புதிய டாடா டியாகோ எக்ஸ்டி(O) கார் இழந்துள்ள வசதிகள் என்னென்ன? விவரிக்கும் வீடியோ!!

மிக சமீபத்தில் அறிமுகமான டாடா டியாகோ எக்ஸ்டி(ஒ) காரை விவரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய டாடா டியாகோ எக்ஸ்டி(O) கார் இழந்துள்ள வசதிகள் என்னென்ன? விவரிக்கும் வீடியோ!!

டாடா டியாகோவின் வேரியண்ட்கள் வரிசையில் விலை குறைவான எக்ஸ்.இ வேரியண்ட்டிற்கு அடுத்ததாக நிறுத்தப்பட்டுள்ள இந்த புதிய வேரியண்ட்டின் விலை ரூ.5.43 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய டாடா டியாகோ எக்ஸ்டி(O) கார் இழந்துள்ள வசதிகள் என்னென்ன? விவரிக்கும் வீடியோ!!

டியாகோவின் வழக்கமான எக்ஸ்டி வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில் இந்த விலை கிட்டத்தட்ட ரூ.15,000 குறைவாகும். பொதுவாக (ஒ) என முடியும் வேரியண்ட்களில் தான் சற்று அதிகமான அம்சங்களை வழங்குவார்கள்.

புதிய டாடா டியாகோ எக்ஸ்டி(O) கார் இழந்துள்ள வசதிகள் என்னென்ன? விவரிக்கும் வீடியோ!!

ஆனால் எக்ஸ்டி வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில் இந்த புதிய வேரியண்ட் சில வசதிகளை இழந்துள்ளது. அவை என்னென்ன என்பதை விளக்கும் வீடியோ ஆட்டோ ட்ரெண்ட் டிவி என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே காணலாம்.

Image Courtesy: AutoTrend TV

புதிய எக்ஸ்டி(ஒ) வேரியண்ட் இழந்துள்ள அம்சங்களில் முக்கியமானதாக இருப்பது 2-டின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம். இதனால் அந்த பகுதி வெற்றிடமாகி உள்ளது. ஆனால் இந்த காரின் டேஸ்போர்டு மற்றும் ஸ்டேரிங் சக்கரமும் பியானோ கருப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

புதிய டாடா டியாகோ எக்ஸ்டி(O) கார் இழந்துள்ள வசதிகள் என்னென்ன? விவரிக்கும் வீடியோ!!

இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இல்லையே என்ற கவலை வேண்டாம். டாடா டியாகோ, டிகோர் கார்களில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் அல்லது ப்ளாப்புண்ட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடனும் டியாகோ எக்ஸ்டி(ஒ) வேரியண்ட்டை வாங்கலாம்.

புதிய டாடா டியாகோ எக்ஸ்டி(O) கார் இழந்துள்ள வசதிகள் என்னென்ன? விவரிக்கும் வீடியோ!!

இதில் முதல் சிஸ்டம் இந்த ஜூலை மாதம் முதல் டாடா டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கவுள்ளது. இரண்டாவது இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ரூ.24,000 என்ற விலையில் சில டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கிறது.

புதிய டாடா டியாகோ எக்ஸ்டி(O) கார் இழந்துள்ள வசதிகள் என்னென்ன? விவரிக்கும் வீடியோ!!

அதேபோல் 4-ஸ்பீக்கர்கள், ஸ்டேரிங் சக்கரத்தில் ஆடியோ & மொபைல் போன் கண்ட்ரோல்கள் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி வெளிப்பக்கத்தில் இறக்கை போல் இருக்கும் கண்ணாடிகளை சரிசெய்ய எலக்ட்ரிக் வசதி மற்றும் சுற்றிலும் பவர் ஜன்னல்களையும் இந்த புதிய வேரியண்ட்டில் டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.

புதிய டாடா டியாகோ எக்ஸ்டி(O) கார் இழந்துள்ள வசதிகள் என்னென்ன? விவரிக்கும் வீடியோ!!

இவற்றுடன் 14 இன்ச்சில் முழு சக்கர கவர்கள், ஃபாலோ மீ ஹெட்லேம்ப்கள், பகல்& இரவு ரியர்வியூ கண்ணாடி, சாவியில்லா நுழைவு, காரின் நிறத்தில் கைப்பிடிகள், வேகத்தை பொறுத்த கதவு பூட்டுகள் மற்றும் பல-தகவல் திரை போன்றவையும் எக்ஸ்டி(ஒ) வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டாடா டியாகோ எக்ஸ்டி(O) கார் இழந்துள்ள வசதிகள் என்னென்ன? விவரிக்கும் வீடியோ!!

என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தான் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் எக்ஸ்டி(ஒ) வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்டி வேரியண்ட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால், எக்ஸ்டி(ஒ) வேரியண்ட்டை புதியதாக டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Most Read Articles

English summary
Just-launched Tata Tiago XTO in a walkaround video.
Story first published: Thursday, July 1, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X