ஆரஞ்ச் நிறத்தில், புனேவில் காட்சித்தந்த டாடா பஞ்ச்!! முன்பதிவுகள் நடைபெறுகின்றன

விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி கார் ஒன்று ஆரஞ்ச் நிறத்தில் பொது இடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை பற்று இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆரஞ்ச் நிறத்தில், புனேவில் காட்சித்தந்த டாடா பஞ்ச்!! முன்பதிவுகள் நடைபெறுகின்றன

விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள டாடா பஞ்ச் மைக்ரோ-டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சந்தையில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பஞ்ச் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரின் அறிமுக பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. அளவில் மிகவும் சிறியதாக வடிவமைக்கப்படுவதால் இந்த புதிய டாடா காரினை மைக்ரோ-எஸ்யூவி என்றும் அழைக்கலாம்.

ஆரஞ்ச் நிறத்தில், புனேவில் காட்சித்தந்த டாடா பஞ்ச்!! முன்பதிவுகள் நடைபெறுகின்றன

டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரை வடிவமைக்க பயன்படுத்தப்பட்ட அதே ஆல்ஃபா-ஆர்க் (சுறுசுறுப்பான ஒளி நெகிழ்வான மேம்பட்ட கட்டிடக்கலை) ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ள டாடா பஞ்ச்சின் அறிமுகம் அடுத்த 2021 அக்டோபர் மாதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரஞ்ச் நிறத்தில், புனேவில் காட்சித்தந்த டாடா பஞ்ச்!! முன்பதிவுகள் நடைபெறுகின்றன

இதற்கிடையில் தான் தற்போது ஆரஞ்ச் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட டாடா பஞ்ச் கார் ஒன்று புனேவில் ராகுல் ஷர்மா என்பவரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆரஞ்ச் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த பஞ்ச் காரின் மேற்கூரை கருப்பு நிறத்தில் உள்ளது. அதேநேரம் காரை சுற்றிலும் பிளாஸ்டிக் க்ளாடிங்குகளையும் பார்க்க முடிகிறது.

ஆரஞ்ச் நிறத்தில், புனேவில் காட்சித்தந்த டாடா பஞ்ச்!! முன்பதிவுகள் நடைபெறுகின்றன

இந்த குறிப்பிட்ட டாடா பஞ்ச் கார் மிகவும் காஸ்ட்லீயான தோற்றத்தில் காட்சியளிப்பதால், இது டாப் வேரியண்ட்டாக இருக்க வேண்டும். இந்த பஞ்ச் காரில் வெள்ளை நிற நம்பர் ப்ளேட்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் டிவிசி வீடியோவிற்கான ஷீட்டிங் ஸ்பாட்டில் இருந்து இந்த படங்கள் வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆரஞ்ச் நிறத்தில், புனேவில் காட்சித்தந்த டாடா பஞ்ச்!! முன்பதிவுகள் நடைபெறுகின்றன

ஏனெனில் இன்னும் அறிமுகம் செய்யப்படாத காரின் டாப் வேரியண்ட் பெரும்பாலும் இவ்வாறு டிவிசி வீடியோவிற்கான படப்பிடிப்பின்போது தான் வெளியே கொண்டுவரப்படும். இந்த ஸ்பை படங்களில் டாடா பஞ்ச் காரில் மெஷின் கட் அலாய் சக்கரங்கள், எல்இடி டிஆர்எல்கள், ஒருங்கிணைக்கப்பட்ட ப்ளிங்கர்ஸ் உடன் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் மேற்கூரை தண்டவாளங்களை பார்க்க முடிகிறது.

ஆரஞ்ச் நிறத்தில், புனேவில் காட்சித்தந்த டாடா பஞ்ச்!! முன்பதிவுகள் நடைபெறுகின்றன

மேற்கூரையை போல் காரின் பில்லர்களும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட, கதவு கைப்பிடிகள் அனைத்தும் காரின் ஆரஞ்ச் நிறத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸின் கார்கள் வரிசையில் நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவிக்கு கீழே நிலைநிறுத்தப்படும் பஞ்ச் சப்-காம்பெக்ட் எஸ்யூவிக்கு மாருதி இக்னிஸ், நிஸான் மேக்னைட் மற்றும் விரைவில் சிட்ரான் பிராண்டில் இருந்து களமிறக்கப்படும் சி3 மாடல்கள் போட்டியாக விளங்கவுள்ளன.

ஆரஞ்ச் நிறத்தில், புனேவில் காட்சித்தந்த டாடா பஞ்ச்!! முன்பதிவுகள் நடைபெறுகின்றன

டாடா பிராண்டின் புதிய இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியில் பஞ்ச் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. டிசைன் மொழியின் அடிப்படையில் தான் அல்ட்ராஸ் மற்றும் ஹெரியர் கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மைக்ரோ-எஸ்யூவி காரின் C-பில்லர்கள் கதவு கைப்பிடிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

ஆரஞ்ச் நிறத்தில், புனேவில் காட்சித்தந்த டாடா பஞ்ச்!! முன்பதிவுகள் நடைபெறுகின்றன

சக்கரங்களுக்கு மேலே சக்கர வளைவுகள் சதுர வடிவில் வழங்கப்பட்டுள்ளன. காரின் முன்பக்கத்தில் பெரிய அளவில் பம்பர், அதற்கு மேலே எல்இடி டிஆர்எல்களுடன் பிளவுப்பட்ட வடிவில் ஹெட்லேம்ப் அமைப்பு உள்ளது. இவற்றுடன் முன்பக்க பம்பரின் கீழ்பகுதியில் முக்கியமான ஹெட்லேம்ப்களையும் பார்க்க முடிகிறது.

ஆரஞ்ச் நிறத்தில், புனேவில் காட்சித்தந்த டாடா பஞ்ச்!! முன்பதிவுகள் நடைபெறுகின்றன

பின்பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப்கள் 3-அம்பு வடிவத்தில் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது நமக்கு கிடைத்துள்ள படங்களில் 16-இன்ச் அலாய் சக்கரங்களில் இந்த டாடா பஞ்ச் கார் நின்று கொண்டிருக்கிறது. இது டாப் வேரியண்ட்டாக இருப்பதால் இத்தகைய சக்கரங்கள் வழங்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் விலை குறைவான பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி காரில் 15 இன்ச்சில் இரும்பு சக்கரங்களை எதிர்பார்க்கிறோம்.

ஆரஞ்ச் நிறத்தில், புனேவில் காட்சித்தந்த டாடா பஞ்ச்!! முன்பதிவுகள் நடைபெறுகின்றன

டாடா பஞ்ச் உட்புற கேபினை பெரும்பான்மையாக விற்பனையில் இருக்கும் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காருடன் தான் பகிர்ந்து கொள்ளவுள்ளது ஏற்கனவே நமக்கு தெரிந்ததுதான். இந்த வகையில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவற்றை டாடா பஞ்ச் கார் பெற்று வரவுள்ளது.

ஆரஞ்ச் நிறத்தில், புனேவில் காட்சித்தந்த டாடா பஞ்ச்!! முன்பதிவுகள் நடைபெறுகின்றன

இந்த நிலையில், டாடாவின் இந்த மைக்ரோ-எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை ரூ.5,000- ரூ.21,000 வரையிலான டோக்கன் தொகையுடன் டாடா டீலர்கள் ஏற்க துவங்கியுள்ளனர். முன்பதிவை வாடிக்கையாளர் ரத்து செய்தால், இந்த டோக்கன் தொகை திரும்ப வழங்கப்பட்டுவிடும் என கூறப்பட்டாலும், இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதுவரையில் எந்தவொரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

டாடா பஞ்ச் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட உள்ளன.

Most Read Articles

English summary
Tata Punch Finished In Orange Colour Spied; Interior, Bookings Open.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X