சஃபாரி எஸ்யூவியில் புதியதாக பெட்ரோல் என்ஜின்? சோதித்து பார்க்கும் டாடா மோட்டார்ஸ்...!

டாடா மோட்டார்ஸில் இருந்து கடைசியாக அறிமுகமான சஃபாரி 7-இருக்கை எஸ்யூவி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி ஆர்வலர்களுக்கும் பிடித்தமான வாகனமாக டாடா சஃபாரி விளங்குகிறது.

சஃபாரி எஸ்யூவியில் புதியதாக பெட்ரோல் என்ஜின்? சோதித்து பார்க்கும் டாடா மோட்டார்ஸ்...!

கொரோனா 2வது அலையால் ஊரடங்கு உத்தரவுகள் கொண்டுவரப்பட்ட போதிலும், கடந்த மே மாதத்தில் 1,536 சஃபாரி கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

சஃபாரி எஸ்யூவியில் புதியதாக பெட்ரோல் என்ஜின்? சோதித்து பார்க்கும் டாடா மோட்டார்ஸ்...!

விற்பனையில் 5-இருக்கை வெர்சனான ஹெரியரையும் இந்த 7-இருக்கை எஸ்யூவி கார் முந்தி இருந்த நிலையில் தற்போது சஃபாரியின் சோதனை மாதிரி ஒன்று புனேவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்கள் பார்க்டு இன் புனே என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

சஃபாரி எஸ்யூவியில் புதியதாக பெட்ரோல் என்ஜின்? சோதித்து பார்க்கும் டாடா மோட்டார்ஸ்...!

ஏற்கனவே விற்பனையில் இருப்பினும், இந்த ஸ்பை படங்களில் சோதனை சஃபாரி கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இருப்பினும் காரின் தோற்றத்தில் மாற்றங்கள் எதுவும் கொண்டுவரப்பட்டது போல் தெரியவில்லை.

சஃபாரி எஸ்யூவியில் புதியதாக பெட்ரோல் என்ஜின்? சோதித்து பார்க்கும் டாடா மோட்டார்ஸ்...!

இதனால் புதிய என்ஜின், டிரான்ஸ்மிஷன் அல்லது 4x4 தேர்விற்காக இந்த சோதனை ஓட்டம் இருக்கலாம். டாடா சஃபாரியில் 4x4 தேர்வு வழங்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி சஃபாரியில் இத்தகைய அனைத்து சக்கர ட்ரைவ் தேர்வு கொண்டுவர சில வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்திருப்பதும் உண்மையே.

சஃபாரி எஸ்யூவியில் புதியதாக பெட்ரோல் என்ஜின்? சோதித்து பார்க்கும் டாடா மோட்டார்ஸ்...!

முன்பு டிஸ்கவரி ஸ்போர்ட் போன்ற லேண்ட் ரோவர் மாடல்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட டி8 கட்டமைப்பில் இருந்து தருவிக்கப்பட்ட ஒமேகார்க் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் சஃபாரி வடிவமைக்கப்படுகிறது.

சஃபாரி எஸ்யூவியில் புதியதாக பெட்ரோல் என்ஜின்? சோதித்து பார்க்கும் டாடா மோட்டார்ஸ்...!

இந்த ப்ளாட்ஃபாரம் அனைத்து-சக்கர ட்ரைவ் தேர்வு மட்டுமின்றி எலக்ட்ரிக் மோட்டாரை வாகனத்தில் பொருத்தவும் அனுமதிக்கவல்லது. அதேநேரம் புதிய பெட்ரோல் என்ஜின் தேர்வை சஃபாரியில் கொண்டுவருவதற்காகவும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த சோதனையை மேற்கொண்டிருக்கலாம்.

சஃபாரி எஸ்யூவியில் புதியதாக பெட்ரோல் என்ஜின்? சோதித்து பார்க்கும் டாடா மோட்டார்ஸ்...!

ஏனெனில் சஃபாரி வரையில் ஹெரியர் வரிசை வாகனங்களுக்கு புதிய பெட்ரோல் என்ஜின் தேர்வை வழங்க டாடா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக முன்னதாக நமது செய்திதளத்தில் கூட தெரிவித்திருந்தோம். ஏனென்றால் விற்பனையில் சஃபாரிக்கு போட்டியாக உள்ள கார்கள் ஏகப்பட்ட என்ஜின் தேர்வுகளை கொண்டுள்ளன.

சஃபாரி எஸ்யூவியில் புதியதாக பெட்ரோல் என்ஜின்? சோதித்து பார்க்கும் டாடா மோட்டார்ஸ்...!

ஹெக்டர் ப்ளஸிற்கு 2.0 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளை எம்ஜி நிறுவனம் வழங்குகிறது. அதேபோல் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹூண்டாய் அல்கஸார் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எனவும், மஹிந்திரா எக்ஸ்யூவி700 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களையும் தேர்வுகளாக பெற்றுவரவுள்ளன.

சஃபாரி எஸ்யூவியில் புதியதாக பெட்ரோல் என்ஜின்? சோதித்து பார்க்கும் டாடா மோட்டார்ஸ்...!

ஆனால் தற்சமயம் சஃபாரிக்கு 2.0 லிட்டர் க்றையோடெக் டீசல் என்ற ஒற்றை என்ஜின் தேர்வை மட்டுமே டாடா மோட்டார்ஸ் வழங்கி வருகிறது. இதனால் பெட்ரோல் என்ஜின் உடன் சஃபாரியின் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றிருக்கலாம். இல்லையென்றால், புதிய விற்பனையாளரின் பாகத்தை சோதிப்பதற்காக இது இருக்கலாம்.

Most Read Articles

English summary
Tata Safari Continues Testing With Camouflage – New Engine, Variant On Cards
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X