விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata Punch... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்! இவ்ளோ குறைவான விலையிலா?

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் Tata Punch மைக்ரோ எஸ்யூவி கார்குறித்த முக்கிய தகவல்கள் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளன. என்னென்ன வேரியண்ட் மற்றும் என்னென்ன நிறத் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata Punch... இணையத்தில் கசிந்தது முக்கிய தகவல்கள்! இவ்ளோ குறைவான விலையா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், இந்தியாவில் மிக விரைவில் பஞ்ச் (Punch) எனும் புதுமுக கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. 2021 தீபாவளியை முன்னிட்டு இக்கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். ஏற்கனவே விற்பனையாளர்கள் ஷோரூம்களில் இந்த கார் காட்சியளிக்கத் தொடங்கிவிட்டது. இக்காரை டாடா நிறுவனம் மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி100என்எக்ஸ்டி ஆகிய மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata Punch... இணையத்தில் கசிந்தது முக்கிய தகவல்கள்! இவ்ளோ குறைவான விலையா?

வரும் அக்டோபர் 4ம் தேதி அன்றே இந்த காரை நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆகையால், இந்த நாளை எதிர்நோக்கி ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக் கொண்டிருக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் தற்போது புதிய தகவல்கள் டாடா பஞ்ச் குறித்து வெளியாகி இருக்கின்றன.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata Punch... இணையத்தில் கசிந்தது முக்கிய தகவல்கள்! இவ்ளோ குறைவான விலையா?

ட்ரிம்:

டாடா பஞ்ச் காரின் வேரியண்ட் விபரங்கள் மற்றும் நிறம் பற்றிய முக்கிய தகவல்களே இணையத்தின் வாயிலாக கசிந்திருக்கின்றன. டாடா பஞ்ச் நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ப்யூர் (Pure), அட்வென்சர் (Adventure), அக்காம்ப்ளிஷ்ட் (Accomplished) மற்றும் கிரியேட்டிவ் (Creative) ஆகிய தேர்வுகளிலேயே டாடா பஞ்ச் விற்பனைக்கு வர இருக்கின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata Punch... இணையத்தில் கசிந்தது முக்கிய தகவல்கள்! இவ்ளோ குறைவான விலையா?

நிறங்கள்:

இதேபோல் ஆறு விதமான நிற தேர்வுகளில் டாடா பஞ்ச் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. வெள்ளை (White), கிரே (Grey), ப்ரோன்சே (Bronze), ஆரஞ்சு (Orange), நீலம் (Blue) மற்றும் ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge) ஆகிய நிற தேர்வுகளிலேயே டாடா பஞ்ச் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata Punch... இணையத்தில் கசிந்தது முக்கிய தகவல்கள்! இவ்ளோ குறைவான விலையா?

இதில் உயர்நிலை ட்ரிம்மாக காட்சியளிக்கும் கிரியேட்டிவ்-இல் இரு நிற தேர்வு வழங்கப்பட இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த உறுதியான தகவல்களை டீம் பிஎச்பி தளம் வெளியிட்டிருக்கின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata Punch... இணையத்தில் கசிந்தது முக்கிய தகவல்கள்! இவ்ளோ குறைவான விலையா?

எஞ்ஜின்:

டாடா பஞ்ச் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதே திறன் கொண்ட எஞ்ஜினையே டாடா நிறுவனம் அதன் அல்ட்ராஸ் பிரீமியம் தர காரில் வழங்கி வருகின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata Punch... இணையத்தில் கசிந்தது முக்கிய தகவல்கள்! இவ்ளோ குறைவான விலையா?

இத்துடன், 1.2 லிட்டர் டர்போசார்ஜட் மோட்டாரிலும் பஞ்ச் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் ஏஎம்டி ஆகிய தேர்வுகளிலும் டாடா பஞ்ச் கார் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பம்சங்கள் உயர்நிலை ட்ரிம்களாக விற்பனைக்கு வர இருக்கும் அக்காம்ப்ளிஷ்ட் மற்றும் கிரியேட்டிவ் ட்ரிம்களில் எதிர்பார்க்கப்படுகின்றன.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata Punch... இணையத்தில் கசிந்தது முக்கிய தகவல்கள்! இவ்ளோ குறைவான விலையா?

பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி மிகவும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், 4.99 லட்ச என்ற மிக மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், விலை குறித்த தகவலை டாடா நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. மிக விரைவில் இதுபோன்ற முக்கிய தகவல்களை டாடா மோட்டார்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata Punch... இணையத்தில் கசிந்தது முக்கிய தகவல்கள்! இவ்ளோ குறைவான விலையா?

டாடா பஞ்ச் வரும் அக்டோபர் 4ம் தேதி அறிமுகமாக இருப்பதை முன்னிட்டு டாடா டீலர்கள் சிலர் ரூ. 5 ஆயிரம் என்ற மிக மிக குறைவான விலையில் முன் பதிவுகளைத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வ புக்கிங் அல்ல. அக்டோபர் 4ம் தேதி அன்று முதல் இருந்தே அதிகாரப்பூர்வ புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata Punch... இணையத்தில் கசிந்தது முக்கிய தகவல்கள்! இவ்ளோ குறைவான விலையா?

டாடா மோட்டார்ஸ் அதன் ஆல்ஃபா (Agile Light Flexible Advanced) மற்றும் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், டாடா பஞ்ச் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காராக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. இத்துடன், தொடுதிரை வசதி உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்சிலான டிஎஃப்டி திரை, தானியங்கி ஏசி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி ஆகிய வசதிகளும் பஞ்ச் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 28, 2021, 9:43 [IST]
English summary
Tata punch micro suv variants and colours options leaked via online
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+