என்ன விலையில் வருமோ எதிர்பார்ப்பை எகிற செய்யும் TataPunch! இதுல இன்னொரு டீசர் வேற! ஆவல் அதிகரிச்சுட்டே இருக்கு

Tata Motors அதன் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் Punch காரின் டீசரை வெளியிட்டுள்ளது. பாதி பாதியாக காட்சியளித்து வந்த நிலையில் பஞ்ச் காரின் அனைத்து பக்க ஸ்டைலையும் தற்போது நிறுவனம் முழுமையாக வெளிக்காட்டியுள்ளது. இதுகுறித்து ஒட்டுமொத்தமாக மூன்று டீசர் வீடியோ மற்றும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் முக்கிய தகவல்களையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

என்ன விலையில் வருமோ எதிர்பார்ப்பை எகிற செய்யும் Tata Punch... இதுல இன்னொரு டீசர் வேற! ஆவல் அதிகரிச்சுட்டே இருக்கு!

இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வரும் கார் மாடலாக Tata நிறுவனத்தின் Punch இருக்கின்றது. இதன் அறிமுகத்தை நோக்கி ஒட்டுமொத்த நாடே காத்துக் கொண்டிருக்கின்றது என்று கூட கூறலாம். அந்தளவிற்கு பலரின் மத்தியில் இக்கார் எதிர்பார்ப்பை பெரியளவில் தூண்டியிருக்கின்றது.

என்ன விலையில் வருமோ எதிர்பார்ப்பை எகிற செய்யும் Tata Punch... இதுல இன்னொரு டீசர் வேற! ஆவல் அதிகரிச்சுட்டே இருக்கு!

மிகவும் அடக்காசமான ஸ்டைல் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், மிக மலிவான விலையில் இந்த கார் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவேதான் இக்காரின் மீதான எதிர்பார்ப்பு செம டாப்பில் இருக்கின்றது.

என்ன விலையில் வருமோ எதிர்பார்ப்பை எகிற செய்யும் Tata Punch... இதுல இன்னொரு டீசர் வேற! ஆவல் அதிகரிச்சுட்டே இருக்கு!

இந்த நிலையில் இக்காரின் மீதிருக்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் காரின் வெளிப்புறம் முழுவதையும் காட்டும் புகைப்படங்களை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கின்றது. அதாவது, இத்தனை நாட்களாக தனது புதுமுக கார் பஞ்ச்-இனை பகுதி பகுதியாக வெளிக்காட்டி வந்தநிலையில் தற்போது முழுமையாக டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியிருக்கின்றது.

என்ன விலையில் வருமோ எதிர்பார்ப்பை எகிற செய்யும் Tata Punch... இதுல இன்னொரு டீசர் வேற! ஆவல் அதிகரிச்சுட்டே இருக்கு!

தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் டாடா பஞ்ச் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தியபோது எப்படி இருந்ததோ அதே தோற்றத்தில் விற்பனைக்கு வரும் மாடலை வடிவமைத்திருக்கிறது டாடா. இதை உறுதி செய்யும் வகையிலேயே தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் இருக்கின்றன. இந்த காரை நாட்டில் முதல் முறையாக எச்2எக்ஸ், பின்னர் எச்பிஎக்ஸ் மற்றும் ஹார்ன்பில் என்ற குறிப் பெயரில் காட்சிப்படுத்தியிருந்தது.

இறுதியாக, தற்போது விற்பனைக்கு வரும் நேரத்தில் இக்காரை பஞ்ச் எனும் பெயரில் அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா பஞ்ச், எச்பிஎக்ஸ் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தியபோது வித்தியாசமான பம்பர்கள் மற்றும் கதவு கிளாடிங்குகள், வழக்கமான டயர்கள், இரட்டை நிறம் ஆகியவற்றுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதே ஸ்டைலை மிக மிக சிறிய மாற்றங்களுடன் பஞ்ச் இல் டாடா பயன்படுத்தியிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் அமைந்துள்ளன. ஸ்போர்ட்டி லுக்கை வழங்கும் வகையில் இரு நிறங்கள், அழகான ஜன்னல்கள், கவர்ச்சிகரமான வீல் உள்ளிட்டவை பஞ்ச் இல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, பின்பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடிகளை இரு நிறத்திலும், இன்டிகேட்டர் வசதியுடன் டாடா வழங்கியிருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஆக மொத்தத்தில் டாடா மோட்டார்ஸ் இந்த குட்டி எஸ்யூவி காரை எவ்வளவு கவர்ச்சியானதாக உருவாக்க முடியுமோ, அவ்வளவு கவர்ச்சியாகவும், ஸ்டைலாகவும் உருவாக்கியிருக்கின்றது என்றே கூறலாம்.

என்ன விலையில் வருமோ எதிர்பார்ப்பை எகிற செய்யும் Tata Punch... இதுல இன்னொரு டீசர் வேற! ஆவல் அதிகரிச்சுட்டே இருக்கு!

இன்னும் இந்த அறிமுகம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. அதேசமயம், டாடா மோட்டார்ஸ் இக்காரை தீபாவளியை முன்னிட்டு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆகையால், டாடா பஞ்ச் அறிமுகம்குறித்த தகவல் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்ன விலையில் வருமோ எதிர்பார்ப்பை எகிற செய்யும் Tata Punch... இதுல இன்னொரு டீசர் வேற! ஆவல் அதிகரிச்சுட்டே இருக்கு!

டாடா மோட்டார்ஸ் பஞ்ச் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் 3 சிலிண்டர் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது நேட்சுரல்லி அஸ்பயர்டு எஞ்ஜின் ஆகும்.

என்ன விலையில் வருமோ எதிர்பார்ப்பை எகிற செய்யும் Tata Punch... இதுல இன்னொரு டீசர் வேற! ஆவல் அதிகரிச்சுட்டே இருக்கு!

இதே எஞ்ஜினைதான் Altroz கார் மாடலிலும் டாடா பயன்படுத்தப்படுகின்றது. இத்துடன், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினும் பஞ்சில் எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனம் இக்காரை ஆல்ஃபா பிளாட்பாரத்தில் வைத்து கட்டமைக்க இருக்கின்றது. இதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே தனது அல்ட்ராஸ் காரை டாடா தயாரித்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Tata reveals punch micro suv design in fully
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X