Tata Punch காரை முழுமையாக காட்சிப்படுத்தும் வீடியோ வெளியானது... வேற லெவல்ல இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

Tata Punch காரை முழுமையாகக் காட்சிப்படுத்தும் வீடியோ வெளியாகியிருக்கின்றது. இப்புதிய வீடியோகுறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் காணலாம், வாங்க.

Tata Punch காரை முழுமையாக காட்சிப்படுத்தும் வீடியோ வெளியானது... வேற லெவல்ல இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியா சாலைகளை மிக விரைவில் பதம் பார்க்க வருகிறது Tata Motors (டாடா மோட்டார்ஸ்) நிறுவனத்தின் Punch (பஞ்ச்) கார். இது ஓர் மைக்ரோ எஸ்யூவி (micro SUV) ரக காராகும். மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி ஆகிய கார்களுக்கு போட்டியாக இக்கார் மிக விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

Tata Punch காரை முழுமையாக காட்சிப்படுத்தும் வீடியோ வெளியானது... வேற லெவல்ல இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த காரின் அறிமுகம் மிக விரைவில் அரங்கேற இருக்கின்றது. இதுகுறித்து அண்மையில் டுவிட்டர் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மிக விரைவில் பண்டிகைத் தினத்தை முன்னிட்டு பஞ்ச் அறிமுகம் செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இத்தகவல் வெளியாகுவதற்கு முன்னரே டாடா கார் விற்பனையாளர்கள் சிலர் பஞ்ச் காருக்கான புக்கிங்கை அதிகாரப்பூர்வமற்ற நிலையில் மேற்கொள்ள தொடங்கிவிட்டனர்.

Tata Punch காரை முழுமையாக காட்சிப்படுத்தும் வீடியோ வெளியானது... வேற லெவல்ல இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

ஆம், இந்தியாவில் டாடா பஞ்ச் காருக்கான புக்கிங்கை நிறுவனம் இன்னும் அறிவித்திராத நிலையில் விற்பனையாளர்கள் சிலர் தங்கள் தரப்பில் இருந்து புக்கிங் பணிகளைத் தொடங்கியிருக்கின்றனர். திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி உடன் முன் தொகைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

Tata Punch காரை முழுமையாக காட்சிப்படுத்தும் வீடியோ வெளியானது... வேற லெவல்ல இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த மாதிரியான சூழ்நிலையில் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் பஞ்ச் கார்குறித்த புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளது, டாடா. வீடியோவில் டாடா பஞ்ச் முழுமையாக காட்சியளித்திருக்கின்றது. முன்னதாக கொஞ்சம் கொஞ்சமாக பஞ்ச் கார் காட்சியளித்து வந்தநிலையில் தற்போது முழுமையாக காட்சியளித்திருக்கின்றது. இது அக்காரின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்யும் வகையில் அமைந்துள்ளது.

Tata Punch காரை முழுமையாக காட்சிப்படுத்தும் வீடியோ வெளியானது... வேற லெவல்ல இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

டாடா பஞ்ச் மிக மோசமான சாலைகளைக் கூட மிக அசால்டாக கடந்துவிடும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த தகவல் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவின் வாயிலாக உறுதியாகியுள்ளது. முன்னதாக, பாதையே இல்லாத மலை பகுதியில் பஞ்ச் கார் சவாலான பயணங்களை மேற்கொள்வது போன்ற காட்சிகள் வெளியாகியிருந்தன.

Tata Punch காரை முழுமையாக காட்சிப்படுத்தும் வீடியோ வெளியானது... வேற லெவல்ல இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

இதன்வாயிலாக டாடா பஞ்ச் காரில் அனைத்து சாலைகளிலும் இயங்கும் வகையில் வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே முந்தைய மற்றும் தற்போதைய வீடியோக்கள் அமைந்திருக்கின்றன. டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி ஐந்து பேர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதியுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது.

Tata Punch காரை முழுமையாக காட்சிப்படுத்தும் வீடியோ வெளியானது... வேற லெவல்ல இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், டர்போசார்ஜட் எஞ்ஜின் தேர்வும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அல்ட்ராஸ் காரை உருவாக்கி வரும் அதே பிளாட்பாரத்தை பயன்படுத்தி பஞ்ச் காரும் உருவாகி வருவதால் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காராகவும் இது விற்பனைக்கு வர இருக்கின்றது.

Tata Punch காரை முழுமையாக காட்சிப்படுத்தும் வீடியோ வெளியானது... வேற லெவல்ல இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

அந்தவகையில், ஏர்-பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளிட்டவை இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. பஞ்ச் கார் டாடாவின் ஆல்ஃபா-ஆர்க் (Agile Light Flexible Advanced Architecture) வாயிலாக உருவாக்கப்படுகின்றது. இத்துடன், தனது 2.0 டிசைன் தாத்பரியத்தையும் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

Tata Punch காரை முழுமையாக காட்சிப்படுத்தும் வீடியோ வெளியானது... வேற லெவல்ல இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

ஆகையால், டாடா ஹாரியர் எஸ்யூவி போல் மிகவும் கவர்ச்சியான கார் மாடலாக இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் முகப்பு பகுதி ஹாரியரைப் போல் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. முக்கொம்பு வடிவிலமான பம்பர், மெல்லிய இழை போன்ற டிஆர்எல்கள், பனி மின் விளக்கு மற்றும் எல்இடி ஹெட்லேம்ப், அலாய் வீல் ஆகியவை இதில் இடம் பெற இருக்கின்றது.

Tata Punch காரை முழுமையாக காட்சிப்படுத்தும் வீடியோ வெளியானது... வேற லெவல்ல இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

டாடா பஞ்ச் கார் இந்திய சந்தையில் ரூ. 5 லட்சம் தொடங்கி ரூ. 8.5 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இதன் வருகை குறிப்பாக இந்தியாவின் பட்ஜெட் வாகன பிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கின்றது. தீபாவளியை முன்னிட்டு மிக விரைவில் இக்கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் நிறுவனம் பஞ்சை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 14, 2021, 16:59 [IST]
English summary
Tata punch new video showcases its rugged nature
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+