மழைநீரில் முழ்கிய புத்தம் புதிய டாடா கார்கள்!! எந்த ஊரில் தெரியுமா? வீடியோ!

புதிய டாடா சஃபாரி, அல்ட்ராஸ் கார்கள் கனமழையால் டீலர்ஷிப் வளாகத்திற்குள் நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

மழைநீரில் முழ்கிய புத்தம் புதிய டாடா கார்கள்!! எந்த ஊரில் தெரியுமா? வீடியோ!

நாட்டின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் ஆறு போல் பெருகி ஓடுவதையும் பார்த்து வருகின்றோம்.

மழைநீரில் முழ்கிய புத்தம் புதிய டாடா கார்கள்!! எந்த ஊரில் தெரியுமா? வீடியோ!

இத்தகைய வெள்ளத்தில் சிக்கும் கார்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக மாறிவிடும். அதிலும் சாலையில் அனாதை போல் நிற்க வைக்கப்படும் கார்கள் நீரில் ஒன்றோடு ஒன்று இடித்து கொண்டு மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிடும்.

மழைநீரில் முழ்கிய புத்தம் புதிய டாடா கார்கள்!! எந்த ஊரில் தெரியுமா? வீடியோ!

இதனால் தான் இத்தகைய சூழலை எல்லாம் கருத்தில் கொண்டு வளாகத்திற்குள் குறிப்பிட்ட இடைவெளியுடன் தான் கார்களை டீலர்கள் நிறுத்தி வைப்பர். இருப்பினும் கனமழையில் வாகனங்கள் மூழ்குவதை தடுப்பது பெரும்பாலான டீலர்களால் முடியாத காரியமாக உள்ளது.

மழைநீரில் முழ்கிய புத்தம் புதிய டாடா கார்கள்!! எந்த ஊரில் தெரியுமா? வீடியோ!

அவ்வாறு ஹரியானாவில் டீலர்ஷிப் ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டாடா கார்கள் மழைநீரில் பாதியளவிற்கு மூழ்கியுள்ளன. கீழுள்ள இதுகுறித்த வீடியோவில் ஹரியானாவில் பைபாஸ் சாலை ஒன்றிற்கு அருகில் உள்ள இந்த டீலர்ஷிப் வளாகம் முழுவதையும் மழைநீர் ஆக்கிரமித்துள்ளதை பார்க்க முடிகிறது.

இந்த வீடியோவில் டாடா கார்களாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சஃபாரி மற்றும் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் ஏகப்பட்டவை உள்ளன. வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இவை அனைத்தும் டெலிவிரிக்காக தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழைநீரில் முழ்கிய புத்தம் புதிய டாடா கார்கள்!! எந்த ஊரில் தெரியுமா? வீடியோ!

ஆனால் இவற்றில் மழைநீரால் சிறிது அழுக்கு படிந்திருக்க வாய்ப்புள்ளதால் இவை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படாது. வெள்ளை நிற சஃபாரி & அல்ட்ராஸ் கார்களுடன் சிவப்பு நிறத்தில் டியாகோ ஹேட்ச்பேக் காரையும் இந்த வீடியோவில் பார்க்க முடியாது.

மழைநீரில் முழ்கிய புத்தம் புதிய டாடா கார்கள்!! எந்த ஊரில் தெரியுமா? வீடியோ!

இவை எந்த அளவிற்கு கனமழையால் பாதிப்படைந்துள்ளன என்பது குறித்த விபரங்கள் இல்லை. ஏனெனில் இன்னும் இதுகுறித்த சம்பந்தப்பட்ட டீலர்ஷிப் மையம் ஆய்வை மேற்கொள்ள துவங்கவில்லை. எப்படியிருந்தாலும் என்ஜின் பெரிய அளவில் பாதிப்படைந்திருக்க வாய்ப்பில்லை.

மழைநீரில் முழ்கிய புத்தம் புதிய டாடா கார்கள்!! எந்த ஊரில் தெரியுமா? வீடியோ!

இருப்பினும் கார்களின் உள்ளே நீர் புகுந்திருக்கலாம் என்பதால் கேபினில் அழுக்கு படிந்திருக்க வாய்ப்புண்டு. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பார்க்கும்போது, ஹரியானாவின் இந்த குறிப்பிட்ட பகுதிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New Tata Safari, Altroz Submerged In Water At Stockyard Due To Rain.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X