சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!

புத்தம் புதிய சஃபாரியில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்ப அம்சங்களை வெளிக்காட்டும் விதத்தில் புதிய டிவிசி வீடியோவினை டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய சஃபாரி எஸ்யூவி காரை மிக சமீபத்தில் குடியரசு தினத்தில்தான் அதிகாரப்பூர்வமாக இந்திய வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டுவந்தது.

சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!

முதன்முதலாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கிராவிட்டாஸ் என்ற பெயரில் காட்சிப்படுத்த புதிய சஃபாரி இந்தியாவில் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அடுத்த பிப்ரவரி மாத துவக்கத்தில் இருந்து வந்தடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தற்போது 2021 சஃபாரி காரை விளம்பரப்படுத்தும் நோக்கில் புதிய டிவிசி வீடியோவினை டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ சஃபாரியின் வெளிப்பக்கத்தை காட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது.

சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!

அதன்பின் காரின் உட்பக்கம் காட்டப்படுகிறது. தற்சமயம் விற்பனையில் உள்ள 5-இருக்கை ஹெரியரின் 7-இருக்கை வெர்சனாக சஃபாரி வருவது உங்களில் பல பேருக்கு தெரிந்திருக்கும். இதனால் ஹெரியரின் அதே ப்ளாட்ஃபாரம் மற்றும் வீல்பேஸ் அளவுகளில்தான் சஃபாரியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!

2021 சஃபாரியின் முன்பக்கத்தில் இரட்டை செயல்பாட்டு எல்இடி டிஆர்எல்கள், 3-அம்பு டிசைன் கொண்ட க்ரில் அமைப்புடன் வழங்கப்பட்டுள்ளன. செனான் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் பம்பரில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்பிற்கு சரியாக கீழே ஃபாக் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!

எஸ்யூவி காரின் தோற்றத்திற்காக முன்பக்க அடிப்பகுதியில் சறுக்கு தட்டு வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் 18 இன்ச்சில் இரட்டை-நிற அலாய் சக்கரங்கள், வித்தியாசமான தோற்றத்தில் மேற்கூரை தண்டவாளங்கள், எல்இடி டெயில்லேம்ப் போன்றவற்றையும் சஃபாரியின் வெளிப்புறத்தில் பார்க்க முடிகிறது.

சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!

பின்பக்க பம்பர் ஆனது ஹெரியரில் இருந்து முற்றிலும் வேறுப்பட்டு சஃபாரியில் காட்சி தருகிறது. அதிலும் பம்பருக்கு அடியில் வழங்கப்பட்டுள்ள சில்வர் நிற க்ளாடிங், இரட்டை எக்ஸாஸ்ட் போன்று நமக்கு தோன்ற வைக்கிறது. உட்புறம் சிப்பியின் வெள்ளை நிறத்தில் ஆஷ்வுட் நிறத்திலான டேஸ்போர்டை கொண்டுள்ளது.

சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!

சஃபாரியின் உட்புற கேபின் 8.8 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பல செயல்பாடுகளை வழங்கக்கூடிய ஸ்டேரிங் சக்கரம், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கையுடன் ப்ரீமியம் கார்களுக்கு இணையான தரத்தில் மிகவும் விசாலமாக இந்த டிவிசி வீடியோவில் காட்சியளிக்கிறது.

சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!

புதிய டாடா சஃபாரி 6-இருக்கை மற்றும் 7-இருக்கை என்ற இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கவுள்ளது. இந்த எஸ்யூவி காரில் ஹெரியரில் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு க்றையோடெக் டீசல் என்ஜின் தான் வழங்கப்படவுள்ளது.

சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!

அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை இந்த டீசல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஹெரியரில் இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
tata safari new tvc released
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X