விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய டாடா ஸ்டார்பஸ்... ரொம்ப வெற்றிகரமான வர்த்தக வாகனம்!

டாடா ஸ்டார்பஸ் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய டாடா ஸ்டார்பஸ்... ரொம்ப வெற்றிகரமான வர்த்தக வாகனம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. டாடா ஸ்டார்பஸ் வாகனத்தின் விற்பனை 1 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்திருப்பதுதான் அந்த புதிய மைல்கல். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்பஸ் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான வாகனமாக திகழ்ந்து வருகிறது.

அலுவலக பணியாளர்களை அழைத்து செல்லவும், பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லவும் டாடா ஸ்டார்பஸ் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய நிலையில் டாடா ஸ்டார்பஸ் வாகனமானது, 16-24 சீட்டர், 34-40 சீட்டர் மற்றும் 24-50 சீட்டர் வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதே நேரத்தில் டாடா ஸ்டார்பஸ் ஸ்கூல் மாடலானது, 20-38 சீட்டர் மற்றும் 46-60 சீட்டர் மாடல்களில் கிடைத்து வருகிறது.

அத்துடன் டாடா ஸ்டார்பஸ்ஸில் எலெக்ட்ரிக் மாடலும் கிடைக்கிறது. நகர பகுதிகளில் போக்குவரத்திற்கு டாடா ஸ்டார்பஸ் எலெக்ட்ரிக் மாடல் பயன்படுத்தப்படுகிறது. மும்பையில் பெஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் டாடா ஸ்டார்பஸ் எலெக்ட்ரிக் மாடல்களை பயன்படுத்தி வருகின்றன. டாடா ஸ்டார்பஸ் எலெக்ட்ரிக் மாடல்கள் 9/9 மீட்டர், 9/12 மீட்டர் மற்றும் 4/12 மீட்டர்களில் கிடைக்கின்றன.

கர்நாடக மாநிலத்தின் டர்வாத் பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்பஸ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் டாடா ஸ்டார்பஸ் வாகனம் 1 லட்சம் என்ற புதிய விற்பனை மைல்கல்லை கடந்திருப்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம். இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பஸ் மாடல்களில் ஒன்றாக டாடா ஸ்டார்பஸ் உருவெடுத்துள்ளது.

டாடா ஸ்டார்பஸ் பல்வேறு மாடல்களில் கிடைத்து வருவதால், ஒவ்வொரு வாடிக்கையாளர்கள்களும் தங்களது தேவைக்கு ஏற்ற மாடலை தேர்வு செய்ய முடிகிறது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி மும்பை மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் டாடா ஸ்டார்பஸ் எலெக்ட்ரிக் மாடல்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

டாடா ஸ்டார்பஸ் வாகனத்தை பராமரிப்பதற்கு மிகவும் குறைவாகவே செலவாகும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உரிமையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் லாபம் கிடைக்கிறது. டாடா ஸ்டார்பஸ் வாகனத்தின் வெற்றிக்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அத்துடன் டாடா ஸ்டார்பஸ் வாகனத்தில் சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணம் கிடைப்பதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாதுகாப்பான வாகனங்களை தயாரிப்பதற்கு பெயர் பெற்றது. வர்த்தக வாகனங்களில் மட்டுமல்லாது பயணிகள் வாகனங்களிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாதுகாப்பிற்கு பெயர் பெற்று விளங்குகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களான நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் பன்ச் ஆகிய கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன. இதில், டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவி ரக கார் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata starbus achieves 1 lakh sales milestone
Story first published: Thursday, December 16, 2021, 23:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X