Tata Punch எஸ்யூவியின் எந்த வேரியண்டில் சிறப்பம்சங்கள் அதிகம்?.. இதோ வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

டாடா பஞ்ச் (Tata Punch) மைக்ரோ எஸ்யூவி என்னென்ன வேரியண்ட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றும் எந்த வேரியண்டில் என்னென்ன வசதிகள் இடம் பெற இருக்கின்றன என்பது பற்றிய முழு விபரத்தையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Tata Punch எஸ்யூவியின் எந்த வேரியண்டில் சிறப்பம்சங்கள் அதிகம்?.. இதோ வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்ச் மைக்ரோ (Punch) எஸ்யூவி ரக காரை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் நேற்றைய தினம் இந்தியாவில் வெளியீடு செய்தது. இக்காரின் இந்திய வெளியீடு பலரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என்றே கூறலாம். குறிப்பாக, பட்ஜெட் வாகன பிரியர்களை கூடுதல் குஷியில் இது ஆழ்த்தியுள்ளது.

Tata Punch எஸ்யூவியின் எந்த வேரியண்டில் சிறப்பம்சங்கள் அதிகம்?.. இதோ வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

மிக மிகக் குறைவான விலையில் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் விலை குறித்த தகவலை நிறுவனம் வெளியீட்டின்போது வெளியிடவில்லை. மிக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரின் விலை மற்றும் சில முக்கிய விபரங்களை நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tata Punch எஸ்யூவியின் எந்த வேரியண்டில் சிறப்பம்சங்கள் அதிகம்?.. இதோ வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

அதேவேலையில், பஞ்ச் என்னென்ன வேரியண்டில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றும் எந்தெந்த வேரியண்டில் என்னென்ன மாதிரியான சிறப்பம்சங்கள் இடம் பெறும் என்பது பற்றிய தகவலை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. அதனை விரிவாக விளக்கும் வகையிலேயே இப்பதிவியை நமது டிரைவ்ஸ்பார்க் வெளியிட்டுள்ளது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Tata Punch எஸ்யூவியின் எந்த வேரியண்டில் சிறப்பம்சங்கள் அதிகம்?.. இதோ வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி ஒட்டுமொத்தமாக நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். ப்யூர், அட்வென்சர், அக்காம்ப்ளிஷ்ட் மற்றும் கிரியேட்டீவ் ஆகியவையே அவை ஆகும்.

Tata Punch எஸ்யூவியின் எந்த வேரியண்டில் சிறப்பம்சங்கள் அதிகம்?.. இதோ வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

ப்யூர் மேனுவல் டிரான்ஸ்மிஷன் - Pure (MT)

 • குரோம் லைன்கள் (Humanity chrome line)
 • உடல் நிறத்திலான பம்பர் (Body-coloured bumpers)
 • எல்இடி தர இன்டிகேட்டர் மின் விளக்குகள் (LED turn indicators)
 • கதவு, வீல் ஆர்ச் மற்றும் சில் கிளாடிங் (Door, wheel arch, and sill cladding)
 • 90 டிகிரி திறக்கும் கதவுகள் (90-degree opening doors)
 • முன்பக்கத்தின் இரு கதவுகளிலும் பவர் விண்டோ (Front power windows)
 • டில்ட் அட்ஜெஸ்டபிள் ஸ்டியரிங் வீல் (Tilt-adjustable steering)
 • தட்டையான பின் பக்க தரை (Rear flat floor)
 • இரட்டை ஏர் பேக் (Dual airbags)
 • ஆர்பிஏஎஸ் (RPAS)
 • இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் (ABS with EBD)
 • பிரேக் ஸ்வே கன்ட்ரோல் (Brake sway control)
 • ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை பாயிண்டுகள் (Isofix child seat anchorage points)
 • Tata Punch எஸ்யூவியின் எந்த வேரியண்டில் சிறப்பம்சங்கள் அதிகம்?.. இதோ வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

  அட்வென்சர் - Adventure

  • ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்ப் (Follow-me-home-headlamps)
  • வீல்களுக்கான முழு கவர் (Full wheel covers)
  • உடல் நிறத்திலான பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் (Body-coloured ORVMs)
  • எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் (Electrically adjustable ORVMs)
  • ஃப்ளிப் சாவி உடன் கூடிய சென்ட்ரல் ரிமோட் லாக்கிங் (Central remote locking with flip key)
  • 4 இன்ச் அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (4-inch infotainment system)
  • நான்கு ஸ்பீக்கர்கள் (4 speakers)
  • யுஎஸ்பி சார்ஜிஹ் பாயிண்ட் (USB charging port)
  • ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள் (Steering-mounted controls)
  • பவர் விண்டோக்கள் (All four power windows)
  • Tata Punch எஸ்யூவியின் எந்த வேரியண்டில் சிறப்பம்சங்கள் அதிகம்?.. இதோ வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

   அக்காம்ப்ளிஷ்ட் (Accomplished)

   • பனி மின் விளக்கு (Front fog lights)
   • 15 இன்சிலான ஹைப்பர் ஸ்டைல் வீல்கள் (15-inch hyper-style wheels)
   • எல்இடி வால் பகுதி மின் விளக்கு (LED tail lights)
   • 7 இன்ச் ஹார்மன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (Harman-sourced 7-inch touchscreen infotainment system)
   • ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி 9Apple CarPlay and Android Auto connectivity)
   • இரண்டு ட்வீட்டர்கள் (2 tweeters0
   • உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் டிரைவர் இருக்கைகள் (Height-adjustable driver seat)
   • எஞ்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் (Engine start-stop button)
   • க்ரூஸ் கன்ட்ரோல் (Cruise control)
   • டிராக்சன் ப்ரோ மோட் - Traction pro mode (AMT only)
   • ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா (Reverse parking camera)
   • Tata Punch எஸ்யூவியின் எந்த வேரியண்டில் சிறப்பம்சங்கள் அதிகம்?.. இதோ வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

    கிரியேட்டீவ் - Creative

    • புரஜெக்டர் ஹெட்லேம்ப் (Projector headlamps)
    • எல்இடி டிஆர்எல்கள் (LED DRLs)
    • தானியங்கி ஹெட்லேம்ப் (Automatic headlamps)
    • தானாக மடித்துக் கொள்ளும் பின்னபக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் (Auto-folding ORVMs)
    • ரூஃப் ரெயில்கள் (Roof rails)
    • 16 இன்ச் அளவுள்ள டைமண்ட் கட் அலாய் வீல்கள் (16-inch diamond-cut alloy wheels)
    • மழை வந்த உடன் தானாக சுத்தம் செய்யும் வைப்பர்கள் (Rain-sensing wipers)
    • பின்பக்கத்திலும் வைப்பர், சுத்தம் செய்யும் வசதியுடன் (Rear wiper and washer)
    • 7 இன்ச் அளவுள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் (7-inch instrument console)
    • கூல்டு குளோவ் பாக்ஸ் (Cooled glove-box)
    • பட்டில் லேம்ப்ஸ் (Puddle lamps)
    • பின் பக்க இருக்கையாளர்களுக்கு ஆர்ம் ரெஸ்ட் (Rear-seat armrest)
    • தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் (Automatic climate control0
    • லெதர் விரா்ப்பட் ஸ்டியரிங் வீல் மற்றும் கியர் க்நாப்புகள் (Leather-wrapped steering wheel and gear-knob)
    • ரியர் டிஃபாக்கர் (Rear defogger)
    • Tata Punch எஸ்யூவியின் எந்த வேரியண்டில் சிறப்பம்சங்கள் அதிகம்?.. இதோ வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

     மேலே பார்த்தவையே அந்தந்த ட்ரம்களில் இடம் பெற இருக்கும் சிறப்பு அம்சங்கள் ஆகும். மேலே பார்த்த அம்சங்களுடன் சேர்த்து ரிதம் (Rhythm), டேஸில் (Dazzle) மற்றும் ஐஆர்ஏ (IRA) கார் இணைப்பு தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் கூடுதல் தேர்வாக வழங்க இருக்கின்றது.

     Tata Punch எஸ்யூவியின் எந்த வேரியண்டில் சிறப்பம்சங்கள் அதிகம்?.. இதோ வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

     ரிதம் பேக்கின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் ப்யூர் ட்ரிம்மில் 4 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்டியரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல்கள் உள்ளிட்டவை வழங்கப்படும். இதேபோல், அட்வென்சருக்கு ரிதம் பேக்கின்கீழ் 7இன்ச் ஹர்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பில் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு, 2 ட்வீட்டர்கள் மற்றும் பின் பக்கத்தில் கேமிரா உள்ளிட்டவை வழங்கப்படும். இவை இரண்டிற்கு மட்டுமே இந்த பேக் பொருந்தும்.

     Tata Punch எஸ்யூவியின் எந்த வேரியண்டில் சிறப்பம்சங்கள் அதிகம்?.. இதோ வேரியண்ட் வாரியான வசதிகள் விபரம்!

     டேஸில் பேக்கானது அக்காம்ப்ளிஷ் ட்ரிம்மிற்கானது. இதன்கீழ் புரஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், 16 இன்சிலான டைமண்ட் அலாய் வீல் மற்றும் ஏ பில்லர் பிளாக் டேப் ஆகியவை வழங்கப்படும். கிரியேட்டீவ் ட்ரிம்மில் ஐஆர்ஏ பேக்கை டாடா வழங்குகின்றது. இதன் வாயிலாக சிறப்பு வசதிகளை செல்போன் செயலி வாயிலாக ஸ்மார்ட் போன்களிலேயே பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Tata punch variant wise features details
Story first published: Tuesday, October 5, 2021, 10:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X