வைபை வசதியை புதியதாக பெற்ற டாடா சஃபாரி!! மற்ற புதிய வசதிகள் இவைதான், காரின் விலை அதிகரிக்குமா?

நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் பிரிவில் மிகுந்த ஆதிக்கம் செலுத்திவரும் நிறுவனங்களுள் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. இந்த இந்திய ஆட்டோமொபைல் நிறுவனத்தின் ஹெரியர் & சஃபாரி கார்கள் இந்த பிரிவில் விற்பனை செய்யப்படுகின்றன.

வைபை வசதியை புதியதாக பெற்ற டாடா சஃபாரி!! மற்ற புதிய வசதிகள் இவைதான், காரின் விலை அதிகரிக்குமா?

இவை இரண்டையும் சேர்த்து ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய 5 ஆயிரம் யூனிட்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதற்கு விற்பனையில் போட்டியாக உள்ள எம்ஜி ஹெக்டர் இரட்டை கார்களும், மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி700 மாடலும் மாதத்திற்கு தலா 3,500 யூனிட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

வைபை வசதியை புதியதாக பெற்ற டாடா சஃபாரி!! மற்ற புதிய வசதிகள் இவைதான், காரின் விலை அதிகரிக்குமா?

இந்த நிலையில் தற்போது, மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஹூண்டாய் அல்கஸாரிடம் இருந்து தீவிரமான போட்டி அதிகரித்து வருவதை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் சஃபாரி எஸ்யூவி மாடலுக்கு மென்பொருள் அப்டேட்டினை வழங்கியுள்ளது. இதன்படி சில புதிய வசதிகள் சஃபாரியில் சேர்க்கப்பட்டுள்ளன.

வைபை வசதியை புதியதாக பெற்ற டாடா சஃபாரி!! மற்ற புதிய வசதிகள் இவைதான், காரின் விலை அதிகரிக்குமா?

போட்டி மாடல்களான மஹிந்திரா எக்ஸ்யூவி700, அல்கஸார் மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் உடன் ஒப்பிடுகையில், டாடா சஃபாரியில் தொழிற்நுட்ப வசதிகள் குறைவு தான் என்கிற கருத்து பரவலாகவே உள்ளது. இதனை நிவர்த்தி செய்யவே டாடா நிறுவனம் இந்த நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் டாப் ட்ரிம் நிலைகளில் சில சிக்கலான சவுகரிய வசதிகளை வழங்கியுள்ளது.

வைபை வசதியை புதியதாக பெற்ற டாடா சஃபாரி!! மற்ற புதிய வசதிகள் இவைதான், காரின் விலை அதிகரிக்குமா?

இந்த புதிய வசதிகளில் முக்கியமானது, வயர்லெஸ் சார்ஜிங் ஆகும். ஆதலால் இனி சஃபாரியின் டாப் வேரியண்ட்களில் கேபிள் இல்லாமலேயே ஸ்மார்ட்போன்களை சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். உட்புற மைய கன்சோலில் கியர் மாற்றி பகுதிக்கு அருகே இந்த சார்ஜிங் பேட் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் முக்கியமான மென்பொருள் அப்டேட்டினை பெற்றுள்ளது.

வைபை வசதியை புதியதாக பெற்ற டாடா சஃபாரி!! மற்ற புதிய வசதிகள் இவைதான், காரின் விலை அதிகரிக்குமா?

இதன் காரணமாக சஃபாரியின் இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது தற்போது இணைய இணைப்பு தேர்வாக வயர் இல்லா ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியினை ஏற்றுள்ளது. மேலும், மொபைல் போன் மற்றும் லேப்டாப்களின் இணையத்தினை பயன்படுத்தி கொள்ளும் விதமாக வைபை இணைப்பு வசதியும் சஃபாரியின் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

வைபை வசதியை புதியதாக பெற்ற டாடா சஃபாரி!! மற்ற புதிய வசதிகள் இவைதான், காரின் விலை அதிகரிக்குமா?

இவற்றுடன் தற்போது, சஃபாரியின் டாப் வேரியண்ட்டின் இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது கேபினுக்குள் உள்ள காற்றின் தரத்தினையும் மதிப்பீட்டாக காட்டுகிறது. இதனுடன், காற்று சுத்திகரிப்பானும் இந்த எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ளன. இவை தான் புதியதாக சஃபாரியில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களாகும். இவற்றினால் காரின் விலை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதா என்பது தெரியவில்லை.

வைபை வசதியை புதியதாக பெற்ற டாடா சஃபாரி!! மற்ற புதிய வசதிகள் இவைதான், காரின் விலை அதிகரிக்குமா?

சஃபாரியில் வழங்கப்படும் மற்ற அம்சங்களாவன, ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடிய 8.8 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், 6-வழிகளில் மடக்கக்கூடிய ஓட்டுனர் இருக்கை, பனோராமிக் சன்ரூஃப் மற்றும் டாடா தொழிற்சாலையிலேயே உருவாக்கப்படும் ஐ.ஆர்.ஏ இணைப்பு கார் தொழிற்நுட்பம் என்பவை ஆகும்.

வைபை வசதியை புதியதாக பெற்ற டாடா சஃபாரி!! மற்ற புதிய வசதிகள் இவைதான், காரின் விலை அதிகரிக்குமா?

சஃபாரியின் கேபினில் மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாக, இரட்டை-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், டயரின் அழுத்தத்தை அளவிடும் அமைப்பு மற்றும் மூட் விளக்குகள் உள்ளிட்டவற்றை சொல்லலாம். பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 காற்றுப்பைகள், கேபினுக்குள் குலுக்கலை குறைத்தல், டிராக்‌ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி பிரோகிராம், ஆட்டோ ஹோல்ட் & டிஸ்க் ப்ரேக்குகளுடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

வைபை வசதியை புதியதாக பெற்ற டாடா சஃபாரி!! மற்ற புதிய வசதிகள் இவைதான், காரின் விலை அதிகரிக்குமா?

இவை அனைத்தையும் கொண்டுள்ள சஃபாரியின் கேபின் ஆனது பிரீமியம் தரத்திலான லெதரால் இரட்டை-நிற தீம்-இல் வடிவமைக்கப்படுகிறது. சஃபாரி எஸ்யூவியில் ஃபியாட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் க்றையோடெக் டீசல் என்ஜினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகிறது. அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

வைபை வசதியை புதியதாக பெற்ற டாடா சஃபாரி!! மற்ற புதிய வசதிகள் இவைதான், காரின் விலை அதிகரிக்குமா?

தற்போதைக்கு டீசல் என்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறதே தவிர்த்து, பெட்ரோல் என்ஜின் தேர்வு கொடுக்கப்படுவதில்லை. எதிர்காலத்தில் வழங்கப்படலாம். தற்சமயம் இந்த டாடா எஸ்யூவி கார் எக்ஸ்.இ, எக்ஸ்.எம், எக்ஸ்.டி, எக்ஸ்.டி+, எக்ஸ்.இசட், எக்ஸ்.இசட்+ மற்றும் எக்ஸ்.இசட்+ கோல்டு எடிசன் என மொத்தம் 7 விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

வைபை வசதியை புதியதாக பெற்ற டாடா சஃபாரி!! மற்ற புதிய வசதிகள் இவைதான், காரின் விலை அதிகரிக்குமா?

6-இருக்கை தேர்வு மட்டுமின்றி, 7-இருக்கை தேர்விலும் சஃபாரி கிடைக்கிறது. இதில் 7-இருக்கை தேர்வில் கேப்டன் இருக்கைகள் மத்திய இருக்கை வரிசையில் வழங்கப்படுகின்றன. சஃபாரி எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.14.99 லட்சத்தில் இருந்து ரூ.23.19 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
Tata Safari Gets Software Update - New Features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X