வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!

Tata Punch மைக்ரோ எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த முழு விபரத்தைக் கீழே காணலாம்.

வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி (Punch micro SUV) ரக காரை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் இன்று (அக்டோபர் 4) இந்தியாவில் வெளியீடு செய்தது. பட்ஜெட் வாகன பிரியர்கள் மத்தியில் இந்த காரின் அறிமுகம் மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!

காரின் அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்சிற்கான புக்கிங்கை ஏற்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. ரூ. 21,000 என்ற முன்-தொகையில் காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷோரூம்களின் வாயிலாக புக்கிங் பணிகள் மேற்கொள்ளப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!

இத்துடன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்திலும் காருக்கான புக்கிங் ஏற்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா பஞ்ச் நான்கு விதமான பெர்சோனாவில் விற்பனைக்குக் கிடைக்கும். ப்யூர், அட்வென்சர், அக்காம்ப்ளிஷ் மற்றும் கிரியேட்டீவ் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!

ப்யூர்:

இதில் ப்யூர் தேர்வில் விற்பனைக்கு கிடைக்க இருக்கும் பஞ்ச் காரில் ஆர்15 வீல்கள், பன்முக டிரைவிங் மோட்கள், எஞ்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி, இரு வித நிற தேர்வு (சாம்பல் மற்றும் வெள்ளை) ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!

அட்வென்சர்:

அட்வென்சர் தேர்வில் 4 இன்ச் அளவு கொண்ட ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள், பவர் விண்டோ, ரிமோட் கீ, மிஸ்ட் கிரீன் நிற தேர்வு ஆகியை வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன். கிரே மற்றும் வெள்ளை ஆகிய நிற தேர்விலும் அட்வென்சர் விற்பனைக்குக் கிடைக்கும்.

வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!

அக்காம்ப்ளிஷ்:

7 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன்), மீட்டியோர் ப்ரோன்ஸே நிறம், எல்இடி மின் விளக்குகள், ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், பின் பக்கத்தில் கேமிரா, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகளுடன் அக்காம்ப்ளிஷ் தேர்வு விற்பனைக்குக் கிடைக்கும்.

வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!

கிரியேட்டீவ்:

மேலே பார்த்த தேர்வுகளைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்கள் வசதிகள் கொண்டதாக கிரியேட்டீவ் காட்சியளிக்கின்றது. புரெஜெக்டர் ஹெட்லேம்ப், ஆர்16 டைமண்ட் கட் அலாய் வீல்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ், ஆட்டோ வைப்பர், ஆட்டோ ஏசி, கூல்டு க்ளோவ் பாக்ஸ், லெதர் விராப்பட் ஸ்டியரிங் வீல், ஐஆர்ஏ கார் இணைப்பு மற்றும் இரு நிற கேபின் என எக்கசக்க அம்சங்களுடன் கிரியேட்டீவ் தேர்வு விற்பனைக்குக் கிடைக்கும்.

வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!

டாடா நிறுவனம் இப்புதுமுக பஞ்ச் காரை அதன் ஆல்ஃபா பிளாட்பாரத்தில் வைத்து கட்டமைத்து வருகின்றது. அல்ட்ராஸ் ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற பிரீமியம் தர ஹேட்ச்பேக் வாகனமாகும். எனவே இக்காரை போலவே பஞ்ச்-ம் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட வாகனமாக உருவாகியிருக்கின்றது.

வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!

90 டிகிரி திறப்பு வசதிக் கொண்ட கதவுகள், 366 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளிட்ட வசதிகள் பஞ்ச்-இல் வழங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய டாடா பஞ்ச் அளவிலும் சற்று பெரிய காரைப் போன்று காட்சியளிக்கின்றது. 3,840 மிமீ நீளத்திலும், 1,800 மிமீ அகலத்திலும், 1,635 மிமீ உயரத்திலும் மற்றும் 2,450 மிமீ வீல்பேஸ் அளவிலும் இந்த கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த அளவுகள் அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!

இத்துடன், அதிக பாதுகாப்பு வசதியாக இரட்டை ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் ஸ்வே கன்ட்ரோல் எனும் புத்தம் புதிய சிறப்பு பாதுகாப்பு அம்சம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, டிகோர், டியாகோ மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார் மாடல்களில் வழங்கப்பட்டிருக்கும் அதே எஞ்ஜின் ஆப்ஷனே பஞ்ச்-லும் வழங்கப்பட உள்ளது.

வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!

1.2 லிட்டர், 3-சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒற்றை எஞ்ஜின் தேர்வில் மட்டுமே பஞ்ச் கிடைக்கும் என தற்போது நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன், டர்போசார்ஜட் எஞ்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட இருக்கின்றது.

வெளியீடானது Tata Punch... இப்போவே புக் செய்யலாம்... ரொம்ப கம்மியான முன்தொகையில்!

டாடா பஞ்ச் மஹிந்திரா எக்ஸ்யூவி100, மாருதி இக்னிஸ் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இக்காரின் விலை குறித்த விபரங்கள் மிக விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது. ரூ. 5.5 லட்சம் தொடங்கி ரூ. 8 லட்சத்திற்கும் குறைவான விலையில் இக்கார் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Tata punch suv unveiled in india here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X