மாருதியின் பாணியை கையில் எடுக்கும் டாடா மோட்டார்ஸ்!! டியாகோவில் பிஎஸ்6 சிஎன்ஜி என்ஜின்

டாடாவின் டியாகோ சிஎன்ஜி கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் மைலேஜ், விலை எந்த அளவில் நிர்ணயிக்கப்படலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதியின் பாணியை கையில் எடுக்கும் டாடா மோட்டார்ஸ்!! டியாகோவில் பிஎஸ்6 சிஎன்ஜி என்ஜின்

டாடா மோட்டார்ஸின் விலை குறைவான கார்களுள் ஒன்றாக டியாகோ ஹேட்ச்பேக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 உமிழ்வு விதிமுறைகளினால் பல கார் மாடல்கள் டீசல் என்ஜின் தேர்வை இழந்துள்ளன.

மாருதியின் பாணியை கையில் எடுக்கும் டாடா மோட்டார்ஸ்!! டியாகோவில் பிஎஸ்6 சிஎன்ஜி என்ஜின்

அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் டியாகோவில் வழங்கிவந்த 1.05 லிட்டர் ரெவோடார்க் 3-சிலிண்டர் டீசல் என்ஜின் தேர்வை நீக்கியது. 2016ல் டாடா டியாகோ அறிமுகப்பட்டதில் இருந்து வழங்கப்பட்டு வந்த இந்த டீசல் என்ஜின் டிகோர் காம்பெக்ட் எஸ்யூவி காரிலும் வழங்கப்பட்டு வந்தது.

மாருதியின் பாணியை கையில் எடுக்கும் டாடா மோட்டார்ஸ்!! டியாகோவில் பிஎஸ்6 சிஎன்ஜி என்ஜின்

அதிகப்பட்சமாக 4000 ஆர்பிஎம்-ல் 70 பிஎஸ் மற்றும் 1,800- 3,000 ஆர்பிஎம்-ல் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக வழங்கப்பட்ட வந்த இந்த டீசல் என்ஜினின் விற்பனை நிறுத்தத்திற்கு மேற்கூறப்பட்ட டாடா கார்களில் வழங்கப்பட்டுவரும் பெட்ரோல் என்ஜினுக்கு வரவேற்பு அதிகளவில் கிடைத்ததும் மற்றொரு காரணமாகும்.

மாருதியின் பாணியை கையில் எடுக்கும் டாடா மோட்டார்ஸ்!! டியாகோவில் பிஎஸ்6 சிஎன்ஜி என்ஜின்

இதே மாதிரியான முறையை மாருதி சுஸுகி நிறுவனமும் கடைப்பிடித்து வருகிறது. அதேநேரம் டீசல் என்ஜினிற்கு மாற்றாக தனது கார்களில் சிஎன்ஜி என்ஜினை வழங்க மாருதி தயாராகிவரும் நிலையில் டாடா டியாகோ கார் சிஎன்ஜி என்ஜின் உடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

மாருதியின் பாணியை கையில் எடுக்கும் டாடா மோட்டார்ஸ்!! டியாகோவில் பிஎஸ்6 சிஎன்ஜி என்ஜின்

இதில் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் மாருதியின் பாணியை கையில் எடுத்திருப்பது தெரிய வருகிறது. டியாகோ சிஎன்ஜி காரின் இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் காடிவாடி செய்திதளம் மூலம் நமக்கு கிடைத்துள்ளன. மேலும் இந்த சோதனை கார் டியாகோவின் எக்ஸ்இசட் வேரியண்ட்டாகும்.

மாருதியின் பாணியை கையில் எடுக்கும் டாடா மோட்டார்ஸ்!! டியாகோவில் பிஎஸ்6 சிஎன்ஜி என்ஜின்

டாடா டியாகோ தற்சமயம் எக்ஸ்இ, எக்ஸ்டி, எக்ஸ்இசட், எக்ஸ்இசட்+ மற்றும் எக்ஸ்இசட்ஏ (ஏஎம்டி) என்ற 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.4.70 லட்சத்தில் இருந்து ரூ.6.74 லட்சம் வரையில் உள்ளன.

மாருதியின் பாணியை கையில் எடுக்கும் டாடா மோட்டார்ஸ்!! டியாகோவில் பிஎஸ்6 சிஎன்ஜி என்ஜின்

இவை அனைத்திலும் தற்போதைக்கு ஒரே ஒரு 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்தான் மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படுகின்றன. இதில் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் லிட்டருக்கு 19.8கிமீ மைலேஜையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் 23.84கிமீ மைலேஜையும் டியாகோ வழங்குகிறது.

மாருதியின் பாணியை கையில் எடுக்கும் டாடா மோட்டார்ஸ்!! டியாகோவில் பிஎஸ்6 சிஎன்ஜி என்ஜின்

புதிய சிஎன்ஜி என்ஜின் அமைப்பில் ஏறக்குறைய 30kmph மைலேஜை இந்த டாடா கார் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கார் இயங்கும் ஆற்றலின் அளவு குறையும். அதேநேரம் விலையும் சற்று அதிகரிக்கப்படும்.

Most Read Articles

English summary
Tata Tiago CNG Spied On Test, Launch Expected Soon
Story first published: Friday, January 8, 2021, 18:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X