாட்டிக்கொண்டால் மீட்க இந்த மோட் மிகவும் உதவியாக இருக்கும். இத்துடன் 'டைனா ப்ரோ' தொழிற்நுட்பத்தையும் இந்த புதிய டாடா கார் பெற்றுவரவுள்ளது.

டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் தொடுத்திரையில் இத்தனை வசதிகளா!! புதிய டீசர் வெளியீடு!

சற்று ஆழமுள்ள நீர் நிலைகளில் இயங்குவதற்கு இந்த தொழிற்நுட்பம் பயன்படும். இவை மட்டுமின்றி பஞ்ச் மாடலின் டாப் வேரியண்ட்களில் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் அமைப்பு மற்றும் கார்னரிங் செயல்பாட்டுடன் ஃபாக் விளக்குகளும் வழங்கப்பட உள்ளன. மொத்த தோற்றத்தில் டாடா பஞ்ச் உங்களுக்கு ஹெரியரை போன்று தோற்றமளிக்கலாம்.

டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள ஹர்மன் தொடுத்திரையில் இத்தனை வசதிகளா!! புதிய டீசர் வெளியீடு!

ஒரே டிசைன் மொழியில் உருவாக்கப்படுவது மட்டுமின்றி, எல்இடி டிஆர்எல்களுடன் ஹெரியரில் வழங்கப்படும் அதே காரை பிளந்துக்கொண்டு ஒளியை வழங்குவது போன்றதான ஹெட்லேம்ப்களினால் இவ்வாறு நம்மில் சிலருக்கு தோன்றலாம். 90-டிகிரிக்கு விரிக்கக்கூடிய கதவுகள், 16-இன்ச் இரட்டை-நிற அலாய் சக்கரங்கள், க்ரூஸ் கண்ட்ரோல், பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம் மற்றும் மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் உள்ளிட்டவை இந்த டாடா மைக்ரோ-எஸ்யூவி காரில் வழங்கப்பட உள்ள மற்ற அம்சங்களாகும்.

Most Read Articles

English summary
Tata Punch To Get 27 Connected Car Features; More Details Emerge.
Story first published: Thursday, September 30, 2021, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X