டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! அதிகாரப்பூர்வ படம் வெளியீடு!

மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் டாடா பஞ்ச் தற்சமயம் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைந்து கொண்டிருக்கிறது. டாடா மோட்டார்ஸின் இந்த புதிய மைக்ரோ-எஸ்யூவி காரின் அறிமுகம் இன்னும் சில தினங்களில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! அதிகாரப்பூர்வ படம் வெளியீடு!

இந்த நிலையில் தற்போது டாடா பஞ்ச் காரின் உட்புறம் அதிகாரப்பூர்வமாக படம் ஒன்றின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் காரின் உட்புற டேஸ்போர்டை தெளிவாக பார்க்க முடிகிறது. இந்த குறிப்பிட்ட படத்தில் ஏஎம்டி கியர் லிவர் உள்ளதால், இது டாடா பஞ்ச் ஏஎம்டி காரின் உட்புற கேபினாக இருக்க வேண்டும்.

டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! அதிகாரப்பூர்வ படம் வெளியீடு!

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட எச்2எக்ஸ் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பஞ்ச் மைக்ரோ எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பு வரையில், டாடா எச்பிஎக்ஸ் மற்றும் ஹார்ன்பில் என்கிற பெயர்களில் இந்த எஸ்யூவி கார் அழைக்கப்பட்டு வந்தது.

டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! அதிகாரப்பூர்வ படம் வெளியீடு!

தோற்றத்தை பொறுத்தவரையில், எச்2எக்ஸ் கான்செப்ட்டின் அதே டிசைன் மொழியினை தான் பஞ்ச் காரும் பெற்றுள்ளது. இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியினை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டதால், மற்ற டாடா கார்களுடன் ஒப்பிடுகையில் பஞ்ச் மாடல் ஸ்போர்டியான தோற்றத்தில், மிகவும் முரட்டுத்தனமானதாக காட்சியளிக்கிறது.

டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! அதிகாரப்பூர்வ படம் வெளியீடு!

இதே டிசைன் மொழியில் தான் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி கார் வடிவமைக்கப்பட்டாலும், பஞ்ச் முற்றிலும் புதிய ப்ளாட்ஃபாரத்தில் (ALFA-ARC) தயாரிக்கப்பட்டுள்ளது. ஆல்ஃபா-ஆர்க் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்ட முதல் டாடா எஸ்யூவி காராக பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி விளங்குகிறது.

டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! அதிகாரப்பூர்வ படம் வெளியீடு!

இந்த ப்ளாட்ஃபாரம் எடை குறைவான, அதிநவீன கட்டமைப்பிற்கு வழிவகுக்கிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு டாடா நிறுவனம் பஞ்ச் காரில் ஒரே ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வை மட்டுமே வழங்க வாய்ப்புள்ளது. இந்த வகையில் டிகோர், டியாகோ மற்றும் அல்ட்ராஸில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! அதிகாரப்பூர்வ படம் வெளியீடு!

இந்த 3-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜின் அதிகப்பட்சமாக 86 எச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளன. இவற்றுடன் டர்போ வேரியண்ட் உடனும் டாடா பஞ்ச் கொண்டுவரப்பட உள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! அதிகாரப்பூர்வ படம் வெளியீடு!

அத்துடன் எதிர்காலத்தில் இந்த மைக்ரோ-எஸ்யூவி மாடலில் சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் தேர்வும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாம். ஆனால் டீசல் என்ஜின் தேர்வு தற்போதைய சந்தை நிலவரத்தை பொறுத்து சில வருடங்களுக்கு பிறகு வழங்கப்படலாமே தவிர்த்து, அறிமுகத்தின்போது வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு.

டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! அதிகாரப்பூர்வ படம் வெளியீடு!

மற்ற புதிய தலைமுறை டாடா கார்களை போன்று பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியையும் தொழிற்நுட்பங்கள் நிறைந்ததாகவே தயாரிப்பு நிறுவனம் கொண்டுவரவுள்ளது. இதன்படி, பஞ்ச் மாடலின் டாப் ட்ரிம் நிலைகளில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உடன் ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவையை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! அதிகாரப்பூர்வ படம் வெளியீடு!

அதேபோல் என்ஜினை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்வதற்கு பொத்தான், க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கும் பாட்டில்களை வைப்பதற்கான ஹோல்டர் உடன் ஆர்ம்ரெஸ்ட், பயணிகளின் பாதுகாப்பிற்கு இபிடி உடன் ஏபிஎஸ், ரிவர்ஸில் செல்வதற்கு உதவியாக கேமிரா மற்றும் இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் போன்றவையும் டாடா பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ளன.

டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! அதிகாரப்பூர்வ படம் வெளியீடு!

பஞ்ச் எஸ்யூவி காரின் அறிமுக தேதி இதுவரையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. நமக்கு தெரிந்தவரையில் தீபாவளி உள்ளிட்ட பண்டிக்கை காலத்தை முன்னிட்டு அடுத்த அக்டோபர் மாதத்தில் இருக்கலாம். மேலும் அப்போதுதான் இந்த டாடா காருக்கான முன்பதிவுகளும் துவங்கப்படும் என தெரிகிறது.

டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! அதிகாரப்பூர்வ படம் வெளியீடு!

இருப்பினும் சில டாடா டீலர்ஷிப் ஷோரூம்களில் பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ரூ.21,000 என்கிற டோக்கன் தொகை உடன் நடைபெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸின் இந்த மைக்ரோ-எஸ்யூவி காருக்கு மாருதி சுஸுகி இக்னிஸ், மஹிந்திரா கேயூவி100 உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! அதிகாரப்பூர்வ படம் வெளியீடு!

இந்த லிஸ்ட்டில் விரைவில் சிட்ரோன் சி3 காரும் இணையவுள்ளது. அதேநேரம் விலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், மாருதி பலேனோ, ரெனால்ட் கிகர் மற்றும் நிஸான் மேக்னைட் போன்றவற்றிற்கும் டாடா பஞ்ச் போட்டியாக விளங்கவுள்ளது. டாடா பஞ்ச் காரின் ஆரம்ப விலையினை ரூ.5 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
tata punch interior revealed.
Story first published: Wednesday, September 22, 2021, 15:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X