லிமிடெட் எடிசனில் விற்பனைக்கு வருகிறது டியாகோ... இதன் பக்கம் மக்களை கவர டீசர் வீடியோ வெளியிட்டது டாடா...

டாடா நிறுவனம் லிமிடெட் எடிசனில் டியாகோ காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கார்குறித்து வெளியாகியிருக்கும் டீசர் வீடியோ மற்றும் கார் பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

லிமிடெட் எடிசனில் விற்பனைக்கு வருகிறது டியாகோ... இதன் பக்கம் மக்களை டீசர் வீடியோ வெளியிட்டது டாடா...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான டியாகோ-வில் லிமிடெட் எடிசன் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இக்கார் அறிமுகமாக உள்ள நிலையில் இதற்கான புதிய டீசர் படத்தை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

லிமிடெட் எடிசனில் விற்பனைக்கு வருகிறது டியாகோ... இதன் பக்கம் மக்களை டீசர் வீடியோ வெளியிட்டது டாடா...

டியாகோ டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார்களில் மாடல்கள் ஒன்று மட்டுமல்ல. இக்கார் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றும்கூட. இந்த நிலையிலேயே இக்காரில் சிறப்பு எடிசன் மாடலை நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுகம் நாளை நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

லிமிடெட் எடிசனில் விற்பனைக்கு வருகிறது டியாகோ... இதன் பக்கம் மக்களை டீசர் வீடியோ வெளியிட்டது டாடா...

புதிய டீசர் வீடியோவை நீங்கள் கீழே காணலாம். வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இவ்வீடியோவை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கின்றது. வழக்கமான டியாகோவிற்கும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனைக்கு வரவிருக்கும் டியாகோவிற்கும் இடையே தென்படும் வித்தியாசத்தைக் கணிசமாக வெளிக்கொணரும் வகையில் இவ்வீடியோ அமைந்திருக்கின்றது.

https://www.youtube.com/embed/NXCOSG8Bvu0

அதேசமயம், புதிதாக என்னென்ன அம்சங்கள் இக்காரில் இடம்பெற இருக்கின்றன என்பது பற்றிய தகவல் பெரியளவில் தெரிய வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதே வேலையில் சிறப்பு ஸ்டிக்கர்கள், லோகோக்கள், புதிய நிற தேர்வுகளுடன் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாற்றங்களே இக்காரை லிமிடெட் எடிசன் டியாகோ என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமையும்.

லிமிடெட் எடிசனில் விற்பனைக்கு வருகிறது டியாகோ... இதன் பக்கம் மக்களை டீசர் வீடியோ வெளியிட்டது டாடா...

இந்தியர்களின் மனம் கவரும் வகையில் நாட்டில் புதுமுக கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்தவகையில், அண்மையில் அல்ட்ராஸ் டர்போ காரை அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து சஃபாரி காரையும் வெளியீடு செய்தது. இக்கார் விரைவில் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருக்கின்றது.

லிமிடெட் எடிசனில் விற்பனைக்கு வருகிறது டியாகோ... இதன் பக்கம் மக்களை டீசர் வீடியோ வெளியிட்டது டாடா...

இதுதவிர எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி, அல்ட்ராஸ் இவி மற்றும் டிகோர் இவி-யின் புதுப்பிக்கப்பட்ட மாடல் ஆகியவற்றையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே நாளை டியாகோவின் குறைந்த எண்ணிக்கை எடிசன் காரை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

லிமிடெட் எடிசனில் விற்பனைக்கு வருகிறது டியாகோ... இதன் பக்கம் மக்களை டீசர் வீடியோ வெளியிட்டது டாடா...

டியாகோ காரில் லிமிடெட் எடிசன் மட்டுமில்லைங்க சிஎன்ஜி தேர்வையும் வழங்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா டியாகோ ஓர் ஹேட்ச்பேக் ரக காராகும். இக்கார் இந்தியாவில் ரூ. 4.70 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேசமயம், இதன் அதிகபட்ச விலை ரூ. 6.70 லட்சம் ஆகும்.

லிமிடெட் எடிசனில் விற்பனைக்கு வருகிறது டியாகோ... இதன் பக்கம் மக்களை டீசர் வீடியோ வெளியிட்டது டாடா...

டியாகோவில் பிஎஸ்6 தரத்திலான எஞ்ஜினையே டாடா பயன்படுத்தி வருகின்றது. அந்தவகையில், 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது, அதிகபட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Tata Reveals Teaser Video For Limited Edition Tiago Ahead Of Launch Tomorrow. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X