இந்த வீடியோவ பாத்தீங்க Punch கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க! ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கும் ஒற்றை வீடியோ

Tata Punch காரின் பக்கம் மக்களை ஈர்க்கும் வகையில் தயாரிப்பு நிறுவனம் புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த விளம்பர வீடியோவ பாத்தீங்க... Punch கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க... ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கும் ஒற்றை வீடியோ!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்ச் (Punch) எஸ்யூவி ரக காரை இந்தியாவில் நேற்று முன்தினம் (அக்டோபர் 18) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 5.49 லட்சம் என்ற மிகக் குறைவான (பட்ஜெட்) விலையில் இக்கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது. இந்த காருக்கு தற்போது புக்கிங் மிக அமோகமாக கிடைத்து வருவதாக நிறுவனம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த விளம்பர வீடியோவ பாத்தீங்க... Punch கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க... ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கும் ஒற்றை வீடியோ!

ஆனால், எத்தனை யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்துள்ளது என்பது பற்றிய தகவலை டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கவில்லை எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் பஞ்சிற்கான புக்கிங் ஏற்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், பஞ்ச் காரின் பக்கம் கூடுதல் வாடிக்கையாளர்களைக் ஈர்க்கும் பொருட்டு டாடா மோட்டார்ஸ், பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி காருக்கான புதிய விளம்பர வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த விளம்பர வீடியோவ பாத்தீங்க... Punch கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க... ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கும் ஒற்றை வீடியோ!

அந்த வீடியோ, பஞ்ச் காரை கூடுதல் கவர்ச்சியான தயாரிப்பாக காட்டும் வகையில் அமைந்துள்ளது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் ஏற்கனவே கவர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கும் பஞ்ச் காரை இந்த வீடியோ கூடுதலாக மெருகேற்றி காண்பித்திருக்கின்றது என்று கூறலாம்.

இந்த விளம்பர வீடியோவ பாத்தீங்க... Punch கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க... ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கும் ஒற்றை வீடியோ!

எந்த விதமான சாலையையும் சமாளிக்கும் திறனை டாடா பஞ்ச் கொண்டிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தக் கூடிய வீடியோவையே விளம்பர வீடியோவாக தற்போது டாடா வெளியிட்டுள்ளது. கரடு-முரடான பாதை, வளைவுகள் நிறைந்த பாதை, நீர் நிறைந்த சாலை ஆகியவற்றை மிகவும் அசாதரனமாக சமாளிக்கும் வகையில் காட்சிகள் அடங்கி இருக்கின்றன.

இந்த விளம்பர வீடியோவ பாத்தீங்க... Punch கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க... ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கும் ஒற்றை வீடியோ!

புதிய டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி இந்தியாவில் ஏற்கனவே விற்பனைக்குக் கிடைக்கும் மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி ஆகி கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டிருக்கின்றது. இந்திய இளைஞர்களைக் குறி வைத்து இக்கார் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது. இளைஞர்களை குறி வைத்து பஞ்ச் களமிறங்கியிருப்பதால் அவர்களைக் கவரும் வகையில் ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்கள் இதில் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த விளம்பர வீடியோவ பாத்தீங்க... Punch கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க... ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கும் ஒற்றை வீடியோ!

கவர்ச்சிகரமான முகப்பு பகுதி, கட்டுமஸ்தான உடல்வாகு மற்றும் காரை சுற்றிலும் கிளாடிங்குகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதன் முகப்பு பகுதி டிசைன் ஹாரியர் மற்றும் சஃபாரி காரை பிரதிபலிக்கும் வகையில் காட்சியளிக்கின்றது. சாலையில் இக்காரை பார்க்கும்போது குட்டி ஹாரியர் அல்லது சஃபாரி பயணிப்பதைப் போன்ற பிம்பத்தையே இது வழங்குகின்றது.

இந்த விளம்பர வீடியோவ பாத்தீங்க... Punch கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க... ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கும் ஒற்றை வீடியோ!

மைக்ரோ எஸ்யூவி பிரிவில் இந்த கார் விற்பனைக்கு வந்திருந்தாலும் அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் பெரிய உருவம் கொண்டதாக பஞ்ச் காட்சியளிக்கின்றது. உயரம், அகலம் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றில் போட்டியாளர்களைக் காட்டிலும் அதிக அளவைக் கொண்டதாக பஞ்ச் இருக்கின்றது.

இதுமட்டுமின்றி மிக அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காராகவும் பஞ்ச் காட்சியளிக்கின்றது. அண்மையில் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் டாடா பஞ்ச் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பிலேயே இத்தகைய மிக சிறந்த பாதுகாப்பு தர ரேட்டிங்கை அது பெற்றது. சிறுவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு நான்கு நட்சத்திர ரேட்டிங்கை பஞ்ச் பெற்றிருக்கின்றது.

இந்த விளம்பர வீடியோவ பாத்தீங்க... Punch கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க... ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கும் ஒற்றை வீடியோ!

டாடா அல்ட்ராஸ் காரை காட்டிலும் அதிக பாதுகாப்பான கார் என்ற பட்டத்தையும் பஞ்ச் பெற்றிருக்கின்றது. டாடா பஞ்ச் காரில் அதிகளவில் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், இரட்டை ஏர்பேக், ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன், இஎஸ்சி எனப்படும் ஸ்டாண்டர்டு எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பக்கவாட்டு தலை பகுதிக்கு அதிக பாதுகாப்பு, அனைத்து இருக்கைகளிலும் மும்முனை பெல்ட் ஆகியவையும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த விளம்பர வீடியோவ பாத்தீங்க... Punch கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க... ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கும் ஒற்றை வீடியோ!

இத்துடன், கார்னரிங் வசதிக் கொண்ட முன் பக்க பனி மின் விளக்கு, பெரிமெட்ரிக் அலாரம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, டிரைவர் மற்றும் கோ-டிரைவர் இருக்கை பயணிக்கான சீட் பெல்ட் ரிமைண்டர், பிரேக் ஸ்வே கன்ட்ரோல் மற்றும் டயர் பஞ்சர் ரிப்பேர் கிட் உள்ளிட்டவையும் பஞ்ச் காருக்கு டாடா வழங்கியிருக்கின்றது. டாடா பஞ்ச் ஒற்றை பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். 1.2 லிட்டர் 3சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின், இந்த தேர்வு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. இந்த மோட்டார் 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படும்.

Most Read Articles

English summary
Tata reveals new tvc for punch micro suv
Story first published: Wednesday, October 20, 2021, 12:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X