சஃபாரியை தொடர்ந்து சஃபாரி ஸ்ட்ரோம் காரையும் மீண்டும் கொண்டுவருகிறதா டாடா? பொது சாலையில் சோதனை...

இராணுவ பயன்பாட்டிற்காக மட்டுமே தற்போதைக்கு வழங்கப்படும் டாடா சஃபாரி ஸ்ட்ரோம் சமீபத்தில் சாலை சோதனையின் போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சஃபாரியை தொடர்ந்து சஃபாரி ஸ்ட்ரோம் காரையும் மீண்டும் கொண்டுவருகிறதா டாடா? பொது சாலையில் சோதனை...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு காலத்தில் இந்திய சந்தையில் பிரபலமாக இருந்த சஃபாரி பெயர்பலகையை மீண்டும் ஹெரியரின் 7-இருக்கை வெர்சனாக கொண்டுவருகிறது.

சஃபாரியை தொடர்ந்து சஃபாரி ஸ்ட்ரோம் காரையும் மீண்டும் கொண்டுவருகிறதா டாடா? பொது சாலையில் சோதனை...

2021 சஃபாரியின் அறிமுகம் வருகிற பிப்ரவரி 22ஆம் தேதியில் திட்டமிடப்பட்டுள்ளது. 1998ல் முதன்முதலாக இந்தியாவில் அறிமுகமான சஃபாரி என்ற பெயர் அதன்பின் இந்திய எஸ்யூவி பிரியர்களால் தூக்கிவைத்து கொண்டாடப்பட்டது.

சஃபாரியை தொடர்ந்து சஃபாரி ஸ்ட்ரோம் காரையும் மீண்டும் கொண்டுவருகிறதா டாடா? பொது சாலையில் சோதனை...

2019 வரையில் விற்பனையில் இருந்த சஃபாரியை புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்டேட் செய்ததால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுத்தியது. சஃபாரியின் ஸ்ட்ரோம் வெர்சனும் அப்போதே நிறுத்தி கொள்ளப்பட்டது.

சஃபாரியை தொடர்ந்து சஃபாரி ஸ்ட்ரோம் காரையும் மீண்டும் கொண்டுவருகிறதா டாடா? பொது சாலையில் சோதனை...

இந்த நிலையில் டாடா சஃபாரி ஸ்ட்ரோம் கார் ஒன்று உத்திரபிரதேசத்தில் சாலையில் இயக்கத்தின்போது இந்தியன் ஆட்டோ செய்திதளத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ள இடத்திற்கு அருகில் டெல்கோ (டாடா பொறியியல் மற்றும் லோகோமோட்டிவ் நிறுவனம்) உள்ளது.

சஃபாரியை தொடர்ந்து சஃபாரி ஸ்ட்ரோம் காரையும் மீண்டும் கொண்டுவருகிறதா டாடா? பொது சாலையில் சோதனை...

இந்த நிறுவனத்தில் இருந்துதான் டாடாவின் பல்வேறு விதமான கார்களுக்கு பாகங்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய நிறுவனத்திற்கு அருகில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் சஃபாரி ஸ்ட்ரோமில் பொருத்தப்பட்டுள்ள பாகங்களின் தரத்தை சோதிப்பதற்காக இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றிருக்கலாம்.

சஃபாரியை தொடர்ந்து சஃபாரி ஸ்ட்ரோம் காரையும் மீண்டும் கொண்டுவருகிறதா டாடா? பொது சாலையில் சோதனை...

ஏனெனில் இந்திய இராணுவத்திற்கு ஜிஎஸ்800 சஃபாரி ஸ்ட்ரோம் வாகனம் இப்போதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் புதிய தலைமுறைக்காக இந்த சோதனை ஓட்டம் இருக்கலாம். இதனால் சஃபாரி ஸ்ட்ரோம் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளதா என்பதற்கான பதிலை இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது.

சஃபாரியை தொடர்ந்து சஃபாரி ஸ்ட்ரோம் காரையும் மீண்டும் கொண்டுவருகிறதா டாடா? பொது சாலையில் சோதனை...

சஃபாரியை பொறுத்தவரையில், லேண்ட் ரோவரின் ஒமேகா கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 7-இருக்கை எஸ்யூவி வாகனத்தில் ஹெரியரில் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் தான் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்பட உள்ளது.

Most Read Articles

English summary
Tata Safari Storme Recently Spotted On Test, What's Happening?.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X